ஒரு வருடத்திற்கும் மேலாக கருத்தரிக்க முயற்சி செய்து எதுவும் நடக்கவில்லை என்றால் கவலைப்பட தேவையில்லை. நீங்கள் கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்க உதவும் சில குறிப்புகள் இங்கே பகிரப்பட்டுள்ளன
- அடிக்கடி உடலுறவு கொள்ளுங்கள்
- நீங்கள் தினமும் உடலுறவுக்கு முயற்சிக்கும் போது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது
- அண்டவிடுப்பு எனும் மாதவிடாய் சுழற்சியின் கட்டத்தில் உடலுறவு கொள்ளுங்கள்
- தினமும் உடலுறவு கொள்வது சாத்தியமில்லை அதே நேரம் மாதவிடாய் முடிந்தவுடன் வாரத்திற்கு மூன்று முறை உடலுறவு கொள்ளுங்கள். இது நீங்கள்
- கருவுறும்போதும் உடலுறவு வைத்து கொண்டதை உறுதி செய்யும்.
- உடலுறவுக்குப் பிறகு 15 முதல் 20 நிமிடங்கள் படுக்கையில் இருங்கள், கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்த நேரம் விந்தணுவை கருப்பை வாயில் சென்று தங்க அனுமதிக்கிறது.
- உடலுறவு கொண்ட சில நிமிடங்களிலேயே கழிவறைக்கு செல்வதை தவிர்க்கவும்.

பெண்கள் எடை பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதிக எடை மற்றும் குறைந்த எடை கொண்ட பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி கட்டத்தில் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
இதை நீங்கள் ஆரோக்கியத்திற்கான ஆலோசனை வழங்கும் சுகாதார நிபுணரிடமும் கூறலாம். அந்த நபர் ஆரோக்கியமான கர்ப்பத்திற்கான வாய்ப்புகளை மேம்படுத்த உங்களுக்கு உதவலாம்
ஸ்பைனா பிஃபிடா மற்றும் பிற நரம்புக் குழாய் குறைபாடுகளின் அபாயத்தைக் குறைக்க கருத்தரிப்பதற்கு முன்பு ஃபோலிக் அமிலத்தை எடுத்துக் கொள்ளுமாறு உங்கள் சுகாதார நிபுணர் ஆலோசனை கூற வாய்ப்புண்டு.
மேலும் படிங்கIce Bath : குளிர்ந்த நீரில் குளியல் போடுவதால் கிடைக்கும் நன்மைகள்
கருத்தரிக்கும் வாய்ப்புகளை மேம்படுத்த:
புகை பிடிக்காதீர்
புகையிலையானது கருவுறுதலில் பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. நீங்கள் புகைபிடிப்பவராக இருந்தால் கருத்தரிக்க முயற்சிக்கும் முன் அதை நிறுத்திட வேண்டும்.
மது அருந்தக் கூடாது
அதிகமாக மது அருந்துதல் கருவுறுதல் குறைவதற்கு வழிவகுக்கும். நீங்கள் கருத்தரிக்க விரும்புகிறீர்கள் என்றால் மதுவைத் தவிர்ப்பது நல்லது.
காஃபின் கட்டுப்பாடு
தினமும் 200 மில்லிகிராம்களுக்கு குறைவான காஃபின் உட்கொள்வதால் கருவுறுதல் பாதிக்கப்படாது என்று ஆராய்ச்சி கூறுகிறது. அதாவது தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை காபி அருந்தலாம்.
கடுமையான உடற்பயிற்சி தவிர்க்கவும்
வாரத்திற்கு ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக தீவிரமான உடற்பயிற்சி செய்தால் அது அண்டவிடுப்பு எனும் மாதவிடாய் சுழற்சியின் கட்டத்தில் ஏற்படும் குறைவுடன் தொடர்புடையதாகும்
மேலும் படிங்கMuscle Cramps : அடிக்கடி தசைபிடிப்பு ஏற்படுகிறதா? இதை செய்யுங்க வலி சிட்டா பறந்திடும்
பொதுவாகவே பெரும்பாலான ஆரோக்கியமான தம்பதிகள் ஒரு வருடத்திற்குள் கருத்தரிக்கிறார்கள். 35 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருக்கும் பட்சத்தில் ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக கருத்தரிக்க முயற்சி செய்திருந்து உங்களுக்கோ அல்லது உங்கள் துணைக்கோ கருவுறுதல் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் கட்டாயம் ஒரு சுகாதார நிபுணரிடம் ஆலோசனை பெறவும்
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation