herzindagi
ayurvedic tips for healthy body

உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்

உடல் ஆரோக்கியத்திற்காக உட்கொள்ள வேண்டிய 5 பயனுள்ள நிபுணர் பரிந்துரைக்கும் ஆயுர்வேத டிப்ஸ்களை பற்றி  இந்த பதிவில் படித்தறியலாம்...
Editorial
Updated:- 2023-04-28, 09:32 IST

ஒரே இடத்தில் உட்கார்ந்து மணிக்கணக்காகச் செலவிடுவது, உடல் செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பது இவையனைத்தும் நமது மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. முதுகுவலி, தலைவலி, சளி, இருமல், சோர்வு போன்ற சில பொதுவான உடல்நலப் பிரச்சினைகளை ப நாம் அனைவரும் பொதுவாக எதிர்கொள்கிறோம்.

வேதஸ் க்யூர் நிறுவனர் மற்றும் இயக்குநரான திரு. விகாஸ் சாவ்லா ஆயுர்வேத மூலிகைகளின் பட்டியலை நம்மிடம் பகிர்கிறார், இது பலரது பொதுவான உடல்நலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவியாக இருக்கும். எனவே மேலே படிக்கவும்.

இதுவும் உதவலாம்:தினமும் இலவங்கப்பட்டை டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

பெருஞ்சீரகம் விதைகள்

பெருஞ்சீரக விதைகள் ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் எளிதாகக் காணப்படுகின்றன ஒரு பொருள் ஆகும். பெருஞ்சீரகம் விதைகளை கடுமையான உணவுகளை சாப்பிட்ட பிறகு நல்ல செரிமானத்திற்கும், புத்துணர்ச்சிக்கும் பயன்படுத்துகிறோம், ஆனால் இந்த விதைகள் ஆன்டி பாக்டீரியா குணங்களை கொண்டிருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? உணவுக்குப் பிறகு இதை உட்கொள்வதைத் தவிர, வேறு பல வழிகளில் அவற்றை உட்கொள்ளலாம். தினசரி சோம்பு டீ குடிப்பது உடலுக்கு நல்லது. எனவே அவற்றை தினமும் உங்கள் உணவில் சேர்ப்பது நல்லது

நெல்லிக்காய்

amla for health

நெல்லிக்காய் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. உங்கள் தலைமுடி முதல் தோல் வரை அனைத்துக்கும் ஆரோக்கியம் தரும் பற்பல செயல்களில் இது பல்வேறு அதிசயங்களை செய்கிறது. இது உங்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் பார்வை திறனை மேம்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆம்லா ஒரு ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது மற்றும் உங்கள் நோய் எதிர்ப்பு செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது, இதற்கு காரணம் இதில் வைட்டமின் c சத்து அதிகம் நிறைந்த ஆதாரமாக உள்ளது. இந்திய நெல்லிக்காய் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது மற்றும் உங்கள் தினசரி செரிமானத்திற்கும் உதவுகிறது. நெல்லிக்காயை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள பல்வேறு வழிகள் உள்ளன நெல்லிக்காய் சாறு, பச்சை நெல்லிக்காய், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் நச்சு நீக்கி நீர்.

ஏலக்காய்

சமையலறைகளில் பயன்படுத்தப்படும் மற்றொரு பொதுவான மசாலா எலைச்சி எனப்படும் ஏலக்காய். இது பொதுவாக பெரிய மற்றும் சிறிய அளவுகளில் காணப்படுகிறது. இரண்டுக்கும் அதனதன் தனிப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஏலக்காய் எண்ணெய் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை அழிக்க உதவுகிறது. தினசரி உணவில் ஏலக்காயை உட்கொள்வது உங்கள் இதய செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் பல் சொத்தை மற்றும் ஈறு சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்துகிறது.

மஞ்சள்

மஞ்சள் அல்லது ஹல்டி சமையலறையில் இருக்க கூடிய மற்றொரு மசாலா பொருள் ஆகும். மஞ்சளில் மருத்துவ குணம் உள்ளது, இது நம் உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து நம்மை குணப்படுத்த உதவுகிறது. இது மூட்டு வலி, வீக்கம், தலைவலி, குறிப்பாக ஒற்றைத் தலைவலி போன்றவற்றைப் போக்க உதவுகிறது. இது இயற்கையாக இரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்கிறது. காய்ச்சல் இருந்தால் மஞ்சள் பால் அருந்தலாம். ஹல்டி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகளில் இருந்தும் இது நம்மை விடுபட வைக்கும்.

இதுவும் உதவலாம்:வெள்ளை வெங்காயம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

இலவங்கப்பட்டை

cinnamon for healthy body

இலவங்கப்பட்டை அதன் ஆன்டி பாக்டீரியா மற்றும் ஆன்டி ஃபங்கல் பண்புகளுக்கு பெயர் பெற்றது. இதன் அற்புதமான பண்புகள் ஆக்ஸிஜன் சேதத்தைத் தடுக்கின்றன. இலவங்கப்பட்டை பொதுவாக மரப்பட்டை வடிவில் மற்றும் தூள் வடிவில் காணப்படும் ஒரு தண்டு. இது உங்கள் வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இலவங்கப்பட்டை பொதுவாக காற்று புகாத டப்பாக்களில் வைத்திருந்தால் 9-12 மாதங்களுக்கு வீணாகாமல் அப்படியே இருக்கும். உங்கள் உணவில் எப்பொழுதும் புத்தம் புதிய இலவங்கப்பட்டை வைத்து கொள்ளுங்கள், அது எந்த அளவுக்கு புத்துணர்ச்சியாக இருக்கிறதோ அதே அளவுக்கு சிறந்ததும் கூட.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image source: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]