herzindagi
weight loss journey

Fat to Fit: இந்த பெண் 1 மாதத்தில் 10 கிலோ எடையை குறைத்த ரகசியம் தெரியுமா?

நீங்களும் 1 மாதத்தில் உடல் எடையை குறைக்க விரும்பினால், ஸ்ரேயாவின் வெயிட் லாஸ் ரகசியங்களை தெரிந்து கொள்ளலாம்…
Editorial
Updated:- 2023-10-13, 09:55 IST

"விடியாத இரவென்று எதுவுமில்லை, முடியாத துயரென்று

எதுவுமில்லை, வடியாத வெள்ளமென்று

எதுவுமில்லை, வாழாத வாழ்க்கையென்று

எதுவும் இல்லை, முடியாதது என்று எதுவும் இல்லை." நீங்கள் ஒரு விஷயத்திற்கு ஆசைப்பட்டால், மனதார அதற்கு முயற்சி செய்தால் நிச்சயமாக உங்கள் இலக்கை தடைகளை தாண்டி அடைய முடியும். 21 வயதான ஸ்ரேயா இதற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். ஜிம் இல்லாமல் தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்து 1 மாதத்தில் 10 கிலோ எடையை குறைத்துள்ளார். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஸ்ரேயாவின் குறிப்புகளை தெரிந்துகொள்ளலாம்.

உடல் பருமன் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, ஒருவரின் சுயமரியாதை மற்றும் நம்பிக்கையின் அளவையும் பாதிக்கிறது. 21 வயதான ஸ்ரேயாவிற்கு இந்நிலைகளை எதிர்த்துப் போராடுவதற்கு சற்று கடினமாகவே இருந்து வந்துள்ளது. உடல் பருமனால் முகப்பரு, PCOS போன்ற பல பிரச்சனைகளையும் அவர் எதிர்கொண்டுள்ளார். இதனால் மாதவிடாய் சுழற்சியும் சீராற்றதாக மாறியுள்ளது. 

இந்த பதிவும் உதவலாம்: வாழைத்தண்டு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

சோம்பேறித்தனமும் உறக்கமும் அவரை நம்பிக்கை அற்றவறாக மாற்றியது. மேலும், அவருடைய அலமாரியில் உள்ள ஆடைகள் எல்லாம் பொருந்தாமல் இறுக்கமாக மாறியது. இந்த கட்டத்தில் எடையை குறைக்க திட்டமிட்டுள்ளார் ஸ்ரேயா. இவரின் எடை இழப்பு ரகசியங்களை இன்றைய பதிவில் தெரிந்து கொள்வோம்…

பெயர்: ஸ்ரேயா சின்ஹா

தொழில்: மாணவர்

வயது: 21 வயது

உயரம்: 5 அடி 5 அங்குலம்

முந்தைய எடை : 70 கிலோ

எடை இழப்புக்கு பின் : 60 கிலோ

காலம் : 1 மாதம்

டயட் சீக்ரெட்

weight loss journey diet tips

நேரம் தவறி சாப்பிடுவது மற்றும் அதிகப்படியான வெளி உணவுகளை சாப்பிடுவதால் அவரின் எடை அதிகரித்துள்ளது. உடல் எடையை குறைக்க பலவிதமான உணவு திட்டங்களை ஸ்ரேயா பின்பற்றியுள்ளார். இருப்பினும் அவருக்கு எதுவும் பயன் தரவில்லை. இவர் புரதம் நிறைந்த குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டுள்ளார். உணவில் சர்க்கரை சேர்ப்பதை முற்றிலும் தவிர்த்துள்ளார். இதனுடன் வெளி உணவுகளை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து விட்டார் ஸ்ரேயா. அவரின் உணவு திட்டம் பின்வருமாறு.

  • காலை: ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர்.
  • காலை உணவு: 1 கிண்ணம் பால் மற்றும் கார்ன் ஃப்ளேக்ஸ்.
  • மதிய உணவு: 2 சப்பாத்தி, ஏதேனும் பச்சை காய்கறி, 1 கப் தயிர் மற்றும் 1 கப் பருப்பு
  • மாலை: 1 கப் கிரீன் டீ
  • இரவு உணவு: சாலட் மற்றும் ஒரு கிளாஸ் பால், டாஸ் செய்த பன்னீர், தந்தூரி சிக்கன் (வாரத்திற்கு ஒரு முறை).
  • இரவு உணவுக்கு கார்போஹைட்ரேட்டுகளை தவிர்த்துவிட்டு, புரதங்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே சாப்பிட்டுள்ளார்.

உடற்பயிற்சி சீக்ரெட்

தினமும் 1 மணிநேரம் விறுவிறுப்பான நடைப்பயிற்சி. பல சமயங்களில் இரவும் பகலும் நடைப்பயிற்சி செய்வாராம் ஸ்ரேயா. நடைபயிற்சி போன்ற உடல் செயல்பாடு எடை கட்டுப்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது கலோரிகளை எரிக்க உதவுகிறது. உங்கள் தினசரி வழக்கத்தில் 30 நிமிட விறுவிறுப்பான நடைப்பயிற்சியை சேர்த்தால், ஒரு நாளைக்கு 150 கலோரிகள் வரை எரிக்கலாம். நீங்கள் எவ்வளவு அதிகமாக நடக்கிறீர்களோ அவ்வளவு வேகமாக கலோரிகளை எரிக்க முடியும்.

உடல் எடையை குறைக்க தினமும் குறைந்தது பத்தாயிரம் படிகள் நடக்க வேண்டும். உங்கள் உணவு மற்றும் பிற செயல்பாடுகளை பொருத்து எடையை குறைக்க இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டி இருக்கலாம். உடற்பயிற்சி செய்வதற்கு விலை உயர்ந்த ஜிம், ஆடம்பர ஒர்க்கவுட் ஆடைகள் போன்ற எதுவும் அவசியம் இல்லை. உங்களுக்கு சௌகரியமான ஆடையை அணிந்து நடைப்பயிற்சி செய்தால் போதும். உடல் எடையை சுலபமாக குறைக்க முடியும்.

weight loss journey walking

ஃபிட்னஸ் சீக்ரெட்

  • ஒரு கிளாஸ் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து காலை உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • மைதா மற்றும் வெள்ளை சர்க்கரையை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.
  • உங்களுடைய கலோரி உட்கொள்ளலை கவனிக்கவும். ஒரு நாளைக்கு 1000-1500 கலோரிகள் வரை எடுத்துக் கொள்ளலாம்.

எடையை குறைக்க ஒரு சின்ன டிப்

உங்களுடைய ஃபோன் வால்பேப்பராக உங்களுடைய படத்தை வைத்துக்கொள்ளலாம். நீங்கள் துவண்டு போகும் போதெல்லாம் உங்களுடைய படத்தை பார்த்து உங்களால் முடியும் என்று சொல்லி கொள்ளுங்கள். விரைவில் ஃபிட் ஆன வால்பேப்பர் வைக்க முயற்சி செய்வோம். உங்கள் இலக்கை அடைய வாழ்த்துக்கள்.

இந்த பதிவும் உதவலாம்: சோம்பு பால் எதற்கெல்லாம் நல்லது தெரியுமா?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source: google & freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]