பின்வரும் தகவல்கள் ஊட்டச்சத்து நிபுணர் திருமதி சப்னா ஜெய்சிங் படேல் அவர்களால் சரிபார்க்கப்பட்டது. தண்ணீர் ஒரு எளிய பொருள் என்பதால் அது கெட்டுப் போகாது. இருப்பினும் அதை முறையாக சேமித்து வைக்காவிட்டால், அவை மோசமான நீராக மாறலாம். காலப்போக்கில் இதில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகமாகி, அது குடிப்பதற்கு பாதுகாப்பற்றதாக மாறிவிடுகிறது.
எப்போதுமே தண்ணீர் பாதுகாப்பானது என்று எண்ண வேண்டாம். தண்ணீரை சேமிக்கும் முறை வைத்தே அவை பாதுகாப்பானதா என்பதை தீர்மானிக்க வேண்டும். அந்த வகையில் தண்ணீரை சேமித்து வைக்கும் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டில்கள் குவளை போன்ற விஷயங்களும் இதில் பங்கு வங்கிகின்றன. இப்போது உங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் பற்றி நிறைய சந்தேகங்கள் வரலாம். இதற்கான சரியான தகவல்களை ஊட்டச்சத்து நிபுணர், ஹெல்த் பிஃபோர் வெல்த் இன் நிறுவனர் சப்னா ஜெய்சிங் படேல் அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம்.
ஒரு பாட்டில் தண்ணீர் காலாவதியாக எவ்வளவு நேரம் ஆகும்?
காலாவதி ஆகும் முன், ஒரு பாட்டில் தண்ணீர் எவ்வளவு நேரம் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதை குறிப்பிட்டு சொல்லி விட முடியாது. பாட்டிலை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை பொறுத்து இது மாறுபடலாம். பொதுவாக பாட்டில்களில் கிடைக்கும் தண்ணீரின் காலாவதி நேரம் இரண்டு ஆண்டுகளாக குறிப்பிடப்பட்டிருக்கும். இருப்பினும் அவற்றை முறையாக சேமிக்க தவறினால் அதற்கு முன்னதாகவே அவை பாதுகாப்பானதற்றதாக மாறிவிடக்கூடும்.
குறிப்பாக காலப்போக்கில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மக்கி அதில் இருக்கும் ரசாயனங்கள் தண்ணீருடன் சேர தொடங்கி விடுகின்றன. கடைகளில் விற்கப்படும் தண்ணிர் பாட்டில்களை வாங்குவதற்கு முன் அதன் காலாவதி தேதியை சரி பார்க்க மறக்காதீர்கள்.
பழைய தண்ணீர் குடித்தால் உடல் நலக் குறைபாடு ஏற்படுமா?
பழைய தண்ணீர் குடித்தால் நோய் வாய்ப்பப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் அவை முறையாக சேமிக்கப்படாமல் இருந்தால் அதில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகமாகி அவை உங்கள் உடல்நலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எப்போதும் சுத்தமான, ஃபிரஷ்ஷான தண்ணீரை குடிப்பது நல்லது
காலாவதியான தண்ணீரை குடிப்பது பாதுகாப்பானதா?
திறந்த டம்ளர் அல்லது குவளையில் இரவு முழுவதும் அல்லது நீண்ட நேரத்திற்கு மூடாமல் வைக்கப்படும் தண்ணீரில் ஏராளமான பாக்டீரியாக்கள் வளர வாய்ப்புள்ளது. இவை குடிப்பதற்கு பாதுகாப்பானது அல்ல. அந்த தண்ணீருக்குள் தூசி, குப்பைகள் மற்றும் பிற சிறிய நுண்ணிய துகள்கள் விழுந்திருக்கலாம், எனவே நீண்ட நேரம் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பற்ற தண்ணீரை ஒருபோதும் குடிக்காதீர்கள்.
இந்த பதிவும் உதவலாம்: அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதும் ஆபத்தா?
தண்ணீரை அதிக நேரத்திற்கு ஃபிரஷ் ஆக வைத்துக் கொள்வது எப்படி?
நீங்கள் குடிநீரை நீண்ட நேரத்திற்கு ஃபிரெஷ் ஆகவும் பாதுகாப்பாகவும் வைக்க விரும்பினால், அதை ஒரு கண்ணாடி குவளை அல்லது பாட்டிலில் நிரப்பி, குளிர்ந்த மற்றும் இருட்டான இடத்தில் சேமித்து வைக்கலாம். இதில் முக்கியமாக காற்று புகாத கண்ணாடி மூடியை பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் காற்று உள்ளே நுழைவதையும், தண்ணீர் மாசுபடுவதையும் தவிர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்திற்கு ஏற்ற 3 டீடாக்ஸ் டீ ரெசிபிக்கள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation