வாழை மரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. வாழைப்பூவில் தொடங்கி வாழைத்தண்டுவரை வாழை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் ஆரோக்கியத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று சொல்லலாம். சர்க்கரை நோயைத் தடுக்கவும் என்றும் இளமையுடன் இருக்கவும் வாழைப்பூ சாப்பிடுங்கள். பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வாழை மரத்தின் இந்த பகுதிகளைப் போலவே வாழைத்தண்டிலும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
வாழைத்தண்டை சமைத்து சாப்பிடலாம் அல்லது ஜூஸாகவும் எடுத்துக் கொள்ளலாம். இதை ஜூஸாக எடுத்துக் கொள்ள விரும்புபவர்கள் வாழைத்தண்டை சிறிய துண்டுகளாக நறுக்கி, அதை நன்கு அரைத்து வடிகட்டி கொள்ள வேண்டும். இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடிக்கலாம். உயர் இரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்ற பல பிரச்சனைகளுக்குத் தீர்வு தரும் வாழைத்தண்டு பற்றிய தகவல்களை இன்றைய பதிவில் காணலாம். வாழைத்தண்டின் ஆரோக்கிய நன்மைகளை ஊட்டச்சத்து நிபுணரான சுவாதி பத்வால் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: ஒரே வாரத்தில் எடை குறைய, நிபுணர் பரிந்துரை செய்யும் அட்டகாசமான டயட் டிப்ஸ்!
உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க விரும்பினால் வாழைத்தண்டு ஜூஸை உங்கள் உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கலோரிகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகின்றன. அதேசமயம் வாழைத்தண்டு உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். வாழைத்தண்டில் காணப்படும் சிறப்பு வகை நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பை குறைத்து எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், மலச்சிக்கல், அசிடிட்டி, அஜீரணம் போன்ற செரிமானம் சார்ந்த பிரச்சினைகளிலிருந்து விடுபடவும் வாழைத்தண்டை உணவு சேர்த்துக் கொள்ளலாம். இது நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி பிரச்சனைக்கு சிறந்த பலன்களை கொடுக்கும். வாழைத்தண்டில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகின்றன.
வாழைத்தண்டில் நிறைந்துள்ள வைட்டமின் B6 மற்றும் இரும்பு சத்துக்கள் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவுகளை அதிகரிக்க உதவுகின்றன. அதேசமயம் வாழைத்தண்டில் காணப்படும் பொட்டாசியம் சத்துக்கள் கொலஸ்ட்ராலை நீக்கவும் உயிர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. இது இதயம் மற்றும் உடலின் தசைகளை வலுப்படுத்துகிறது.
சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்கள் வாழைத்தண்டு ஜூஸுடன் சிறிதளவு ஏலக்காயை சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். இது சிறுநீரகங்களை ரிலாக்ஸ் செய்து சிறுநீரக கல் பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது. வாழைத்தண்டு ஜூஸுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து தினமும் குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கலாம். இது சிறுநீரக கற்களுக்கான சிறந்த வீட்டு வைத்தியமாகும். இதனுடன் வாழைத்தண்டு சிறுநீரக பாதை தொற்றினால் ஏற்படும் வலி மற்றும் அசௌகரியத்தையும் குறைக்கிறது.
உடலின் இன்சுலின் அளவுகளை சீராக வைத்துக் கொள்ள வாழைத்தண்டு உதவும். இரத்த சர்க்கரையின் அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க வாழைத்தண்டு ஜூஸை வடிகட்டாமல் குடிக்கலாம். இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. நாவல் பழம், கொய்யா இலைகள் போலவே வாழைத்தண்டு ஜூஸும் சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த வீட்டு வைத்தியமாக இருக்கும். இதை தவறாமல் உங்களுடைய உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: மார்பக புற்றுநோய்குறித்து பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]