வயிறு தொப்பையாகத் தெரிந்தால் கூட பரவாயில்லை சமாளித்து விடலாம். ஆனால் முகத்தில் தொப்பை விழுந்து விட்டதால் துரதிர்ஷ்டவசமாக அதில் உள்ள கொழுப்பைக் குறைப்பது அவ்வளவு எளிதல்ல.
சில பயிற்சிகள் செய்து முகத்தில் உள்ள கொழுப்பைக் குறைப்பதே உரிய தீர்வாகும். உடனடியாக எடையைக் குறைக்க வேண்டும் என நினைத்துத் தவறான பயிற்சிகளில் ஈடுபடக் கூடாது. சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியை உள்ளடக்கிய ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வதே உடல் எடையைக் குறைக்க ஒரே வழி. உங்கள் முக தசைகளை வலுப்படுத்தவும், சுருக்கங்களை நீக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும் சில பயிற்சிகளை நாங்கள் பதவிட்டுள்ளோம்.
கன்னத்தை தூக்குதல்
- எங்காவது உட்கார்ந்து அல்லது நின்று உங்கள் முதுகை நேராக வைத்துக்கொள்ளவும்.
- அடுத்ததாக உங்கள் தலையை பின்னே சாய்த்து வாயை மூடிக்கொண்டு கழுத்தை முடிந்தவரை ஸ்ரெட்ச் செய்யவும்
- உங்கள் கீழ் உதட்டை மேல் உதட்டின் மேல் வைக்க முயற்சிக்கவும்.
- இந்த பயிற்சியை செய்யும் போது நீங்கள் மேலே பார்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- இதே நிலையில் ஐந்து விநாடிகளுக்கு நீடித்திருங்கள்
- தற்போது தலையை முன்னே கொண்டு வந்துவிடுங்கள். நீங்கள் இதை ஒரு முறை சரியாக செய்திருக்கிறீர்கள்
- இதே போல பத்து முதல் பதினைந்து முறை செய்யவும்.
மீன் முகம்
- உங்கள் வாயை மூடிவிட்டு, உங்கள் கன்னங்களை ஒரு மீன் முகத்தைப் போல உள்ளே உறிஞ்சவும்.
- இந்த நிலையில் இருக்கும் போது சிரிக்க முயற்சி செய்யுங்கள்.
- பதினைந்து முதல் இருபது விநாடிகளுக்கு இதே நிலையில் தொடருங்கள். தற்போது உங்கள் கன்னம் மற்றும் தாடை பகுதி எரிவதை உணர்வீர்கள்.
- அடுத்ததாக இயல்பு நிலைக்கு திரும்பி விடுங்கள்
- தினமும் குறைந்தபட்சம் ஐந்து முறை இப்படி செய்யுங்கள்

புருவங்களை உயர்த்தவும்
- கண்களை அகலமாகத் திறந்து, உங்கள் புருவங்களை மேலே உயர்த்தி அது சுருங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
- தற்போது புருவங்களுக்கு இடையில் உங்கள் ஆள்காட்டி மற்றும் நடுவிரலை ஒன்றாக வைக்கவும்.
- மற்ற விரல்கள் மற்றும் உள்ளங்கையை முகத்தில் வைக்கவும்.
- உங்கள் ஆள்காட்டி மற்றும் நடுவிரலின் உதவியுடன் உங்கள் புருவங்களை மேலும் கீழும் உயர்த்தவும்.
- இதே போல 30 விநாடிகளுக்கு தலா மூன்று செட்கள் செய்யவும்.
கன்னங்களைக் கொப்பளித்தல்
- ஆழமாக மூச்செடுத்து வாயில் காற்றை நிரப்புவதன் மூலம் உங்கள் கன்னங்களை கொப்பளிக்கவும்.
- வாயில் காற்றை அப்படியே பத்து வினாடிகளுக்கு வைத்திருங்கள்.
- அடுத்ததாக காற்றை இடது பக்கமாகப் பத்து வினாடிகளும் வலது பக்கமாக பத்து வினாடிகளும் வைத்திருக்க முயற்சிக்கவும்.
- இப்போது வாயை O போல் திறந்து காற்றை வெளியிடவும்
- இந்த பயிற்சியைத் தினமும் ஐந்து முறை செய்யுங்கள்
சூயிங் கம்
- இது எளிமையான பயிற்சிகளில் ஒன்றாகும். இதற்கு சர்க்கரை இல்லாத சூயிங் கம் தேவை
- குறைந்தபட்சம் 15-20 நிமிடங்களுக்கு மென்று சாப்பிடுங்கள்
- ஒரு நாளைக்கு இரண்டு முறை சூயிங் கம் மெல்லுங்கள்
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation