மனிதர்களின் உடல் உறுப்புகள் அனைத்தும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க தூக்கம் அவசியமான ஒன்று. சரியான தூக்கம் இல்லாமல் இருக்கும் போது, நாள் முழுவதும் தூக்க கலக்கம் ஏற்படுதோடு மன அழுத்தம், டென்சன், உடல் நல பாதிப்புகள் ஏற்படும். இப்படி தூக்கமே வரல என்றும் அவதிப்படுபவர்கள் ஒருபுறம் இருந்தாலும், எப்ப பார்த்தாலும் தூங்கிட்டே இருக்கனும்னு தோணுது என்று புலம்புபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நாள் முழுவதும் தூங்கிக் கொண்டே இருப்பதால் உடல் பருமன், மற்றவர்களின் திட்டும் வார்த்தைகளைக் கேட்கும் போது மன உளைச்சல், அலுவலகம் மற்றும் வீடுகளில் பணிகளை சரியான நேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் போவது என பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். ஒரு சிலருக்கு இரவு நேரத்தில் சரியான தூக்கம் இல்லாமல் இருந்தாலும் மறுநாள் முழுவதும் தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற மனநிலை ஏற்படும். இதனால் பெற்றோர்கள் முதல் அலுவலகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளிடம் திட்டு வாங்கிக்கொண்டே தான் இருக்கக்கூடிய சூழல் ஏற்படும். இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று நினைத்தால், தூக்கத்தைக் கட்டுப்படுத்த நீங்கள் செய்ய வேண்டிய சில வழிமுறைகள் என்ன? என்பது குறித்து அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: பெண்களே.மாதவிடாய் காலத்தில் குளிரை அனுபவிக்கிறீர்களா? காரணம் இது தான்!
அலுவலகம் மற்றும் வீடுகளில் இருக்கும் போது அதீத தூக்கம் உங்களுக்கு ஏற்படும் சமயத்தில், கொஞ்சம் வேலைகளை ப்ரேக் எடுத்துக் கொள்ளவும். இது உங்களின் தூக்கத்தைக் கலைப்பதற்கு உதவி செய்யும். மேலும் எவ்வித மன உளைச்சல் இருந்தாலும மனதை அமைதிப்படுத்துவதோடு பணிகளை முறையாக செய்வதற்கு உதவியாக இருக்கும்.
தூக்கம் வரும் சமயத்தில் நாம் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்கும் போது உடலில் உள்ள அனைத்து உடல் உறுப்புகளையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். மேலும் தூக்க கலக்கத்தைப் போக்கி சுறுசுறுப்பாக அனைத்து வேலைகளையும் செய்வதற்கு உதவியாக இருக்கும்.
எப்பொழுது தூக்கம் வந்தாலும் ஒரு காபி அல்லது டீ குடிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்படும். ஆம் சூடான பானத்தை நீங்கள் குடிக்கும் போது உடல் சுறுசுறுப்பாகும். மேலும் காபினை உங்களது சோர்வை நீக்க உதவும்.
மேலும் படிக்க: பிரசவத்திற்குப் பிறகு வயிற்றுத்தொப்பைக் குறைக்கும் முயற்சியில் உள்ளீர்களா? இதை ட்ரை பண்ணுங்க!
உங்களால் தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், வீடாக இருந்தாலும் அலுவலகமாக இருந்தாலும் குட்டி தூக்கம் போடவும். 10 அல்லது 20 நிமிடங்கள் தூங்கினாலே உடல் சுறுசுறுப்பாகும். தூக்கத்தையும் கட்டுப்படுத்த முடியும்.
அதீத தூக்கம் வரும் போது கொஞ்சம் வெளிச்சம் உள்ள இடங்களுக்குச் செல்லுங்கள். இது தூக்கம் வருவதைத் தடுப்பதற்கு உதவியாக இருக்கும்.
Image source- Google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]