herzindagi
Asafoetida medicinal uses

வயிறு தாறுமாறா தொல்லைதருதா? பெருங்காயத்துடன் கடுகு எண்ணெயை தொப்புளில் தடவவும்

பெருங்காயம், கடுகு எண்ணெய் இரண்டுமே மருத்துவ குணம் கொண்டவை. அவற்றை தொப்புளில் பூசுவதால் பல நன்மைகள் கிடைக்கும். அவற்றைப் பயன்படுத்துவதற்கான சரியான வழிகளை பார்க்கலாம்
Editorial
Updated:- 2024-09-13, 19:22 IST

ஆரோக்கியமாக வாழ்க்கை முறைக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி, பல வீட்டு வைத்தியங்களும் நன்மை பயக்கும். நம் வீட்டில் உள்ள சிறு பிரச்சனைகளுக்கு தாய்மார்கள் வீட்டில் இருக்கு பொருட்களை கொண்டு சரி செய்வார்கள். நமது சமையலறையில் இருக்கும் பல பொருட்களும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை, அவற்றை சரியான முறையில் பயன்படுத்தினால், பல நோய்கள் வராமல் தடுக்கலாம். பல சமயங்களில் சிறு குழந்தைகளுக்கு வயிற்று வலி, காது வலி, சளி, இரும்பல் போன்ற பிரச்சனைகளுக்கு வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சூட்டினால் ஏற்படுகின்றது என்று தொப்புளில் எண்ணெய் பூசுவதௌ பார்த்திருப்பீர்கள். தொப்புளில் சில துளிகள் எண்ணெய் வைப்பதும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். தொப்புளில் பெருங்காயம் கலந்த கடுகு எண்ணெயை தடவினால் என்ன நடக்கும் என்பதை நிபுணர் மூலம் தெரிந்து கொள்வோம். இந்த தகவலை உணவியல் நிபுணர் மன்பிரீத் தெரிவித்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அவர் ஒரு ஹார்மோன் மற்றும் குடல் ஆரோக்கிய பயிற்சியாளர்.

மேலும் படிக்க: டீனேஜ் வயதில் இருக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டா?

கடுகு எண்ணெய் மற்றும் பெருங்காயம் தொப்புளில் பூசினால் கிடைக்கும் பலன்கள்

asafoetida inside 

  • பெருங்காயத்தை கடுகு எண்ணெயையுடன் தொப்புளில் தடவினால் பல நன்மைகள் கிடைக்கும். இது வாயு, அமிலத்தன்மை மற்றும் வயிற்று வலியைப் போக்குகிறது.
  • நீங்கள் வயிற்றில் கனமாக உணர்ந்தாலோ அல்லது வாயு காரணமாக வலி அல்லது பிடிப்புகள் ஏற்பட்டாலோ, கண்டிப்பாக பெருங்காயமும், கடுகு எண்ணெயையும் தொப்புளில் தடவவும்.
  • பலவீனமான செரிமானம் உள்ளவர்களும், உணவு சரியாக ஜீரணிக்க முடியாதவர்களும் இதைப் பயன்படுத்த வேண்டும்.
  • இது அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது மற்றும் வயிற்றில் உற்பத்தியாகும் அமிலத்தை கட்டுப்படுத்துகிறது. இது புளிப்பு ஏப்பத்தையும் நிறுத்துகிறது.
  • கடுகு எண்ணெயில் வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் சருமத்திற்கு பொலிவைத் தரும்.
  • இந்தக் கலவையை தொப்புளில் தடவினால் உடலில் தேங்கியுள்ள அழுக்குகள் நீங்கி, உடல் நச்சுத்தன்மை பெறுகிறது.
  • மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி மற்றும் பிடிப்புகளை குறைக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும்.
  • இதனால் வயிற்று உப்புசம் குறைவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும்.
  • இது எடையைக் குறைக்க உதவும்.

தொப்புளில் பெருங்காயமும் கடுகு எண்ணெயையும் தடவுவதற்கான சரியான வழி

mustard oil inside ()

  • 1 தேக்கரண்டி கடுகு எண்ணெயை சிறிது சூடாக்கி அதில் ஒரு சிட்டிகை பெருங்காய பொடியை சேர்க்கவும்.
  • இது பேஸ்ட் போல் ஆகிவிடும்.
  • இப்போது இந்த பேஸ்ட்டை தொப்புளில் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் தடவவும்.
  • இந்த பேஸ்ட்டைக் கொண்டு தொப்புளை சிறிது நேரம் மசாஜ் செய்யவும்.

மேலும் படிக்க: உடல் ஆரோக்கியம் முதல் சரும பிரச்சனைகள் வரை நல்ல தீர்வை தரும் வாழைப்பழ தோல்

நிபுணர்களின் ஆலோசனைப்படி பெருங்காயமும் கடுகு எண்ணெயையும் தொப்புளில் தடவுவதன் மூலமும் பல நன்மைகளைப் பெறலாம். இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக பகிரவும். இதுபோன்ற பிற கதைகளைப் படிக்க ஹர்சிந்தகியுடன் இணைந்திருங்கள். இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க  Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]