herzindagi
image

30 வயதிலும் பெண்கள் இரும்பு போல் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவும் உணவுகள்

30 வயதிற்குப் பிறகு பெண்கள் கண்டிப்பாக தங்கள் உணவில் திராட்சை மற்றும் தயிர் சேர்க்க வேண்டும். இந்த இரண்டு பொருள்களும் எலும்புகளுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது. 
Editorial
Updated:- 2024-10-28, 14:14 IST

பெண்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க உடலில் பல மாற்றங்கள் ஏற்படும்.  30 வயதிற்குப் பிறகு பெண்கள் பெரும்பாலும் எலும்புகள் மற்றும் மூட்டுகளில் வலிகளை சந்திக்க வேண்டி இருக்கும். எலும்புகளின் அடர்த்தி குறையத் தொடங்குவதால் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தையும் அதிகரிக்கிறது. அதே நேரத்தில் பிற்கால வாழ்க்கையில் மாதவிடாய் காலத்தில், எலும்புகளின் ஆரோக்கியமும் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற நிலையில் ஒவ்வொரு பெண்ணும் 30 வயதிற்குப் பிறகு கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தைப் பற்றி பார்க்கலாம். இது எலும்புகளை வலுவாக்க உதவும். 

தேவையான பொருள்கள்

 

மேலும் படிக்க: ஒரு மாதத்தில் 5 கிலோ எடையை குறைக்க சுலபமான இந்த நடை பயிற்சியை மேற்கொள்ளுங்கள்

 

  • ஒரு கப் சூடான பால்
  • இரண்டு முதல் நான்கு திராட்சைகள்
  • 1 தேக்கரண்டி தயிர்

 

செய்முறை

curd bone

 

  • முதலில் ஒரு கப் பாலை சூடாக்கவும்.
  • சிறிது ஆறியவுடன் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
  • இப்போது அதில் இரண்டு முதல் நான்கு திராட்சைகளை சேர்க்கவும்.
  • அதன்பிறகு அதில் ஒரு ஸ்பூன் தயிர் சேர்க்கவும்.
  • தயிர் சேர்த்தால் பாலில் நொதித்தல் செயல்முறை ஏற்படும்.
  • கிண்ணத்தை துணியால் நன்றாக மூடி வைக்கவும்.
  • இதை ஒரு இரவு அப்படியே விடவும்.
  • காலையில் பார்த்தாலே தயிர், திராட்சை தயாராக இருக்கும்.
  • இதனை மத்தியான உணவாக சாப்பிடலாம்.

தயிர் மற்றும் திராட்சையின் நன்மைகள்

dried-raisins-bowl-table_1150-27257

 

  • தயிர் மற்றும் திராட்சை மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். திராட்சை மற்றும் தயிர் இரண்டும் கால்சியத்தின் நல்ல ஆதாரங்கள்.
  • எலும்பு ஆரோக்கியத்திற்கு கால்சியம் அவசியம். இது எலும்புகளை வலுப்படுத்தவும் அவற்றின் கட்டமைப்பை பராமரிக்கவும் உதவுகிறது.
  • இது தவிர தயிர் பாஸ்பரஸின் நல்ல மூலமாக இருப்பதால் எலும்புகளுக்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது கால்சியத்துடன் சேர்ந்து எலும்புகளின் வலிமை மற்றும் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கலாம்.

 

மேலும் படிக்க: எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை மறைத்து வைத்திருக்கும் ஆரஞ்சு விதைகள்


இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]