herzindagi
image

ஊறவைத்த கொத்தமல்லி தண்ணீரைக் காலையில் குடித்துவந்தால் யானை பலம் கிடைக்கும்

காலையில் ஊறவைத்த கொத்தமல்லி விதைகளைக் குடித்து வந்தால் உடலுக்கு நம்ப முடியாத பல ஆச்சரிய நன்மைகள் கிடைக்கும். இதன் பலன்களைத் தெரிந்தால் தினமும் குடிக்கத் தொடங்குவீர்கள் 
Editorial
Updated:- 2024-09-24, 22:12 IST

கொத்தமல்லி விதை பெரும்பாலும் சந்தைகளில் 'தனியா' என்று அழைக்கப்படுகிறது. கொத்தமல்லி இலைகளை உணவுகளில் அழகுபடுத்தும் பொருளாகவும், நம் சுவைக்கு போதுமான பொருளாகவும் பயன்படுத்தி வருகிறோம். அதே சமையம் கொத்தமல்லி விதைகள் பல உடல்நலப் பிரச்சினைகளை தீர்க்கின்றன. ஊறவைத்த கொத்தமல்லி விதைகளை ஒரு கிளாஸ் குடித்து வந்தால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

immunity girl

 

கொத்தமல்லி விதை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் ஃப்ரீ ரேடிக்கல் செயல்பாட்டைக் குறைக்க உதவுகின்றன. உங்கள் உடலின் பாதுகாப்பின் முதல் வரிசையை அதிகரிப்பது. இதனால் இரும்பல், சளி, மற்றும் காய்ச்சலுக்கு நல்ல பலன் தருகிறது.

 

முடியை பலப்படுத்துகிறது

 

மேலும் படிக்க: 35 வயதுக்குப் பிறகு முதுமையை விரட்டி இளமையாக இருக்க சிறந்த வழிகள்

 

கொத்தமல்லியில் வைட்டமின் கே, சி மற்றும் ஏ போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் முடியை வலுப்படுத்துவதற்கும் வளர்ச்சியடைவதற்கும் பெரும் பங்கு வகிக்கிறது. காலையில் கொத்தமல்லி தண்ணீர் குடிப்பதால் முடி உதிர்தல் மற்றும் உடைவதைக் குறைக்க உதவும். முடி வளர்ச்சிக்கு கொத்தமல்லியை எண்ணெய் அல்லது ஹேர் மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம்.

 

எடை இழப்புக்கு உதவுகிறது

weight loss inside

 

கொத்தமல்லி சில செரிமான பண்புகளைக் கொண்டுள்ளதால் ஈரானிய மருத்துவத்தில் செரிமான பிரச்சினைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான விதையாகவும் உள்ளது. காலையில் கொத்தமல்லி தண்ணீர் குடிப்பதால் நாள் முழுவதும் செரிமானத்தை மேம்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும். இந்த இரண்டு பண்புகளும் எடை இழப்பு செயல்முறைக்கு உதவும்.

முக கருமை மற்றும் முகப்பருவை குறைக்கிறது

acne spot inside

 

கொத்தமல்லியில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. காலையில் கொத்தமல்லித் தண்ணீரைக் குடிப்பதால் பொலிவான பளபளப்பைப் பெறலாம். தெளிவான, மிருதுவான சருமத்தைப் பெறவும் உதவும்.

 

கொத்தமல்லி பானம் செய்யும் முறைகள்

 

மேலும் படிக்க: போதும் என்று சொல்லும் அளவிற்கு ஆரோக்கிய பலன்களை கொட்டி கொடுக்கும் வெண்டைக்காய் தண்ணீர்

 

கொத்தமல்லி தண்ணீர் தயாரிக்க 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை 1 கப் குடிநீரில் ஒரே இரவில் ஊற வைக்கவும். காலையில் விதைகளை வடிகட்டி தண்ணீர் குடிக்கவும். அதே விதைகளை உலர்த்தி பின்னர் சமையலில் சாதாரணமாக பயன்படுத்தலாம்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]