பாகற்காய்க்கு அடுத்தபடியாக, பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பலரும் வெறுக்கக் கூடிய காய்கறிகளில் சுரைக்காயும் ஒன்று. இன்றைய பதிவை முழுமையாக படித்த பிறகு, சுரைக்காயை இனி ஒதுக்காமல் சாப்பிட தொடங்குவீர்கள். இந்த எளிய காயில் இத்தனை ஊட்டச்சத்துக்களா, என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
சுரைக்காயில் என்னென்ன சத்துக்கள் உள்ளது தெரியுமா?
- 100 கிராம் சுரைக்காயில் 15 கலோரிகள் மட்டுமே உள்ளன.
- சுரைக்காயில் 96% நீர்ச்சத்து உள்ளது.
- இதில் நார்ச்சத்து, வைட்டமின் C, ரிபோஃப்ளேவின், துத்தநாகம், தயமின், இரும்பு சத்து, மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் குறைந்த அளவு கொழுப்பு மட்டுமே உள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: எடையை குறைக்க ஈஸியான வழி, இளநீர் குடியுங்கள்!
சுரைக்காயின் அசரவைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
- சுரைக்காயில் கரையக்கூடிய மற்றும் கரையாத உணவு நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், இது பைல்ஸ், வாயு மற்றும் மலச்சிக்கலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது எளிதில் ஜீரணமாகும்.
- சுரைக்காய் எடை இழப்புக்கு உதவும். காலையில் வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடிக்கும்போது, உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் உணவு நார்ச்சத்துக்களை பெறலாம் மற்றும் அதிகப்படியான பசியை கட்டுப்படுத்தலாம்.
- இதில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவாக உள்ளது.
- சுரைக்காயில் கிட்டத்தட்ட 96% நீர்ச்சத்து இருப்பதால், உங்கள் தாகத்தை தீர்க்க இது ஒரு சிறந்த வழியாகும். கூடுதலாக, இது உடல் சோர்வடைவதையும் தடுக்கிறது. உடலை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கவும், சோர்வைத் தடுக்கவும் சுரைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
- இதில் இரும்புச்சத்து, வைட்டமின் B, C போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
- சுரைக்காயில் காணப்படும் பொட்டாசியம் போன்ற முக்கிய தாதுக்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன மற்றும் இதய பிரச்சினைகளின் அபாயத்தை குறைக்கின்றன.
- சுரைக்காய், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்ற ஒரு சிறந்த காய்கறியாகும்
- குறைந்த கலோரி உடைய சுரைக்காய் சர்க்கரை நோயாளிகள், செரிமான பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாத அல்லது காயமடைந்தவர்களுக்கு ஏற்ற ஒரு ஆரோக்கியமான காய்கறியாகும்.

- கல்லீரல் வீக்கமடைந்து, உணவை சரியாக ஜீரணிக்கவும் ஒருங்கிணைக்கவும் முடியாவிட்டால், கல்லீரல் செயல்பாட்டை சமநிலைப்படுத்த ஆயுர்வேத மருத்துவர்களால் சுரைக்காய் பரிந்துரைக்கப்படுகிறது.
- சுரைக்காயில் உள்ள இயற்கையான சர்க்கரை உடற்பயிற்சியின் போது இழந்த ஆற்றலை மீட்டெடுக்க உதவுகிறது. சுரைக்காய் ஜூஸை உடற்பயிற்சிக்கு பின் எடுத்துக்கொள்வது தசைகளின் செயல்திறனை அதிகரிக்கிறது.
- சுரைக்காய் எலும்புகளை வலுப்படுத்துவதற்கும் ஆஸ்டியோபோரோசிஸின் அபாயத்தைக் குறைப்பதற்கும் சிறந்தது.
- ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் போது, நமது எலும்புகள் அதிகப்படியான உடையக்கூடியதாகவும் பலவீனமாகவும் மாறும். சுரைக்காயில் மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு மற்றும் பிற கனிமங்கள் இருப்பதால், அவை எலும்புகளை வலுப்படுத்தும் நன்மையைக் கொண்டுள்ளன.
- சுரைக்காய் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. இது வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஃபோலிக் அமிலம், உணவு நார்ச்சத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தாய் மற்றும் கருவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.
இந்த பதிவும் உதவலாம்: இரவு பாலில் நெய் கலந்து குடிப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation