herzindagi
Main skincleansing

சருமத்தை புதுப்பிக்க உதவும் பராமரிப்பு குறிப்புகள் !

தீபாவளி கொண்டாட்டங்களின் போது சருமம் பாதிப்படைந்திருக்க வாய்ப்புண்டு. சருமத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும் குறிப்புகளை இங்கே பகிர்ந்துள்ளோம்.
Editorial
Updated:- 2023-12-12, 22:36 IST

தீபாவளி கொண்டாட்டங்களுக்கு இடையே நம் சருமம் பல விஷயங்களை எதிர்கொண்டு இருக்கும். முக அலங்காரம் , பட்டாசுகளில் இருந்து வெளியான வேதிப் பொருட்கள் சருமத்தை பாதித்திருக்க வாய்ப்புண்டு. இதனால் தீபாவளிக்கு பிறகு சருமத்தை புத்துயிர் பெறச் செய்யும் உதவிக்குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்.

 skin

தொடர்ச்சியான முக அலங்காரம் செய்வது , ஜங்க் ஃபுட் சாப்பிடுவது மற்றும் காற்று மாசடைதல் சருமத்தின் இயல்பை மோசமாக்குகின்றன. சருமம் இயல்பு நிலையை அடைய ஒரு இடைவெளி தேவைப்படுகிறது. தீபாவளி அன்று நண்பர்களுடன் ஊர் சுற்றி , கிடைத்த நேரத்தில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி களைப்படைந்தவுடன் புத்துணர்ச்சி பெற குளியல் போட விரும்புவோம்.

அதுபோலவே நமது சருமமும் வேதிப் பொருட்களில் இருந்து விடுபட்டு புத்துணர்வு பெற விரும்பும். அலங்காரத்திற்கு பயன்படுத்தும் பொருட்கள் , காற்று மாசுபாடு ஆகியவை சருமத்தை வறட்சியாக்கி மந்தமான தோற்றத்தை அளிக்கும்.எனவே சருமத்தை புத்துணர்ச்சியடையச் செய்து , அதன் பொலிவை மீட்டெடுக்க சில பராமரிப்பு குறிப்புகளை பகிர்ந்துள்ளோம்.

அலங்காரம் தவிர்க்கவும்

பண்டிகை நாட்கள் முடிந்து விட்டதால் சருமம் புத்துணர்வு பெறும் வரை அலங்காரம் செய்வதை தவிர்த்திடுங்கள். அலங்காரம் செய்வதை தவிர்ப்பதால் சருமம் கொஞ்சம் கொஞ்சமாக சுவாசித்து , இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான வேலைகள் நடக்கும். இந்த இடைப்பட்ட காலத்தில் பழங்கள் பயன்படுத்தியும் சருமத்தை புத்துணர்ச்சி பெறச் செய்யலாம். 

 skin

சிடிஎம் பின்பற்றவும்

சிடிஎம் என்றால் சருமத்தை சுத்தப்படுத்தி , ஈரப்பதமாக வைத்து இயல்பு நிலைக்கு கொண்டு வரும் நடைமுறையாகும். ஆங்கிலத்தில் சிடிஎம் என்றால் ( Cleansing , toning and moisturising) எனப் பொருள். சருமம் மீண்டும் பளபளப்பாக தென்படுவதற்கு சிடிஎம் நடைமுறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். முதலில் பால் போன்ற இயற்கையான பொருளை கொண்டு சருமத்தை சுத்தப்படுத்துங்கள், அடுத்ததாக ரோஸ் வாட்டர் டோனர் பயன்படுத்தவும் , சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கு ரசாயனம் இல்லா மாய்சரைசர் உபயோகிக்கவும். 

மேலும் படிங்க குளிர்காலத்தில் புத்துணர்ச்சி அளிக்கும் டாப் 5 சூப்ஸ்

நல்ல உறக்கம் 

தீபாவளி கொண்டாட்டங்களுக்காக அங்கும் இங்கும் சுற்றி தூக்கத்தை தொலைத்திருப்பீர்கள். அது உடல் சோர்வை ஏற்படுத்துவத்தோடு , சருமத்திக்கும் பாதிப்பை உண்டாக்குகிறது. தற்போது கொண்டாட்டங்கள் முடிந்து விட்ட காரணத்தால் , அடுத்து வரும் நாட்களில் நன்றாக உறங்கி உடல் சோர்வை போக்குங்கள். ஏனென்றால் உறங்கும் போது சருமம் தன்னை சரி செய்து கொள்கிறது. 

 skin

கிரீன் டீ

கிரீன் டீ பருகவும். இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடலுக்கும் , சருமத்திற்கும் நன்மை பயக்குகின்றன. கிரீன் டீ பருகலாம் அல்லது அதை முகத்தில் தடவலாம். ஏனென்றால் கிரீன் சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாத்து , இயற்கையான பளபளப்பை அளிக்கிறது.

 skin

மேலும் படிங்க குளிர்காலத்தில் அதீத பொடுகு பிரச்சினையா ? கற்றாழையை பயன்படுத்தி கவலையை தீர்த்திடுங்கள்

ஷீட் மாஸ்க் பயன்பாடு

முகத்தில் நீரேற்றை உறுதி செய்யும் ஷீட் மாஸ்க்கை பயன்படுத்துங்கள். சருமத்தை புத்துணர்வு பெறச் செய்திட ஷீட் மாஸ்க் பெரும் உதவிகரமாக அமையும். இது சருமத்திற்கு தேவையான நீரேற்றை தந்து நீண்ட கால பளபளப்பை தருகிறது. சந்தைகளில் பல விதமான ஷீட் மாஸ்க் உள்ளன. அவற்றில் எது உங்கள் சருமத்திற்கு உகந்ததோ அதை வாங்கி பயன்படுத்துங்கள். இரவு நேரத்தில் ஷீட் மாஸ்க் பயன்படுத்துங்கள் , அப்போது தான் அதில் உள்ள பொருட்கள் சருமத்தால் உறிஞ்சப்பட போதுமான நேரம் கிடைக்கும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]