herzindagi
road safety tips to children

உங்களது குழந்தைகளுக்குக் கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண்டிய சாலை பாதுகாப்பு விதிகள் இது தான்!

<span style="text-align: justify;">சாலைகளில் எப்போது நடந்து சென்றாலும் இடது புறம் செல்ல வேண்டும் என்றும்&nbsp; நடைபாதைகளைப் பயன்படுத்தி நடக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும்.</span>
Editorial
Updated:- 2024-03-22, 19:37 IST

குழந்தைகளுக்கு நல்லொழுக்கம், கல்வியறிவு கொடுப்பது என்பது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமைகளில் ஒன்றாக உள்ளது. இதெல்லாம் சமூகத்தில் மதிப்புடன் வாழ்வதற்கு அவர்களுக்கு உதவியாக இருந்தாலும், வாழ்நாள் முழுவதும் பாதுகாப்புடன் வாழ்வதற்கு சில விஷயங்களைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இவற்றில் ஒன்று தான் குழந்தைகளை சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு பற்றிய தகவல்களைக் கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டும். 

 road safety rules

 

மேலும் படிக்க: குழந்தைகளின் தூக்கத்தை முறைப்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியது!

குழந்தைகளும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளும்:

  • சமூகத்தில் ஏற்படக்கூடிய 80 சதவீத மரணங்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றாதது முக்கிய காரணமாக அமைகிறது. குறிப்பாக இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு 17 பேர் வரை சாலை விபத்துகளால் உயிரிழப்பதாக புள்ளி விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் தான் கட்டாயம் குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றிய புரிதல்களை ஏற்படுத்தித்தர வேண்டும்.
  • குழந்தைகளோடு நடந்து சென்றாலும் பை, கார்,சைக்கிள் போன்றவற்றில் சென்றாலும் அவர்களுக்கு சாலைகளை எப்படி கடக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். சாலைகளைக் கடக்கும் போது இருபுறமும் பார்த்து விட்ட பின்னதாக தான் செல்ல வேண்டும் என்று எப்போதும் சாலைகளைக் கடந்து சென்றாலும் கூற வேண்டும்.
  • சாலை பாதுாப்பு விதிகளை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கு உள்ளது. நீங்கள் குழந்தைகளுடன் வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது, சிவப்பு, பச்சை, மஞ்சள் விளக்குகள் ஏன் போடப்படுகிறது?என்றும் சிவப்பு என்றால் நிற்க வேண்டும், மஞ்சள் என்றால் தயாராக இருக்க வேண்டும், பச்சை என்றால் சிக்னலைக் கடந்து செல்லலாம் என்பது குறித்து அவர்களுக்கு சிறு வயதில் இருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும்.

essential road saafety rules ()

  • மொபைல் போன்களில் பேசிய படி நடந்து செல்வதால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. எனவே சாலைகளைக் கடக்கும் போது, ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தாமல் நடக்க வேண்டும் என்றும் பாடல்களைக் கேட்டுக் கொண்டே நடக்கக்கூடாது என்பதையும் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
  • விளையாட்டு மைதானம் சாலைகளுக்கு அருகில் இருந்தால் பாதுகாப்பாக எப்படி விளையாடுவது? என்பது குறித்து என்பது குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
  • சாலைகளில் எப்போது நடந்து சென்றாலும் இடது புறம் செல்ல வேண்டும் என்றும் நடக்கும் போது நடைபாதைகளைப் பயன்படுத்தி நடக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும்.

மேலும் படிக்க: குழந்தைகள் நகம் கடிக்கிறார்களா? ? கோவப்படாமல் இத மட்டும் செய்யுங்க!

 

road safety rules for children ()

குழந்தைகளை வீட்டில் இருக்கும் போது ஒவ்வொரு பெற்றோர்களும் பாதுகாப்புடன் பார்த்துக் கொள்வோம். அதே அவர்கள் தனியாக வெளியில் சென்றால் அவர்களைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இளம் வயதில் இருந்தே சாலை பாதுகாப்பு விதிகளைக் கட்டாயம் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும் என்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]