herzindagi
weight loss to do list by expert

Weight Loss Diet Tips : ஒரே வாரத்தில் எடை குறைய, நிபுணர் பரிந்துரை செய்யும் அட்டகாசமான டயட் டிப்ஸ்!

எடையை குறைப்பதில் அவசரம் வேண்டாம்.சரியான உணவு, தினசரி உடற்பயிற்சி மற்றும் உடல் செயல்பாடுகள் மூலம் முறையாக உடல் எடையை குறைக்க முயற்சி செய்வோம்…
Editorial
Updated:- 2023-10-09, 17:05 IST

இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன்  மிகவும் பொதுவான ஒரு பிரச்சினையாகி விட்டது. ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையால் உடல் எடை அதிகரிக்கிறது. இதைத்தவிர மன அழுத்தத்தாலும் உடல் எடை அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். உடல் எடையை வேகமாக குறைப்பதற்கு பதிலாக சரியான முறையில் குறைப்பது சிறந்தது. இதற்கு சரியான உணவுகளை எடுத்துக் கொள்வதுடன் தினசரி உடற்பயிற்சியையும் செய்ய வேண்டும்.

சரியான உணவுகளை தேர்வு செய்து சாப்பிட்டால், ஒரு வாரத்திலேயே உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றங்களை காணலாம். இதற்கு ஊட்டச்சத்து நிபுணர் சிம்ரன் கவுர் அவர்கள் பரிந்துரை செய்யும் இந்த டயட் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷம், சுரைக்காயில் இவ்வளவு நன்மைகளா!

7 நாட்களில் வீட்டிலிருந்தபடியே உடல் எடையை குறைக்க முடியுமா?

weight loss diet tip by expert

  • காலையில் எழுந்தவுடன் சீரகம் அல்லது தனியா ஊற வைத்த தண்ணீரை எடுத்துக் கொள்ளவும். தனியா மற்றும் சீரகத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் எழுந்தவுடன் குடிக்க வேண்டும்.
  • காலை உணவாக ஒரு கப் ஓட்ஸ் எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் நட்ஸ் மற்றும் விதைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு பதிலாக ஓட்ஸ், வாழைப்பழம், நட்ஸ் மற்றும் விதைகளை சேர்த்து அரைத்து ஸ்மூத்தியாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
  • காலை 11-12 மணிக்கு ஒரு கப் கிரீன் டீ அல்லது பிளாக் காபியை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு பதிலாக ஒரு பருவ கால பழத்தையும் சாப்பிடலாம். ஒவ்வொரு நாளும், இந்த மூன்று உணவுகளில் மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.
  • மதிய உணவுவிற்கு சமச்சீரான உணவுகளை எடுத்துக் கொள்ளவும். புரத தேவையை பூர்த்தி செய்ய முட்டை, பீன்ஸ் வகைகள், சிக்கன் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் கீரையையும் தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள். மதிய உணவிற்கு பிரவுன் ரைஸ், குயினோவா போன்றவற்றை முக்கிய உணவாக எடுத்துக் கொள்ளலாம். உங்களுடைய மதிய உணவில் சாலட் மற்றும் தயிரையும் சேர்த்துக் கொள்ளவும்.
  • மாலையில் ஒரு கப் கிரீன் டீ உடன் ஏதேனும் ஒரு பழத்தை எடுத்துக் கொள்ளவும். பழங்களுக்கு பதிலாக தாமரை விதைகளையும் ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.
  • இரவு உணவை மிதமானதாக பார்த்துக் கொள்ளுங்கள். காய்கறிகளுடன் கிரில் செய்யப்பட்ட சிக்கன், பருப்பு மற்றும் சாதம், சாலட் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் எடுத்துக் கொள்ளும் சாதத்தின் அளவை விட காய்கறிகள் மற்றும் பயிறு வகைகளின் அளவுகள் அதிகமாக இருக்க வேண்டும்.
  • இரவு தூங்கச் செல்வதற்கு முன் பாலுடன் மஞ்சள் மற்றும் மிளகு பொடி கலந்து எடுத்துக் கொள்ளலாம்.

உடல் எடையை குறைக்க டிப்ஸ் 

weight loss diet tip

நிபுணர் பரிந்துரை செய்துள்ள இந்த டயட் பிளானை பின்பற்றி ஒரு வாரத்தில் நல்ல மாற்றங்களை காணலாம். இதனுடன் ஒரு நாளைக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய உடல் எடை மற்றும் ஊட்டச்சத்து தேவையை பொறுத்து உணவின் அளவை அனுசரித்துக் கொள்ளவும். தினசரி உடற்பயிற்சியையும் தவறாமல் செய்யுங்கள். இந்த உணவு திட்டத்தில் வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகள் மட்டுமே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் உங்களுடைய உணவு முறையில் ஏதேனும் மாற்றங்களை செய்வதற்கு முன் ஊட்டச்சத்து நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டியது அவசியம்.

இந்த பதிவும் உதவலாம்: வேகமாக உடல் எடையை குறைக்க, இப்படி காபி போட்டு குடிங்க!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]