இந்திய உணவில் மிக முக்கியமான சில பொருட்கள் உள்ளன. வெங்காயம் அவற்றில் ஒன்று, பல்வேறு ஆராய்ச்சியின் படி, வெள்ளை வெங்காயத்தில் வைட்டமின் C, ஃபிளாவனாய்டுகள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் போன்ற நுண்ணூட்ட பண்புகள் உள்ளன. இது தவிர, இதில் நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மைகளும் உள்ளன.
ஆராய்ச்சியின் படி, வெங்காயத்திற்கு இரத்த சர்க்கரையை சமன் செய்யும் திறன் உள்ளது. மறுபுறம், வெள்ளை மற்றும் சிவப்பு வெங்காயம் இரண்டும் சுவையில் ஒரே மாதிரியானவை மற்றும் தேவைக்கேற்ப வெவ்வேறு உணவுகளில் பயன்படுத்தலாம். மேலும், இதை பச்சையாகவோ அல்லது சமைத்தோ இரு வழிகளிலும் சாப்பிடலாம்.
இதுவும் உதவலாம்:கோடை காலத்திற்கு ஏற்ற ஆயுர்வேதிக் டயட் டிப்ஸ்
வெள்ளை வெங்காயத்தில் சல்பர் கலவைகள் மற்றும் ஃபிளாவனாய்டு,ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் உள்ளன, அவை புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. வெங்காயத்தில் ஃபிசெடின் மற்றும் குர்செடின் போன்ற பண்புகள் உள்ளன, அவை கட்டி வளர்ச்சியைத் தடுக்கும்.
செரிமான பிரச்சனைகளை சமாளிக்க வெள்ளை வெங்காயத்தை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். ஏனெனில் இது வயிற்றுக்கு ஆரோக்கியமானதாக கூறப்படும் நார்ச்சத்து மற்றும் ப்ரீபயாடிக்குகளின் பண்புகளைக் கொண்டுள்ளது. வெங்காயத்தில் குறிப்பாக ப்ரீபயாடிக்ஸ் இன்யூலின் போன்ற பல கூறுகள் உள்ளன, அதனை வழக்கமாக உட்கொள்ள உங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
வெள்ளை வெங்காயம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. ஏனெனில் இதில் உள்ள குரோமியம் மற்றும் சல்பர் போன்ற தாதுக்கள் இரத்த சர்க்கரை மற்றும் குறைந்த இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் வெள்ளை வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட வேண்டும். வெங்காயத்தில் காணப்படும் குர்செடின் மற்றும் சல்பர் போன்ற சில கலவைகள் நீரிழிவு எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளன.
வயது ஏற ஏற பெண்களுக்கு எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். இத்தகைய சூழ்நிலையில், வெள்ளை வெங்காயத்தை உட்கொள்வது எலும்புகளை வலுப்படுத்த நன்மை பயக்கும். மன அழுத்தத்தைக் குறைப்பதைத் தவிர, வெள்ளை வெங்காயம் ஆன்டி ஆக்சிடென்ட் அளவை அதிகரிக்கவும், எலும்புகளை பலப்படுத்தவும் செயல்படுகிறது. எலும்பு தொடர்பான பிரச்சனைகளால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்றால், வெள்ளை வெங்காயத்தை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
இதுவும் உதவலாம்:தினமும் ஒரு பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?
வெள்ளை வெங்காயத்தில் செலினியம் உள்ளது, இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காய்கறிகளில் வெங்காயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. செலினியம் வைரஸ் அல்லது ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளை நீக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image source: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]