கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய அற்புதமான தருணங்கள். பெண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும் அது அத்தனையையும் தனக்கத்தே வைத்துக்கொண்டு வெளியில் புன்முறுவல் செய்பவள் தான் பெண். கர்ப்பம் தரித்த நாள் முதல் குழந்தைப் பிறக்கும் வரை மருத்துவ சோதனையில் இருக்கும் கர்ப்பிணிகள் கால்சியம் மற்றும் துத்த நாக சத்துக்களைப் பராமரிப்பதில் கவனமுடன் இருக்க வேண்டும். இவை இரண்டும் தான் குழந்தைப் பிறப்பிற்கு பிரதான உதவியாக உள்ளது.
இந்த காரணத்தில் தான் கருவுற்றவுடன் மருத்துவர்கள் கால்சியம் மற்றும் ஜிங்க் மாத்திரைகளை சாப்பிடுவதற்குப் பரிந்துரை செய்வார்கள். இன்றைக்கு துத்தநாக சத்துக்கள் குறைபாட்டால் என்னென்ன பாதிப்புகளைக் கர்ப்பிணிகள் சந்திப்பார்கள்? சரியாக என்ன செய்ய வேணடும்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்..
கர்ப்ப காலத்தில் துத்தநாக சத்து மிகவும் அவசியமானது. தாய் எந்தளவிற்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்கிறாரோ? அது தான் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கும். ஒருவேளை ஜிங்க் என்படும் துத்தநாக குறைபாடு ஏற்பட்டால், கர்ப்ப காலத்தில் பல பிரச்சனைகளை அவர்கள் சந்திக்க நேரிடும்.
மேலும் படிங்க: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் டாப் 5 உணவுகள்!
தாய் மற்றும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதிப்படைய செய்வதோடு பல நேரங்களில் குறைபிரசவத்திற்கும் வழிவகுக்கும். மேலும் எடை குறைவாக குழந்தைகள் பிறப்பு, வளர்ச்சியின்மை போன்ற பல்வேறு பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு துத்தநாக சத்துகளின் அளவு என்பது அவர்களின் வயதைப் பொறுத்து மாறுபடும். குறிப்பாக 19 வயது அல்லத அதற்கு மேற்பட்ட வயதுடைய கர்ப்பிணிகளுக்கு 11 மில்லி கிராம் இருக்க வேண்டும். அதே போன்று 19 வயது அல்லது அதற்கு மேற்பட்ட தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு 12 மில்லிகிராம் அளவும், 18 வயதுடைய பெண்களுக்கு 12 மில்லி கிராம் வரை துத்தநாகத்தின் அளவுகள் இருக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சுவை மற்றும் வாசனை உணர்வு குறைதல், பசியின்மை, ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் ஏற்படுதல், கருவின் வளர்ச்சி குறைபாடு போன்ற பாதிப்புகள் ஜிங்க் குறைபாட்டால் ஏற்படக்கூடும்.
ஒவ்வொரு கர்ப்பிணிகளுக்கும் துத்தநாக சத்துக்கள் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. கருப்பையில் தொற்று ஏற்படாமலும், ஹார்மோன் சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கு செல் வளர்ச்சியை அதிகரிக்கிறது. டிஎன்ஏ உற்பத்தி மற்றும் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது.
மேலும் படிங்க: ஜிம் வேணாம்.. குளிர்காலத்தில் எடையைக்குறைக்க இந்த சமையல் பொருள்கள் போதும்!..
இதனால் தான் மருத்துவர்கள் தரக்கூடிய ஜிங்க் மாத்திரைகளோடு உங்களது உணவு முறையிலும் துத்தநாக சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]