herzindagi
walvu

Brisk Walking : விறுவிறுவென நடங்கப்பா! மருத்துவ ஆய்வில் முக்கிய தகவல்

விறுவிறுவென நடப்பதால் உடலுக்குப் பல நன்மைகள் கிடைப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.எனினும் அப்படி நடக்கும்போது கவனமாக இருப்பது அவசியம்.  
Editorial
Updated:- 2024-02-24, 07:54 IST

விறுவிறுவென நடப்பதை வழக்கமாக்கி கொண்டால், அது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பெரும் உதவிகரமாக இருக்கும். ஏன் என்பதை அறிய இந்தக் கட்டுரையைப் படியுங்கள். விறுவிறுவென நடப்பது சக்திவாய்ந்த உடற்பயிற்சியாகும்.ஏனென்றால் அது உடல் ஆரோக்கியத்தின் நன்மைகளுக்கான திறவு கோளாக இருக்கிறது. நிதானமாக உலாவுவதை போலன்றி விறுவிறுவென நடைபயிற்சி மேற்கொள்வது இதயத் துடிப்பின் வேகத்தையும், சீரான சுவாசத்தையும் உயர்த்தும். விறுவிறுவென நடப்பதால் கிடைக்கும் பலன்களுக்காக ஆர்வக்கோளாறில் பல தவறுகள் செய்கிறோம்.

விறுவிறுவென நடப்பதன் பலன்கள் : 

இருதய ஆரோக்கியம் :

விறுவிறுவென நடப்பது இருதயத்திற்கான சிறந்த உடற்பயிற்சியாகும். இதனால் இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படுகிறது. விறுவிறுவென நடப்பதால் இதய நோய் அபாயம் குறையும், இரத்த அழுத்தம் குறையும், உடலில் இரத்த ஓட்டம் மேம்படும். 

உடல்எடை பராமரிப்பு :

எப்போதும் விறுவிறுவென நடப்பதன் மூலம் உடலில் கலோரிகள் குறையும். உடல் எடையைப் பராமரிக்க அல்லது குறைக்க இது ஒரு சிறந்த வழியாகும். 

மனநிலை மேம்பாடு :

விறுவிறுவென நடப்பதால் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள்  “எண்டோர்பின்கள்” வெளியீடு தூண்டப்பட்டு உடலின் இயற்கையான மனநிலை மேம்படுகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும். பதற்றம் மற்றும் மனச்சோர்வு ஆகியவை குறைந்து மனநலன் மேம்படுகிறது. 

மேலும் படிக்க: சருமத்தை புதுப்பிக்க உதவும் பராமரிப்பு குறிப்புகள் !

மூட்டுவலி பிரச்சினைக்குத் தீர்வு :

விறுவிறுவென நடந்தாலும் கூட மூட்டுகளில் மென்மையான தாக்கமே இருக்கும். மூட்டுகளில் நெகிழ்வுத்தன்மை அதிகரிப்பததோடு மட்டுமின்றி தசைகளும் வலுப்படுகின்றன.

மேம்படுத்தப்பட்ட சுவாச செயல்பாடு :

விறுவிறுவென நடந்தால் நுரையீரல் திறன் அதிகரிக்கிறது, சுவாச செயல்பாடும் மேம்படுகிறது. ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறு உள்ளவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க: தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து குளித்தால் இத்தனை நன்மைகளா ?

தவிர்க்க வேண்டிய தவறுகள் :  

மோசமான தோரணை :

தலையை நிமிர்த்தித் தோள்களைத் தளர்வாக வைத்து நல்ல தோரணையுடன் விறுவிறுவென நடக்க வேண்டும். மிகவும் முன்னோக்கி சாய்ந்து நடக்கக் கூடாது.

விறுவிறுவென நடக்கும் முன்பாகச் சில நிமிடங்களுக்கு வார்ம் அப்செய்யுங்கள், நடந்து முடிக்கும் தருவாயில் ஸ்ரெட்சிங் செய்யுங்கள். உடலைத் தளர்வாக வைத்திருக்காமல் விறுவிறுவென நடந்து கொண்டே இருந்தால் தசைபிடிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

மூட்டுகள், தசைகள் வலிக்கும் அளவிற்கு மிகவும் அழுத்தி விறூவிறுவென நடக்க வேண்டாம். 

விறுவிறுவென நடப்பதால் கிடைக்கும் முழு பயன்களை அடைய நிலைத்தன்மை முக்கியம்.

காலணியின்றி விறுவிறுவென நடக்க வேண்டாம். கால்களுக்கு உகதா ஷூ அணிந்து விறுவிறுவென நடந்தால் அது கால் வலிக்கு வழிவகுக்கும்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]