herzindagi
increase breast milk

தாய்ப்பால் அதிகரிக்க இந்த வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றுங்க!

<span style="text-align: justify;">தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளின் வளர்ச்சிக்கும், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவியாக உள்ளது.</span>
Editorial
Updated:- 2024-03-23, 23:21 IST

குழந்தைப் பிறப்பு என்பது ஒவ்வொரு பெண்களும் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய உன்னத தருணமாகும். 9 மாதம் கருவில் சுமந்து பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு பிறந்த முதல் நாளிலிருந்தே ஊட்டச்சத்துள்ள உணவுகள் கொடுப்பது என்பது அவர்களின் தலையாய கடைமைகளில் ஒன்றாக உள்ளது. அதிலும் குழந்தைப் பிறந்து 6 மாதங்களுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் எனவும் இது தான் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவியாக உள்ளது என மருந்துவர்கள் அறிவுறுத்துவார்கள். ஆனால் சில பெண்களுக்கு தாய்ப்பால் அதிகளவில் சுரப்பதில்லை. இதனால் குழந்தைகளுக்கு பால் பவுடர்  அல்லது மாட்டுப் பால் குடித்து வளர்க்கும் சூழல் ஏற்படும்.

தாய்ப்பாலை தவிர மற்ற பாலைக் கொடுக்கும் போது குழந்தைகள் புஷ்டியாக வளரலாம். அதே சமயம் அவர்களுக்கான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறதா? என்பது கேள்விக்குறி தான். தாய்ப்பாலை சுரப்பதற்கு சில மருந்துவ முறைகளைப் பின்பற்றினாலும், வீட்டிலேயே சில எளிய வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தி பெண்களின் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்ய முயற்சி செய்யுங்கள். இதோ என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

child care tips to parents ()

 மேலும் படிக்க: உங்களது குழந்தைகளுக்குக் கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண்டிய சாலை பாதுகாப்பு விதிகள் இது தான்!

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்ய வேண்டியது?

  • பெண்களுக்கு தாய்ப்பாலை அதிகரிக்க வெந்தயம் உங்களுக்கு சிறந்த தேர்வாக அமையும். வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்த பின்னர், காலையில் அந்த தண்ணீரைக் குடிக்க வேண்டும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் இன்சுலின் மற்றும் ஆக்ஸிடாஸின் சுரப்பை மேம்படுத்தி பால் சுரப்பை அதிகரிக்க உதவியாக உள்ளது.
  • தாய்ப்பாலை சுரப்பதற்கு பெண்கள் தங்களது உணவில் பூண்டு மற்றும் வெங்காயத்தைத் தினமும் சாப்பிட வேண்டும். குழம்புகா வைத்து சாப்பிட பிடிக்கவில்லையென்றாலும் வெங்காயம் , பூண்டு மற்றும் தக்காளியை மட்டும் நன்கு வதக்கி கூட்டாக வைத்து சாப்பிடலாம். இதில் உள்ள லாக்டோஜெனிக் பண்புகள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. எனவே குழந்தைப் பிறந்தவுடன் தினடும் பூண்டு கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • வாரத்திற்கு ஒருமுறையாவது பெண்கள் கட்டாயம் பால் நெத்திலி போன்ற மீன்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கும்.
  • பயறு வகைகள், ஊட்டச்சத்துள்ள காய்கறிகள் போன்றவற்றையும் உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சீரகம், பெருஞ்சீரகம், மிளகு போன்றவற்றையும் கட்டாயம் சாப்பிட வேண்டும்.

 மேலும் படிக்க: எப்ப பார்த்தாலும் தூங்கிட்டு இருக்கனும்னு தோணுதா? சுறுசுறுப்பாக இதை செய்யுங்க!

 ways to increase breast milk ()

இதுபோன்ற உணவு முறைகளை பெண்கள் தங்களது வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதோடு மட்டுமின்றி பால் சுரப்பு குறைவாக இருந்தாலும் கட்டாயம் உங்களது குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் தாய்ப்பால் கொடுக்கும் போது தான் மார்பகங்களில் பால் சுரப்பு அதிகமாக இருக்கும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

 Image source- google

 

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]