herzindagi
image

செரிமானம் முதல் சரும பிரச்சனைகளை சரி செய்யும் அற்புதம் கொண்ட கொய்யா இலைகள்

கொய்யா பழத்தில் மட்டுமல்ல கொய்யா இலைகளிலும் உடலுக்கு ஆற்றலை அளிக்கும் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது.
Editorial
Updated:- 2025-08-28, 13:06 IST

நமக்கு மிகவும் எளிதில் கிடைக்கும் விஷயங்களைப் பல நேரங்களில் அலட்சியமாக எடுத்துக் கொள்வோம். அல்லது சில நேரங்களில் அதைக் கண்டு கொள்ள மாட்டோம். விலை அதிகமாகக் கொடுத்து வாங்கினால் தான் ஆரோக்கியம் என்ற மனநிலையை நம்மில் பலர் பெற்றிருக்கிறோம். இவை முற்றிலும் தவறான செயல். நம்முடைய வீட்டில் கிடைக்கும் சில பொருட்களை வைத்துக் கூட உடல் நலத்தை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள். இன்றைக்கு இவற்றில் ஒன்றாக உள்ள கொய்யா பழ மரத்தின் இலைகள் எந்தளவிற்கு உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது? என்பது குறித்து இங்கே விரிவாக அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

கொய்யா இலைகளின் நன்மைகள்:

  • கொய்யா இலைகளில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி செரிமான பிரச்சனையை சீராக்குகிறது.
  • கொய்யா இலைகளை அப்படியே மென்று சாப்பிடலாம் அல்லது ஜூஸாக செய்து பருகும் போது, நமது உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டை சர்க்கரையாக மாற்ற உதவுகிறது.
  • வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் கொண்ட கொய்யா இலைகளை உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

மேலும் படிக்க: உங்களது நாளை தக்காளி ஜூஸ்வுடன் தொடங்கினால் போதும் வியக்கத்தகு நன்மைகள் காத்திருக்கு!

  • உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைக்கும் தன்மைகளைக் கொண்ட கொய்யா இலைகளை சாப்பிடும் போது இதய நோய் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

  • கொய்யா இலையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. குறிப்பாக மூட்டு வலி, உடல் வலி போன்றவற்றிற்குத் தீர்வாக அமைகிறது.
  • சருமத்தைப் பொலிவாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எவ்வித செலவும் இல்லாத கொய்யா இலைகளைப் பயன்படுத்தலாம். இவற்றை அரைத்து முகத்தில் அப்ளை செய்யும் போது சருமத்தில் உள்ள முகப்பரு, கரும்புள்ளி அனைத்தையும் குறைக்க உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க: Benefits of almonds: சருமத்தை பொலிவாக்கும்; எலும்புகளை வலுப்படுத்தும் - ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்

  • கொய்யா இலைகளை தலையில் அப்ளை செய்யும் போது, தலைமுடியை வேரிலிருந்து நுனி வரை பலப்படுத்தி வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது.
  • கொய்யா இலையின் கொழுந்துகளை எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிடும் போது ஈறுகளில் வீக்கம், துர்நாற்றம் மற்றும் போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும்.
  • கொய்யா இலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பெண்களின் கருப்பை மற்றும் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த உதவுவதோடு மாதவிடாய் வலியைக் குறைக்கவும் உதவியாக உள்ளது.

கொய்யா இலைகளைப் பயன்படுத்தும் முறைகள்:

  • கொய்யா இலைகளை ஒரு தண்ணீர் ஊற்றி ஒரு 10 லிருந்து 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்து அல்லது சர்க்கரை சேர்க்காமல் தேநீராக பருகலாம்.
  • கொய்யா இலைகள் மற்றும் மஞ்சளை அரைத்து பேஸ் பேக் போன்று முகத்தில் அப்ளை செய்யலாம். தலைமுடிக்கு கொய்யா இலைகளை மட்டும் அரைத்து உபயோகிப்பது நல்லது.

Image credit - pexels

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]