நாம் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவரை அணுகினால் அவர் நம்மை கண்டவுடன் கூறும் வார்த்தைகளில் இதுவும் ஒன்று. வயதிற்கு ஏற்ற எடையை விட சற்று அதிகமாகத் தோன்றுகிறீர்கள், அதனால் தினமும் நடைபயிற்சி செல்லும் அது மிக உதவிகரமாக அமையும் என தெரிவிப்பார். நடைபயிற்சி மேற்கொள்வது உடல் ஆரோக்கியத்தில் எவ்வளவு முக்கியமானது என இந்தக் கட்டுரையில் பகிர்ந்துள்ளோம்
தினமும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் ?
இது முற்றிலும் வயது சார்ந்தது. 25 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவராக இருந்தால் தினமும் ஆறாயிரம் படிகள் நடப்பது மிகவும் குறைவாகும். அதே நேரத்தில் 85 வயது முதியவராக இருந்து கொண்டு ஐந்தாயிரம் படிகள் நடந்தால் அது மிகவும் அற்புதமானது. நடைபயிற்சி நம் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதி என நினைவில் கொள்ள வேண்டும்.
நடைபயிற்சியின் விளைவு
நமது உடல் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதற்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம் என்பதை புரிந்திருக்க வேண்டும். இரத்தத்தில் சர்க்கரை அளவு நாள் முழுவதும் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும்.
உணவு சாப்பிட்ட பிறகு ஐந்து நிமிடங்களுக்கு நடைபயிற்சி செல்வது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும். இதற்காக மட்டுமல்ல நடைபயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, எடை இழப்புக்கு உதவுகிறது, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது, மூட்டுகளை பாதுகாக்கிறது.
மேலும் இது புற்று நோயின் அபாயத்தைக் குறைக்கிறது. வாரத்திற்கு இரண்டரை முதல் ஐந்து மணிநேரம் தீவிர நடைபயிற்சி மேற்கொள்வது பெருங்குடல், மார்பகம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற சில புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்க உதவும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் படிங்க Diabetes in Women : பெண்களே உஷார்! சரியா தூங்கலைன்னா நீரிழிவு நோய் ஏற்படும்
நடைபயிற்சிக்கு சிறந்த நேரம் எது?
மாலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்வது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும் என கூறப்படுகிறது. சூரியன் மறையும்போது அது நாள் தொடங்குகிறது அல்லது முடிவடைகிறது என கண்கள் மூலம் மூளைக்கு சமிக்ஞைகள் கிடைக்கின்றன. இது இயல்பானதே. அதன்படி நாம் பகல் நேரங்களில் சுறுசுறுப்பாக இருப்போம், இரவு நேரத்தில் நன்றாக ஓய்வெடுப்போம்.
அதிகாலையில் நடப்பதால் ஏற்படும் விளைவுகள்
மேசையில் அமர்ந்தபடியே நீண்ட நேரம் செலவிடுவது உங்கள் மனநலத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இதற்கு நடைபயிற்சி உதவிகரமாக இருக்கும். நடைபயிற்சி உடலில் எண்டோர்பின்களை வெளியிடுவதன் மூலம் மனநிலையை மேம்படுத்துகிறது என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
மேலும் படிங்கBrisk walk : விறுவிறுவென நடங்கப்பா! மருத்துவ ஆய்வில் முக்கிய தகவல்
இறுதியாக நடைபயிற்சி மேற்கொள்ளும்போது அதிக அளவில் படபடப்போ, மூச்சு வாங்கும் அறிகுறியோ தென்பட்டால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation