herzindagi
dates image big

Three Dates Daily: எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை பெற தினமும் 3 பேரீச்சம்பழம் சாப்பிட வேண்டும்

பேரிச்சம்பழம் சத்து நிறைந்த உலர் பழம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் ஒரு நாளைக்கு 3 பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்
Editorial
Updated:- 2024-06-21, 15:55 IST

பேரிச்சம்பழம் சத்துக்கள் நிறைந்த நல்ல உலர் பழம். இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இதில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின், மக்னீசியம், வைட்டமின் சி, டி போன்ற சத்துக்கள் உள்ளன.3 பேரீச்சம்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அது உங்கள் ஆரோக்கியத்தை பெரிய அளவில் மேம்படுத்தும். தினமும் மூன்று பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை லாவ்னீத் டயட்டீஷியன் லவ்னீத் பத்ரா இதுபற்றி கூறியுள்ளதை பார்க்கலாம். 

மேலும் படிக்க:  உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஜாதிக்காய் எண்ணெய்

3 பேரீச்சம்பழத்தில் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

  • பேரீச்சம்பழம் சாப்பிடுவது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். உண்மையில் பேரீச்சம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் எல்டிஎல் கொழுப்பின் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்க உதவுகிறது. இது தமனிகளில் கட்டிகள் உருவாவதைத் தடுக்கிறது. தமனிகளில் இருந்தால் இரத்தக் கட்டிகளால் மாரடைப்பு ஏற்படலாம்.

heart paient new inside

  • பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் மூளையின் ஆரோக்கியம் மேம்படும். இது அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. பேரீச்சம்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளதால் நரம்பு செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் நினைவகத்தை மேம்படுத்த உதவுகிறது.
  • பேரீச்சம்பழம் சாப்பிடுவது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மக்கள் வயதாகும்போது ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் அபாயம் அதிகம். பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும். எலும்புகளை வலுப்படுத்தும் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து இதிகம் உள்ளது.
  • பேரீச்சம்பழம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் ஒரு இயற்கை மலமிளக்கியாக செயல்படுகிறது. இதனை உட்கொள்வதால் குடல் இயக்கம் அதிகரித்து மலச்சிக்கலை போக்குகிறது.

good gut new inside

  • பெண்கள் பெரும்பாலும் ஹீமோகுளோபின் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இரத்த சோகை இருந்தால் பேரீச்சம்பழத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் சாப்பிடலாம்.

மேலும் படிக்க: உடல் ஆரோக்கியத்திற்காக சர்க்கரைக்கு பதில் தேநீரில் வெல்லம் சேர்த்து குடிப்பது உடலுக்கு நல்லதா?

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]