herzindagi
image

குடலில் ஒட்டி உள்ள நாள்பட்ட கழிவுகளை ஒரே இரவில் வெளியேற்ற உதவும் கடுக்காய் பொடி தண்ணீர்

உங்கள் குடலில் ஒட்டி இருக்கும் நாள்பட்ட கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா? தவறான உணவு முறை பழக்கவழக்கத்தால் சிறு குடல், பெருங்குடலில் ஒட்டி இருக்கும் நாள்பட்ட கழிவுகளை வெளியேற்ற இதில் உள்ள இயற்கை வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யவும்.
Editorial
Updated:- 2025-05-21, 13:24 IST

தற்போதெல்லாம் ஆரோக்கியமான உணவுகளை தான் அனைவரும் சாப்பிடுகிறார்கள் என்று நம்மால் உறுதி தன்மையோடு சொல்ல முடியாது. தவறான உணவு முறை பழக்கவழக்கத்தால் குடல் சார்ந்த பிரச்சனைகள் பெரும்பாலான இளம் வயதினர்களுக்கு வருகிறது. தற்போதைய நவீன காலத்தை உணவு முறை பழக்க வழக்கத்தில் பெரும்பாலான இளைஞர்கள், குழந்தைகள், முதியவர்கள் இளம் பெண்கள் என பலரும் ஜங்க் உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகிறார்கள். குறிப்பாக மாலை வேலைகளில் சாலையோரங்களில் கிடைக்கும் சிக்கன் ரைஸ், சிக்கன் நூடுல்ஸ் ப்ரைடு சிக்கன், வருத்த உணவுகள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள்.

 

மேலும் படிக்க: இந்த ஆயுர்வேத பொடி மலத்தின் வழியாக வயிற்று கொழுப்பை அகற்றி 30 நாளில் உடல் எடையை குறைக்கும்

 

இந்த தவறான உணவு முறை பழக்க வழக்கத்தால் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வயிறு சார்ந்த பிரச்சனைகளால் தவித்து வருகின்றனர். குறிப்பாக இதுபோன்ற உணவுகளை நாம் அதிகமாக சாப்பிடும் போது குடலில் பல்வேறு கழிவுகள் உருவாகி அப்படியே சிறுகுடல் மற்றும் பெருங்குடலில் தேங்கி நின்று விடுகிறது. இந்த பதவில் குடலில் ஒட்டி உள்ள நாள்பட்ட கழிவுகளை ஒரே இரவில் வெளியேற்ற உதவும் இயற்கை செய்முறை வீட்டு வைத்தியம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வாரம் முழுவதும் என்னலாம் சாப்பிடுகிறீர்கள்?

 GettyImages-1407832840

 

ஜங்க் உணவுகள் காரணமாக வாய் துர்நாற்றம், மலச்சிக்கல் நாள்பட்ட மலச்சிக்கல், வயிற்று வலி, சிறுநீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு வயிறு மற்றும் குடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே தினமும் பல்வேறு உணவுகளை சாப்பிட்டு வரும் நாம் நமது குடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக காலை எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை நீங்கள் என்னெல்லாம் சாப்பிட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தாலே உங்களுக்கு தெரியும். குறிப்பாக திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை ஒரு வாரம் முழுவதும் நீங்கள் என்னென்ன உணவுகள் எல்லாம் சாப்பிடுகிறீர்கள் அதில் அசைவ உணவுகள் என்ன? சைவ உணவுகள் என்ன? பதப்படுத்தப்பட்ட துரித உணவுகள் என பலவற்றை நாம் சாப்பிட்டிருப்போம்.

 

இப்படி அடுக்கடுக்காக, பெருங்குடலுக்கு பிடிக்காத தற்போதைய நவீன காலத்தை தவறான உணவு முறை பழக்கவழக்கத்தால் நீங்கள் சாப்பிடும் உணவுகள் உங்கள் குடலில் ஒட்டி பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த விசயம் தற்போதைய நவீன காலத்தை இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு தெரிவதில்லை என்பது நிதர்சனமான உண்மை.

 

இது போன்ற நேரங்களில் குடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதுவும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறையாவது உங்கள் வயிற்றில் உள்ள குடலில் உள்ள நாள்பட்ட கழிவுகளை நாம் வெளியேற்ற வேண்டும். இதற்கும் ஆங்கில மருந்துகளை நாடிச் செல்லாமல் வீட்டிலேயே சில இயற்கையான வழிகளில் உங்கள் குடலில் ஒட்டி இருக்கும் நாள்பட்ட கழிவுகளை ஒரே இரவில் வெளியேற்றலாம் அதற்கான எளிய செய்முறை விளக்கங்கள் குறிப்புகள் இந்த பதிவில் விரிவாக உள்ளது.

நாள்பட்ட கழிவுகளை ஒரே இரவில் வெளியேற்ற கடுக்காய் பொடி தண்ணீர்

 

haritaki-kadukkai-nattumarunthukadai.in_

 

கடுக்காய் பொடி தண்ணீர் செய்ய தேவையான பொருட்கள்

 

  • கடுக்காய் பொடி ஒரு டீஸ்பூன்
  • அரை டீஸ்பூன் தேன்
  • கால் எலுமிச்சம்பழம் சாறு

 

செய்முறை

 

  1. ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் கடுக்காய் பொடியை கலந்து விடுங்கள்.
  2. பின்னர் அதில் அரை டீஸ்பூன் தேனை கலக்கவும்.
  3. பின்னர் அதில் கால் டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து நன்றாக கலந்து விடவும்.
  4. குடலில் ஒட்டி இருக்கும் நாள்பட்ட கழிவுகளை வெளியேற்றும் கடுக்காய் பொடி தண்ணீர் தயார்.

 

குடிக்கும் முறை

 

  • இந்த கடுக்காய் பொடி தண்ணீரை இரவில் மட்டும்தான் குடிக்க வேண்டும்.
  • குறிப்பாக இரவு உணவு சாப்பிட்ட பிறகு தூங்கச் செல்வதற்கு கால் மணி நேரத்திற்கு முன்னர் இந்த கடுக்காய் தண்ணீரை குடியுங்கள்.
  • இந்த தண்ணீரை குடித்துவிட்டு உறங்கச் செல்லுங்கள் பின்னர் மறுநாள் காலை எழுந்ததும்.
  • உங்கள் வயிற்றில் மற்றும் சிறுகுடல் பெருங்குடலில் ஒட்டி இருக்கும் நாள்பட்ட கழிவுகள் காலை மலம் செல்லும் போது மலத்தின் வழியாக வெளியேறிவிடும். அதை நீங்களே கண்கூடாக பார்ப்பீர்கள்.
  • இப்படி வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை கடுக்காய் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து உங்கள் குடலில் ஒட்டி இருக்கும் நாள்பட்ட கழிவுகளை வெளியேற்றிக்கொள்ளுங்கள்.

கடுக்காய் பொடி தண்ணீர் இரவில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

 

Untitled design - 2025-03-13T183658.654

 

  1. நாட்டு மருந்து கடைகளில் பரவலாக கிடைக்கும் இந்த கடுக்காய் பொடி தண்ணீரை நீங்கள் இரவில் குடிக்கும் போது உங்கள் உடலில், குறிப்பாக குடலில் ஒட்டி உள்ள நாள்பட்ட கழிவுகள் வெளியேறத் தயாராகிவிடும், பின்னர் மறுநாள் காலை நீங்கள் மலம் கழிக்கும் போது உங்கள் குடலில் ஒட்டியிருந்த நாள்பட்ட கழிவுகள் மலம் வழியாக வெளியேறும்.
  2. இதனால் உடல் முழுவதும் சுத்தமாக நீங்கள் உணர்வீர்கள். குறிப்பாக வயிறு சார்ந்த பிரச்சனைகள், குடல் சார்ந்த பிரச்சினைகள் இல்லாமல் நீங்கள் இருந்தாலே ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
  3. வாரம் முழுவதும் எத்தனையோ உணவுகளை நாம் சாப்பிட்டு இருந்தாலும் அதில் இருக்கக்கூடிய கொஞ்சம் கழிவுகள் குடலில் ஒட்டி இருக்கத்தான் செய்யும் அதை வெளியேற்றுவதற்கு இந்த செய்முறை உங்களுக்கு பெரிதும் உதவும்.
  4. கடுக்காய் பொடி இயற்கையான பொருள் என்பதால் உடலில் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.
  5. நாள் முழுவதும் நீங்கள் நீரேற்றமாக இருப்பீர்கள், உடலுக்கு தேவையான ஆற்றல்கள் கிடைக்கும், கெட்ட நீர் வியர்வை வழியாக வெளியேறும், வயிறும் சுத்தமாக இருக்கும். இதனால் உங்கள் சருமம் தெளிவடைந்து புத்துணர்ச்சியாக இருப்பீர்கள்.

மேலும் படிக்க: இந்த அறிகுறிகள் இருந்தால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும் - இந்த சாற்றை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்

 

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற உடல்நலம், ஆரோக்கியமான வாழ்வு சார்ந்த  சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் HerZindagi Tamil

 

image source: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]