நீங்கள் வழக்கமாக குடிக்கும் பாலில் சரியான பொருட்களை சேர்ப்பதன் மூலம் அதை இன்னும் ஆரோக்கியமானதாக மாற்றலாம். சோம்பு பாலில் வைட்டமின்களும் ஆரோக்கியமும் நிறைந்துள்ளன. உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் சோம்பு பாலின் செய்முறை மற்றும் அதன் நன்மைகளை இன்றைய பதிவில் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: மார்பக புற்றுநோய்குறித்து பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் 1/2 டீஸ்பூன் சோம்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்பு இதனை வடிகட்டி வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.
சோம்பு பால் செரிமானத்திற்கு மிகவும் நல்லது. சோம்பு பால் குடிப்பதால் கிடைக்கக்கூடிய நன்மைகளை ஊட்டச்சத்து நிபுணரான ஜெயா ஜோஹ்ரி அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம்.
சோம்பில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் இரைப்பை நொதிகளின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் செரிமான செயல்முறையை சீராக்க உதவுகிறது. இந்த பாலை குடிப்பதால் உங்கள் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.
சோம்பு பால் கால்சியம், மாங்கனீஸ் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் நல்ல ஆதாரம் என்று நிபுணர் பகிர்ந்துள்ளார். சோம்பு பாலில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் யாவும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கின்றன.
பெரும்பாலும் உடலில் ஏற்படும் இரும்புச் சத்து குறைபாட்டால் ரத்த சோகை ஏற்படுகிறது. பெண்களை அதிகம் பாதிக்கும் இந்த இரத்த சோகையை தடுக்க சோம்பு பால் குடிக்கலாம். இதில் நிறைந்துள்ள இரும்பு மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் உடலில் இரும்பு சத்துத் தேவை பூர்த்தி செய்கின்றன மற்றும் ஹீமோகுளோபின் அளவுகளைப் பராமரிக்க உதவுகின்றன. இது இரத்த சோகை போன்ற உடல் நல பிரச்சினைகளைத் தடுக்கிறது.
பார்வை குறைபாடு அல்லது கண் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்கள் தினமும் ஒரு கிளாஸ் சோம்பு பால் எடுத்துக் கொள்ளலாம். கண்புரை போன்ற கண் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்க இது உதவுகிறது.
சோம்பில் கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன, இவை நம் இதய ஆரோக்கியத்திற்கு அத்யாவசியமானவை. சோம்பில் நிறைந்துள்ள இந்த பண்புகள் யாவும் இதயம் சார்ந்த நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன. இதை தினமும் குடித்து வர கொலஸ்ட்ரால் அளவுகளையும் சீராக வைத்துக் கொள்ளலாம்.
சோம்பில் உள்ள பாலிஃபீனால் எனும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கின்றன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவை சாப்பிடுவது பல்வேறு வகையான புற்றுநோய்கள், உடல் பருமன், இதய பிரச்சினைகள், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்க உதவுகின்றன.
ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோம்பு பால் மிகவும் நல்லது. இதில் உள்ள பைட்டோநியூட்ரியன்ட்கள் சுவாச பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
சோம்பில் நிறைந்துள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் முகப்பருவை தடுக்கவும் உதவுகின்றன. உங்கள் சரும அழகை பாராமரிக்கவும் பருக்கள் போன்ற சரும பிரச்சனைகளை தடுக்கவும் சோம்பு பாலை குடிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: ஒரே வாரத்தில் எடை குறைய, நிபுணர் பரிந்துரை செய்யும் அட்டகாசமான டயட் டிப்ஸ்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]