கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்களுக்கும் பெரும் சவாலான விஷயம். குளிர்காலங்களில் கூட ஸ்வெட்டர், மப்புலர் போன்ற குளிர்சாதன ஆடைகளை அணிவதன் மூலம் உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். இதுவே கோடைக்காலம் என்றால் சொல்லவே தேவையில்லை. கர்ப்பிணிப் பெண்கள் மிகுந்த சிரமத்தைச் சந்திப்பார்கள்.
நம் முன்னோர்கள் கூறுவது போன்று சித்திரை பிறந்தால் சீரழிவார்கள் என்பார்கள். ஆம் சித்திரை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் சூரிய ஒளியின் தாக்கம், வியர்வை போன்றவற்றால் தூங்க முடியாமல் அவதிப்படுவார்கள். இதே நிலை தான் கர்ப்பிணிப் பெண்களுக்கும். இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், கர்ப்ப காலத்தில் பெண்கள் கட்டாயம் சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டும். இதோ என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாக மாற வேண்டுமா? உணவுகளில் மஞ்சளை இப்படி யூஸ் பண்ணிப்பாருங்க!
சுட்டெரிக்கும் வெயிலால் தலைச்சுற்றல், குமட்டல், வாய் வறட்சி, மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல் போன்ற பாதிப்புகளெல்லாம் கோடைக் காலத்தில் ஏற்படுவது இயல்பு. இருந்தபோதும் இந்த பாதிப்புகள் கர்ப்பிணிப் பெண்களுக்கும் பெரும் உடல் நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். வெளியில் செல்லும் போதெல்லாம் தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு செல்வது நல்லது.
கோடைக்காலத்தில் வெயில் தாக்கத்தைக் குறைக்க வேண்டும் என்றால் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், ப்ரெஸ்ஸான பழங்கள், பழச்சாறுகளைக் குடிக்க வேண்டும். கேரட், வெள்ளரி, பூசணிக்காய், சுரைக்காய் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. அதே சமயம் உணவில் காரத்தைக் குறைக்கவும். இது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தவிர்ப்பது நல்லது.
வெயிலின் தாக்கத்தைக் குறைப்பதற்காகக் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். உடல் உஷ்ணத்தைக் குறைப்பதற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவியாக இருக்கும். நீச்சல் தெரிந்தால் மருத்துவர்களின் அறிவுரைகளின் படி குறிப்பிட்ட சில மாதங்களுக்கு நீச்சல் அடிப்பது நல்லது.
கோடைக்காலத்தில் கர்ப்பிணிகள் அதிக உப்பு சேர்த்து எந்த உணவுகளையும் உட்கொள்ளக்கூடாது. உப்பு நிறைந்த உணவுகள் உடலில் நீரிழப்பிற்கு வழிவகுக்கும். எனவே கோடை நாட்களில் உருளைக்கிழங்கு, சிப்ஸ், குக்கீஸ்கள், மற்றும் உணவில் அதிகம் உப்பு சேர்த்துச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
நடைப்பயிற்சி, நீச்சல், யோகா மற்றும் பிற கர்ப்ப பயிற்சிகள் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நல்லது. கோடைக் காலத்தில், வெப்பநிலை குறைவாக இருக்கும் போது காலை அல்லது மாலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சியின் போது ஒருவர் சோர்வாக உணர்ந்தால் ஓய்வெடுத்து ஓய்வெடுப்பது நல்லது.
மேலும் படிக்க: தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா? அப்ப தூங்குவதற்கு முன் இந்த உணவுகளைச் சாப்பிடுங்க!
கோடை வெப்பம் உங்களை அதிக சோர்வடையச் செய்யும் என்பதால், தாய்மார்களுக்குத் தூக்கமும் ஓய்வும் மிக முக்கியமான ஒன்று. எனவே கோடைக்காலத்தில் மதிய வேளைகளில் வெளியில் செல்வதைத் தவிர்த்துக் குட்டி தூக்கம் போடவும். மேலும் புத்தகம் படிப்பது, இசை கேட்பது அல்லது தியானம் போன்றவற்றை மேற்கொள்வது நல்லது.
Image source - Google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]