உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்பம் என்பது மிக அழகான பயணம். ஆனால் இந்த நேரத்தில் பெண்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. கர்ப்பமான முதல் மாதத்தில் இருந்து பிரசவம் வரை தாய் பல மாற்றங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். வாந்தி, சோர்வு, உடல் மாற்றங்கள் ஆகியவற்றுடன், பெண்களுக்கு கால் வீக்கமும் ஏற்படுகிறது. இது மருத்துவ மொழியில் எடிமா என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு சில நாட்களில் மட்டுமே இருக்கும் பிரச்சனை மற்றும் மிகவும் பொதுவானது என்றாலும் சில நேரங்களில் இது பெண்களுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்தும். வீக்கத்தால் நடப்பதிலும் சிரமம் உள்ளது. சில நடவடிக்கைகளால் வீக்கத்தைக் குறைக்கலாம். இது தொடர்பான தகவலை உணவியல் நிபுணர் ரிச்சா தோஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: இரும்புச்சத்து குறைபாடு பெண்களுக்கு ஏற்படுத்தும் விலைவுகள் பற்றி தெரியுமா?
இந்த வீக்கம் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுகிறது. இது தவிர குழந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உடல் கூடுதல் திரவத்தை உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. கர்ப்பம் முன்னேறும்போது கருப்பையின் அளவு அதிகரித்து குழந்தையின் எடை கால்களின் நரம்புகளில் அழுத்தம் கொடுக்கத் தொடங்குகிறது. இதன் காரணமாக இதயத்தில் இரத்த ஓட்டம் நடைபெறுவதில் சிறிது தாமதமாக இருக்கும் இது நரம்புகளில் திரவம் தக்கவைக்க வழிவகுக்கிறது, இது சுற்றியுள்ள திசுக்களிலும் நுழையலாம். இதனால் பாதங்களில் வீக்கம் ஏற்படுகிறது.
வெதுவெதுப்பான உப்பு நீரில் உங்கள் கால்களை ஊற வைக்கவும். கால்களை 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவைப்பதால் வீக்கம் குறைவது மட்டுமின்றி தசை வலியையும் குறைக்கலாம்.
அதிக நேரம் நிற்பதைத் தவிர்க்கவும் இது வீக்கத்தை மோசமாக்கும். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் படுத்திருக்கும் போது உங்கள் கால்களை தூக்கி 5 நிமிடங்கள் சுவரில் வைக்கவும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும், மேலும் வீக்கம் மற்றும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
நீங்கள் சாப்பாட்டு மேசையிலோ அல்லது சோபாவிலோ அமர்வதை தவிர்க்கவும். உங்கள் கால்களைத் தொங்கவிடுவதை தவிர்க்கவும். இது உங்கள் கால்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். நீங்கள் உட்கார்ந்திருக்கும் போதெல்லாம், உங்கள் கால்களை ஒரு குஷன் அல்லது ஸ்டூலில் வைக்கவும்.
இந்த பதிவும் உதவலாம்: சரியான நேரத்தில் மதிய உணவு சாப்பிட முடியவில்லை என்றால் இந்த 3 குறிப்புகள் உங்கள் செரிமானத்தை மேம்படுத்தும்
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit- Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]