பலாப்பழம் மிகவும் சுவையான பழம் மட்டும் அல்ல, இதில் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் அதிக அளவில் நிரம்ப பெற்றது. நம் உடலின் ஊட்டச்சத்து குறைபாடுகளை பூர்த்தி செய்கிறது. இனிப்பு சுவை நிறைந்த பலாப்பழத்தை பார்க்கும் போது அனைவருக்கும் நாவில் எச்சில் ஊறும். சில பெண்கள் இதை அசைவ உணவு சாப்பிடுவதை போல ருசித்து சாப்பிடுவார்கள். அதனால் தான் பலாப்பழம் அனைவரும் சாப்பிட விரும்பும் பழமாக இருக்கிறது. பலாப்பழத்தை வைத்து கறி சமைத்து சாப்பிடுவது மட்டும் அல்ல, அதை வைத்து ஊறுகாய், பகோடாக்கள் மற்றும் கோஃப்தாக்கள் செய்து சாப்பிடலாம். அதனால் தான் கேரள மாநிலத்தில் பலாப்பழம் தான் மாநில பழமாக இருக்கிறது. கேரளாவில் பெரும்பாலோனோர் வீட்டிலும் பலா மரம் இருக்கும்.
பலாப்பழம் சுவைக்கான பழம் மட்டும் அல்ல. இது நம் உடலில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுகளை பூர்த்தி செய்யும் காரணிகள் கொண்டது. இதில் வைட்டமின் A, வைட்டமின் C, தயாமின், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஜிங்க் ஆகிய சத்துகள் நிறைந்து உள்ளன. இவற்றை தவிர, இதில் அதிக அளவில் நார்ச்சத்து இருக்கிறது. பலாப்பழம் பொறுத்தவரை மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால், இதில் கலோரிகள் கிடையாது. இது போன்ற சமயத்தில், இதயம் சம்பந்தமான பல்வேறு பிணிகளுக்கு இது மிகவும் நன்மை தரும். இப்படிப்பட்ட பலாப்பழம் நமது ஆரோக்கியத்திற்கு எந்த விதத்தில் நன்மை செய்யும் என்று பார்க்கலாம்.
இதுவும் உதவலாம் : நம்பமுடியாத ஆரோக்கிய நன்மைகளை தரும் பச்சை பீன்ஸ்
பலாப்பழத்தில் கலோரிகள் குறைவாக உள்ளதால் இது இருதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதில் பொட்டாசியம் சத்து உள்ளதால் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு நல்லது. பலாப்பழம் உண்ண இதயம் சம்பந்தமான எந்த வியாதிகளும் வரவே வராது. இந்த பழத்தில் வைட்டமின் B6 சத்து உள்ளது. இது நம் இரத்தத்தில் உள்ள ஹோமோசிஸ்டைன் அளவை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு மற்றும் வாதம் ஏற்படும் அபாயம் குறைகிறது.
பலாப்பழத்தில் வைட்டமின் C சத்து நிறைந்து காணப்படுகின்றன. இது நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மெத்தனால் மற்றும் எத்தனால் போன்ற வேதிப்பொருட்களை விட வைட்டமின் சி யில் தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளன என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது மட்டுமல்லாமல், பலாப்பழம் சளி, காய்ச்சல், இருமல் ஆகியவற்றிற்கு நிவாரணம் தரும். உங்களுக்கு உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும் என்று நினைத்தால், பலாப்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ள உடலில் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
பலாப்பழத்தில் ஃப்ரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் உள்ளன. எனவே பழுத்த பலாப்பழம் சாப்பிட இரத்த சர்க்கரை அளவு அதிகமாகாது. பலாப்பழத்தில் கொலஸ்ட்ரால் குறைந்த அளவில் உள்ளது, ஆனால் சத்தோ அதிகமாக உள்ளது. பழுத்த பலாப்பழத்தை மசித்து கூழாக்கி, அதை நீரில் சேர்த்து கொதிக்க விடவும். இதை குளிர வைத்து குடிக்கவும். இது உங்களுக்கு உடனடி புத்துணர்வை தருகிறது.
பலாப்பழத்தில் கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. எனவே இது எலும்புகளை பலமாக்கும். மேலும் இதில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. இது உடலில் கால்சியம் தேக்கத்தை குறைக்கிறது. கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்து எலும்பின் திடத்தை மேம்படுத்துகிறது, இதனால் ஆஸ்டியோபொராசிஸ் போன்ற எலும்பு நோய்கள் தாக்கும் அபாயம் குறையும்.
குறிப்பு : அளவாக மட்டுமே சாப்பிட வேண்டும் , வயிற்று உபாதைகள் இருப்பவர்கள் ஆசைக்கு மட்டுமே சாப்பிட வேண்டும். அதிகம் சாப்பிட கூடாது. ஏதேனும் மருந்துகள் உட்கொண்டால் மருத்துவ ஆலோசனை பெற்று சாப்பிட வேண்டியது அவசியம்.
இதுவும் உதவலாம் : வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]