குளிர்காலத்தில் நமது உடல் செயல்பாடு அளவு குறைந்துவிடுவதால் இயல்பாகவே சோம்பேறி ஆகிவிடுகிறோம். குளிர்காலத்தில் உடற்பயிற்சி மேற்கொள்வதை தவிர்ப்பதால் உடலில் கலோரிகள் கரைவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனுடன் குளிர்கால மாதங்களில் உடல் இயற்கையாகவே அதிக கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை விரும்புகிறது.
குளிர்காலத்தில் சூரிய ஒளியின் பற்றாக்குறை நம்முடைய மனநிலையை பாதிக்கும் மற்றும் சில நபர்களுக்கு பருவகால பாதிப்பு கோளாறு (SAD) எனப்படும் நிலைக்கு வழிவகுக்கும். இதனைத் தடுப்பதற்கு சில உதவிக்குறிப்புகளை பகிர்ந்துள்ளோம்.
குளிர்கால மாதங்களிலும் நடைப்பயிற்சி அல்லது ஜாகிங் போன்ற உடற்பயிற்சிகளை தினசரி வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். யோகா அல்லது வீட்டிலே உடற்பயிற்சி மேற்கொள்வது உங்களுக்கு உதவும். உங்கள் வாழ்க்கை முறை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ற உடற்பயிற்சி திட்டத்தை உருவாக்கவும். உத்வேகத்துடன் இருக்க ஜிம் செல்லலாம் அல்லது தினமும் உடற்பயிற்சி செய்யும் நண்பரைக் கண்டுபிடியுங்கள்.
பழங்கள், காய்கறிகள், தானியங்கள், மெலிந்த புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை குளிர்காலத்தில் உட்கொள்ளுங்கள். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, அதிக கலோரி கொண்ட தின்பண்டங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்கவும். வறுத்து சாப்பிடுவதற்கு பதிலாக பேக்கிங் அல்லது ஸ்டீமிங் போன்ற ஆரோக்கியமான சமையல் முறைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
மேலும் படிங்க Sex Hygiene - மகளிர் கவனத்திற்கு… உடலுறவுக்கு பிந்தைய சுகாதாரம்!
மெதுவாகச் சாப்பிட்டு, ஒவ்வொரு கடியையும் சுவைக்கவும். சாப்பிடும்போது மின்னணு சாதனங்கள் பயன்பாடு உள்ளிட்ட கவனச்சிதறல்களைத் தவிர்க்கவும். கவனமாகச் சாப்பிடுதவன் வழியாக ஆரோக்கியமான உணவுத் தேர்வு, அதிகமாகச் சாப்பிடுவதை தவிர்த்தல், மேலும் செரிமானத்தை மேம்படுத்தி மன அழுத்தம் குறையும் போது உடல் எடையும் பராமரிக்கப்படும்.
தாகம் எடுக்காவிட்டாலும் தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர்ந்த காலநிலையில் நீரேற்றமாக இருக்க மூலிகை தேநீர் அல்லது ஐஸ் போடாத எலுமிச்சை ஜூஸ் போன்ற பானங்களைத் தேர்வு செய்யவும். சரியான நீரேற்றம் செரிமானத்திற்கு உதவுகிறது, உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது, ஆரோக்கியமான சருமத்தை ஆதரிக்கிறது மற்றும் ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
போதுமான நேரம் தூங்கவும். ஏனெனில் இது ஆரோக்கியமான எடையைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் 8-9 மணிநேர தூக்கத்தை இலக்காகக் கொள்ளுங்கள். போதுமான தூக்கம் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது, மன அழுத்தத்தைக் குறைக்கிறது, மனத் தெளிவை அதிகரிக்கிறது மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை ஆதரிக்கிறது.
மேலும் படிங்க Vulvodynia Issues : வல்வோடினியா பாதிப்புகள்… மகளிர் கவனத்திற்கு !
தியானம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் அல்லது நீங்கள் விரும்பும் பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல் போன்ற மன அழுத்த மேலாண்மை நுட்பங்களைச் செயல்படுத்தவும்.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்திருங்கள். வீட்டிலேயே முடங்கி விடாமல் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் வெளியே சென்று நேரத்தைச் செலவழிப்பதன் வழியாகவும் எடை அதிகரிப்பை தடுக்கலாம்.
மது அருந்துவதை கவனத்தில் கொள்ளுங்கள், ஏனெனில் இது எடை அதிகரிப்புக்கு பங்களிக்கும். மது அருந்துவதைக் குறைப்பது எடை அதிகரிப்பைத் தடுப்பது மட்டுமல்லாமல், கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். மேலும் மனத் தெளிவை ஆதரிக்கிறது மற்றும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]