2024ஆம் ஆண்டை இனிமையான ஆண்டாக மாற்றிட இந்த ஏழு தீர்மானங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அன்றாட வாழ்க்கையில் பிஸியாகவே இருந்தால் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுதற்கு முன்னுரிமை அளிப்பதில் சிரமமாக இருக்கலாம். வேறு இடத்திலோ அல்லது தூரமாக இருந்தாலோ தினமும் அவர்களுக்காக குறிப்பிட நேரத்தை செலவிட அட்டவணை தயாரியுங்கள். வாரம் ஒரு முறை குடும்பத்துடன் வெளியே சென்று மகிழுங்கள் அல்லது தூரத்தில் இருந்தால் வீடியோ காலில் பேசிக் கொண்டே இருங்கள்.
நீண்ட காலத்திற்கு உதவிடும் முக்கியமான புத்தாண்டு தீர்மானங்களில் ஒன்றாக பட்ஜெட் உருவாக்கத்தை குறுப்பிடலாம். அதிக பணத்தை மிச்சப்படுத்துவது எப்போதுமே உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். ஜனவரியில் நீங்கள் அலுவலகம் திரும்பும் முன்பாக பிரத்யேகமாக ஒரு பட்ஜெட்டை தயாரித்து கொள்ளுங்கள்.
இதைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என திடமாக இருங்கள். உங்கள் வீட்டிற்கும், குடும்பத்திற்கும் பொருட்களை வாங்கும்போது அதை எப்போது எப்படி வாங்குகிறீர்கள் என்பதை பரிசீலனை செய்து அதற்கு ஏற்ப செலவு செய்யுங்கள்.
பொதுவாக அனைவருமே புத்தாண்டு முதல் ஆரோக்கியமாக இருக்க உணவுப் பழக்கத்தை மாற்ற விரும்புவார்கள். ஆனால் நீங்கள் அப்படி இருக்க வேண்டாம். பலவகையான உணவுகளை சாப்பிட முயற்சிக்க வேண்டும். ஒவ்வொரு வாரம் நீங்கள் இதுவரை ருசி பார்க்காத உணவுகளை சமைக்க முயற்சி செய்யுங்கள்.
மேலும் படிங்க New Year Fitness Resolution - ஆரோக்கியமான வாழ்விற்கான புத்தாண்டு தீர்மானம்
2024 முதல் புத்தக வாசிப்பை தொடங்குங்கள். நீங்கள் ஏற்கனவே வாடிக்கையான புத்தக வாசிப்பாளர் என்றால் அதை இரட்டிப்பு செய்யுங்கள். நீங்கள் படித்த புத்தகங்கள் பற்றி நண்பர்களுடனுடன் பேசுங்கள். 2024 முடிவதற்குள் எத்தனை புத்தகங்களை முழுமையாக முடித்தீர்கள் என குறித்து வைக்கவும்.
சரியாகத் தூங்காமல் இருந்தால் அது பல சிக்கல்களை உண்டாக்கும். உடல் ஆரோக்கியத்திற்காக குறைந்தது எட்டு மணி நேரம் தூங்கவும். அதன் பிறகு உடல் ஆரோக்கியம் மேம்படுவதை நீங்களே உணர்வீர்கள். முக்கியமாக நல்ல தூக்கத்திற்கு என்ன தேவை என்பதை புரிந்து கொள்ளுங்கள். தூக்கத்திற்கு முன்பாக எந்த நேரத்தில் சாப்பிடலாம், சாப்பிட்ட உடன் உடனடியாகத் தூங்கலமா வேண்டாமா என்பதை தெரிந்திருக்க வேண்டும்.
வீட்டில் செடிகள் வளர்க்க முயற்சி செய்யுங்கள். இப்படி செய்தால் மன அழுத்தம் குறைவும். செடிகளை பராமரிப்பது தன்னியக்க நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. செடி வளர்ப்பு வீட்டில் காற்றின் தரத்தையும் உயர்த்தும்.
மேலும் படிங்க New Year Resolution 2024 : புத்தாண்டில் மன ஆரோக்கியத்திற்கான முக்கிய தீர்மானங்கள்
மாதம் இருமுறை தமிழகத்திலும், வருடத்திற்கு மூன்று முறை வெளிமாநிலங்களிலும் சுற்றுலா பயணங்களுக்குத் திட்டமிடுங்கள். இது குறிப்பாகப் பெண்களை மாரடைப்பில் இருந்து உளவியல் ரீதியாக காப்பாற்றும். சுற்றுலாவுக்கு திட்டமிடுவதில் தொடங்கி பயணம் முடியும் மகிழ்ச்சியாகவே உணர்வீர்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]