பெண்களிடையே அதிகரிக்கும் இரத்த சோகை; குணப்படுத்துவதற்கான எளிய வீட்டு வைத்தியம்!

மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டாலும் உங்களது உணவு முறைகளிலும் சில மாற்றங்களைக் கொண்டு இரத்த சோகை பாதிப்பைத் தவிர்க்க முடியும்.

anemia treatment for pregnant women

உடலில் இரத்த சிவப்பணுக்கள் குறைவதால் ஏற்படும் பாதிப்பே இரத்த சோகை. ஆண்களை விட பெண்களுக்கு இரத்த சோகை பாதிப்பு அதிகளவில் ஏற்படுகிறது. குறிப்பாக 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இந்த குறைபாடுகள் அதிகம் காணப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தைப்பிறக்கும் போது உடலில் இரத்தத்தின் அளவு குறையும் போது குறைப் பிரசவம், உயர் இரத்த அழுத்தம், பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாகப் பிறப்பது போன்ற பல்வேறு பிரச்சனைகளைப் பெண்கள் அதிகளவில் சந்திக்க நேரிடும். எனவே தான் கர்ப்ப காலத்தில் உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடிய உணவுகள் சாப்பிட வேண்டும் என அறிவுறுத்துவார்கள்.

anemis

இரத்த சோகை பாதிப்பின் அறிகுறிகள்:

பெண்களுக்கு இரத்த சோகை பாதிப்பு இருக்கும் போது அவர்களுக்கு உடல் சோர்வு, மயக்கம், உயர் இரத்த அழுத்தம், தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படத்தொடங்கும். இதையே நீங்கள் இரத்த சோகை பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கும்.

தடுப்பது எப்படி?

பெண்களுக்கு ஏற்படக்கூடிய அனிமீயா எனப்படும் இரத்த சோகை பாதிப்பைத் தடுப்பதற்கு, இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். மருத்துவர்கள் தரக்கூடிய மருந்துகளைச் சாப்பிடுவதோடு சில வீட்டு வைத்தியங்களையும் நீங்கள் பின்பற்ற வேண்டும்.

வீட்டு வைத்திய முறைகள்:

  • பெண்களுக்கு இரத்த சோகை பாதிப்பு ஏற்படும் போது, முறையாக மாதவிடாய் சுழற்சி இருக்காது. கர்ப்ப காலத்தில் அதிக உடல் சோர்வு ஏற்படும். இந்நேரத்தில் நீங்கள் வீடுகளில் உள்ள சமையல் பொருள்களைப் பயன்படுத்தி இரத்த சோகை பாதிப்பைக் குறைக்க முடியும்.
  • இரத்த சோகை பாதிப்பு உள்ள பெண்கள், தினமும் முருங்கை இலையில் சூப் செய்து சாப்பிடலாம். இல்லையென்றால் முருங்கை இலைகளைச் சாறாக எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிடவும். இதில் உள்ள கால்சியம், வைட்டமின் ஏ, சி , இரும்புச் சத்து போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை அளிப்பதோடு இரத்தத்தின் அளவையும் அதிகரிக்கிறது.
  • கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும் பெண்கள், பீட்ரூட்டை உங்களது உணவு முறையில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஜூஸ் அல்லது பொரியலாகச் செய்து சாப்பிடலாம். இது கொஞ்சம் கொஞ்சமாக உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
  • அசைவ உணவுகள் சாப்பிடும் பெண்களாக இருந்தால், சுவரொட்டியை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம். இதைச் சுட்டு அல்லது வெங்காயத்தைச் சிறிது சிறிதாக நறுக்கிப் பொரியல் போன்று செய்து சாப்பிடவும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பெண்களுக்கு உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
  • இரத்தத்தின் அளவை அதிகரிக்க வேண்டும் என்றால்,பெண்கள் அத்திப்பழங்களை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
anemnia food

மேலும் படிக்க:குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாக மாற வேண்டுமா? உணவுகளில் மஞ்சளை இப்படி யூஸ் பண்ணிப்பாருங்க!

மருத்துவர்களின் அறிவுரைகளின் படி மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டாலும் உங்களது உணவு முறைகளிலும் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Image source- Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP