மாதவிடாய் காலத்தில பெண்களுக்கு கால் வலி, வயிற்று வலி, வீக்கம் மற்றம் அவர்களின் மனநிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று. இவற்றைப் பெண்கள் தங்களது மாதவிடாய் சுழற்சிக்கு முன் அல்லது பின்னதாக சந்திப்பார்கள் என்பது நமக்கு தெரிய விஷயம். ஆனால் சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உடல் குளிர்ச்சியாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆம் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் பெண்களில் பெரும்பாலானோருக்கு உடல் குளிர்ச்சியடையும் என மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர். இது மட்டுமின்றி வேறு பல காரணங்களும் உள்ளது என மருத்துவர்கள் கூறும் நிலையில் என்னென்ன என்பது? குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: மாதவிடாய் சுழற்சி பெண்களின் முடி வளர்ச்சியைப் பாதிக்குமா? முழு விபரம் இங்கே!
மாதவிடாய் சுழற்சியின் போது பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும் போது உடலில் சீரான வெப்பநிலை இருக்காது. ஏற்ற இறக்கங்களோடு இருப்பதால் உடல் வெப்பநிலையைக் குறைத்து குளிர்ச்சியான நிலையைப் பெண்களுக்கு ஏற்படுத்தும்.
இரத்த சிவப்பணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் குறைபாடு உள்ள பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உடல் சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படும். பொதுவாகவே உடல் சோர்வு ஏற்பட்டால் குளிருடன் காய்ச்சல் உணர்வை அனுபவிப்போம். மாதவிடாய் காலத்தில் சொல்லவே தேவையில்லை. இதனால் தான் சில பெண்களுக்கு இந்த சமயத்தில் உடல் குளிர்ச்சி அடையும்.
அதீத இரத்தப் போக்கின் காரணமாக பெண்களுக்கு நீரிழப்பு ஏற்படும். போதுமான அளவு உடலில் நீர்ச்சத்து குறையும் போது, உடல் வெப்பநிலை குறைவதற்குக் காரணமாக அமைகிறது. இதுவே மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு குளிர் ஏற்படுவதற்கானக் காரணமாக அமைகிறது. எனவே தான் மாதவிடாய் காலத்தில் பெண்கள் எப்போதும் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஹைப்போ தைராய்டிசம் உள்ள பெண்களுக்கும் மாதவிடாய் காலத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுத்தும். உடலில் தைராய்டு சுரப்பி போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்யாத நிலையில் ஏற்படும் ஹைப்போ தைராய்டிசம், உடலில் வளர்சிதை மாற்றத்தைப் பாதிக்கிறது. இது உடல் சோர்வு, குளிர்ச்சியான உணர்வு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் இந்த அறிகுறிகள் தீவிரமானதாக இருக்கும்.
இதோடு மட்டுமின்றி சில பெண்களுக்கு காய்ச்சல், அதீத வயிற்று வலியுடன் இரத்தப் போக்கு ஏற்படும் போது, உடல் சோர்வு ஏற்படும். மேலும் பல தொற்று பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க: மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கானக் காரணங்கள்!
குறிப்பாக ஊட்டச்சத்துள்ள உணவுகள் சாப்பிடுவது, குளிர் அதிகமாக இருப்பதை உணர்ந்தால் சுடு தண்ணீரில் குளிப்பது, சூடான உணவுகளை உட்கொள்வது போன்ற வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Image Source- Google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]