ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டத்துல அதிரடி வீரர் கிலென் மேக்ஸ்வெலுக்கு கால்களில் தசைபிடிப்பு ஏற்பட்டு நடக்க முடியாத நிலையிலும் கூட அவர் எதையும் பொருட்படுத்தாமல் விடாமுயற்சியுடன் போராடி அணியை வெற்றி பெறச் செய்தார். எல்லாருக்கும் ஒரு ஆச்சர்யம் எப்படி இது சாத்தியம்னு. விளையாடும்போது மட்டுமல்ல அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் போதும் நமக்குத் தசைபிடிப்பு , முதுகுபிடிப்பு ஏற்படுவது சாதாரணம். அத்தருணங்களில் என்ன மாதிரியான நீராதாரம் அல்லது சத்துணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தசைபிடிப்பானது பெரும்பாலான நேரங்களில் கால்களிலேயே ஏற்படும். தசைபிடிப்பு ஏற்படும் போது நம்மால் இரண்டு அடி கூட நகர இயலாது , தசைபிடிப்பானது சில விநாடிகள் முதல் நிமிடக் கணக்கில் நீடிக்கும். தசைபிடிப்பு நீங்கினாலும் அந்த இடத்தில் ஒரு சில மணி நேரங்கள் முதல் நாட் கணக்கில் வலியின் தாக்கம் இருக்கும். தசைபிடிப்பானது தானாகவே சரியாகக் விடும். ஆனால் அடிக்கடி தசைபிடிப்பு ஏற்பட்டு , வலி தொடருமானால் நீங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.
கால்களில் ஒரு தசையை அதிகளவு பயன்படுத்தி உழைக்கும் போது தசைபிடிப்பு ஏற்படும். வியர்வை மூலம் உடலில் திரவங்களை இழப்பது அல்லது ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமருவது தசைபிடிப்பிற்கான காரணிகளாக அமைகின்றன. இவை மட்டுமே காரணங்கள் என்றும் கூற முடியாது.
ரத்த ஓட்டத்தில் தடை : தீவிரமாக உடற்பயிற்சி செய்யும்போது கால்களுக்கு ரத்தத்தை கொண்டும் வரும் தமனிகள் குறுகலாகி தசைபிடிப்பு ஏற்படும். அப்போது உடனடியாக உடற்பயிற்சி செய்வதை நிறுத்தினால் தசைபிடிப்பு போய்விடும்.
நரம்புச் சுருக்கம் : முதுகுத்தண்டில் உள்ள நரம்புகளின் அதிக அழுத்தம் ஏற்படும் போதும். அப்போது நீங்கள் நடந்தால் வலி மேலும் மோசமாகிவிடும். சற்று முன்னோக்கி வளைந்து நடப்பதன் மூலம் தசைபிடிப்பை குறைக்கலாம்.
உடலில் கணிம குறைபாடு : உண்ணும் உணவில் பொட்டாசியம் , மெக்னீஸியம் , கால்சியம் மிகக் குறைவாக இருந்தால் தசைபிடிப்பு ஏற்படும். அதே நேரத்தில் அதிக ரத்த கொதிப்பிற்கு நீங்கள் உட்கொள்ளும் மாத்திரைகளால் அதிகளவு சிறுநீர் கழிக்க நேரிடும் . இதன் மூலமாகவும் உடலில் உள்ள கணிமங்கள் குறையலாம்.
மேலும் படிங்க Face Fat Reduction - முகத்தில் கொழுப்பை குறைப்பது எப்படி?
இவற்றைப் பின்பற்றினால் தசைபிடிப்பை தவிர்க்கலாம்.
அதிகளவு தண்ணீர் அருந்துவது : தசைகள் நன்றாக வேலை செய்வதற்கு திரவங்கள் தேவைப்படுகின்றன. அதனால் அதிகளவு தண்ணீர் அல்லது கால்சியம் , மெக்னீஸியம், பொட்டாசியம் அடங்கிய திரவங்களை அருந்துவது நல்லது. ஆனால் காஃபீன், மது அருந்தக் கூடாது. எலுமிச்சை சாறு , குளூகோஸ் , சிறிதளவு உப்பு கலந்த தண்ணீர் ஆகியவற்றை அருந்தலாம்.
மேலும் படிங்க Never Skip Breakfast : காலை உணவை தவிர்த்தால் இத்தனை ஆபத்தா
தசை பயிற்சி : கை, கால்களுக்குரிய ஸ்ட்ரெட்சிங். இரவு நேரத்தில் தூங்கும்போது தசைபிடிப்பு ஏற்படுவதை தவிர்க்கக் கட்டிலில் ஸ்ட்ரெட்சிங் செய்யலாம். தினமும் சிறிது நேரம் சைக்கிள் ஓட்டுவதன் மூலமாகவும் தசைபிடிப்பிலிருந்து தப்பிக்கலாம்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]