புதிய வருடப்பிறப்பு நெருங்குவிட்டதால் வழக்கம் போல இந்தாண்டு சொதப்பிவிட்டோம் வரும் ஆண்டில் ஆவது தீர்மானங்கள் எடுத்து உடல்எடையை குறைக்கவோ அல்லது உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடிவெடுத்திருப்போம். தீர்மானம் எடுத்துவிட்டோமே என்பதற்காக இரண்டு நாட்களுக்கு உடற்பயிற்சி செய்வோம் அதன் பிறகு சோம்பேறி தனத்தால் விட்டுவிடுவோம். ஆனால் இந்தாண்டு அப்படி நடக்காமல் இருக்க சில குறிப்புகளை உங்களுக்காக வழங்குகிறோம்
சரியான திட்டமிடல்
இந்தாண்டு பெரிய பெரிய திட்டங்களைத் தீட்டுவதற்கு பதிலாக சரியாக திட்டமிட்டு அதை கொஞ்சம் கொஞ்சமாக செயல்படுத்த ஆரம்பியுங்கள். நீங்கள் ஒரே நாளில் ஜிம் ஆர்வலராக மாறிவிட வேண்டாம். அதற்கு பதிலாக தினமும் 20 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி செய்யத் தொடங்குங்கள்.
இதை உங்களுக்குள்ளேயே வாக்குறுதியாக எடுத்துக் கொண்டு காப்பாற்றுங்கள். மதிய உணவு அல்லது இரவு உணவில் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள். தொடர்ச்சியாக இதைப் பின்பற்றுவது எப்படி என கண்டறியுங்கள். இதன் தொடக்கத்தில் நீங்கள் ஒரு கிலோ கொழுப்பை மட்டுமே இழக்க முடியும்.
மேலும் படிங்கWalking Exercise : ஆரோக்கியமான வாழ்விற்கு வித்திடும் நடைபயிற்சி
மிகப்பெரிய விஷயங்களை செய்ய வேண்டும் எனில் அதற்கு சிறிய தொடக்கங்கள் தேவை. அதன் பிறகு அதில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம். உடற்பயிற்சி செய்ய வேண்டும் என தீர்மானங்கள் எடுத்து நாம் தோல்வி அடைவதற்கு முக்கிய காரணம் சாக்குபோக்கு. ஒவ்வொரு முறையும் சாக்குபோக்கு சொல்லி தீர்மானங்களை முறையாக பின்பற்றத் தவறிவிடுகிறோம்.
சாக்கு சொல்லுவதை நிறுத்திவிட்டு தெளிவாகத் திட்டமிடுங்கள். நேரமின்மை பிரச்சினை ஏற்பட்டு மாலைநேர உடற்பயிற்சி சவாலானதாக இருந்தால் குறிப்பிட்ட பயிற்சியை மேற்கொள்ள சீக்கிரம் எழுந்திடவும். பலர் அதிகாலை நான்கு மணி அல்லது ஐந்து மணிக்கு எழுந்து உடற்பயிற்சிக்கு செல்வதை பார்த்திருப்போம். இவை அனைத்திற்குமே திட்டமிடல் தான் காரணம்.
இன்று வேலை அதிகமாக இருக்கிறது நாம் நிச்சயம் சோர்வடைவோம் உணவு ஆர்டர் செய்து கொள்ளலாம் என நினைப்பதற்கு பதிலாக காலையிலேயே உணவைத் தயாரித்துவிடுங்கள். இதற்கு அட்டவணை ஒன்றை தயாரித்து முன்கூட்டியே திட்டமிட்டுவிட்டால் சாக்குபோக்கு சொல்வதை தவிர்த்து விடலாம்.
மேலும் படிங்கGet Pregnant : கர்ப்பம் தரிக்க என்ன செய்வது ? மகளிர் கவனத்திற்கு !
உங்களின் முயற்சிகளை ஆதரிக்கும் நபர்களிடம் பழகுங்கள். இது ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதற்கு உதவிடும். ஆன்லைன் நண்பர்களும் இதற்கு உதவிகரமாக இருக்கலாம். அதே நேரம் உங்கள் குடும்பத்தினருடம் ஆதரவு கேளுங்கள். உங்களுடைய சுற்றுச்சுழல் சவால் அளிக்கும் வகையில் மாற்றி அதைத் திறம்பட சந்திப்பதற்கு திட்டமிட்டால் மாற்றங்கள் எளிதாகிவிடும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation