தற்போதைய நவீன காலத்தில் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடும் உணவாக அசைவ உணவுகள் தான் உள்ளது. அதிலும் சிக்கன் வகைகளை வித்தியாசமான முறைகளில் தயார் செய்து சாப்பிடுகிறார்கள் அல்லது விலையை உயர்ந்த நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் சாலையோர கடைகளில் கிடைக்கும் கோழி இறைச்சிகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். அதிலும் பார்பிக் சிக்கன், பிரைட் சிக்கன், சிக்கன் ரைஸ் சிக்கன் நூடுல்ஸ் சிக்கன் பர்கர் என பதப்படுத்தப்பட்ட துரித உணவுகளை தான் சாப்பிடுகிறார்கள். இது போன்ற தவறான உணவு முறை பழக்கவழக்கத்தால் உடல் பருமன், நீரிழிவு நோய், பயிறு மற்றும் குடல் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்படுவார்கள். அதிலும் பெரும்பாலானோர் சிறிதளவு அசைவ உணவு சாப்பிட்டாலே வாயு தொல்லை ஏற்பட்டு விடும். குறிப்பாக நெஞ்சு குத்தல் முதுகு கூத்தல் மற்றும் கொழுப்பு பிரச்சனையால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது, உள்ளிட்ட பிரச்சனைகள் சிறுவயதினர் முதல் முதியவர்கள் வரை பெரும்பாலானோருக்கு ஏற்படுகிறது.
மேலும் படிக்க: இன்சுலின் தேவை இல்லாமல், சர்க்கரை நோயை விரட்டி அடிக்கும் இயற்கை பானங்கள்
இதுபோன்ற, சிக்கலான நேரங்களில் எப்போதுமே ஆங்கில மருந்துகளை மட்டும் நம்பி இருக்காமல் வீட்டிலேயே சில இயற்கையான பொருட்களை வைத்து நம் உடலை நாமே சரி செய்து கொள்ளலாம் இதில் எந்தவித பக்க விளைவுகளும் வரப்போவதில்லை ஏனென்றால் இவை அனைத்துமே இயற்கையான முறையில் உள்ள பொருட்களால் வீட்டிலேயே நாம் செய்யக்கூடியது. அதிலும் நமக்குத் தேவையான பொருட்களை தேவையான அளவில் சேர்த்து செய்து கொள்ளலாம்.
2 டம்ளர் பாலில் பூண்டு பெருங்காயம் சேர்த்து 1 டம்ளர் வரும் வரை காய்ச்சி ஆறவைத்து மிக்சியில் அரைத்து குடித்தால் இரத்த கொழுப்பை கரைத்து, நெஞ்சு குத்தல், முதுகு குத்தல், வாயு தொல்லையை நீக்கும்.
முக்கிய குறிப்பு: அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் இதனை தவிர்க்கவும்.
மேலும் படிக்க: குடலில் ஒட்டி உள்ள நாள்பட்ட கழிவுகளை ஒரே இரவில் வெளியேற்ற உதவும் கடுக்காய் பொடி தண்ணீர்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற உடல்நலம், ஆரோக்கியமான வாழ்வு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் HerZindagi Tamil
image source: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]