அளவுக்கு அதிகமான எதுவுமே நன்மை தராது என்பது பொதுவான கருத்து, அது அதிகம் தண்ணீர் குடிப்பதாக இருந்தாலும் சரி, அதுவும் உடலுக்கு நல்லதல்ல என்று சமீபத்தில் ஒரு ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மிகவும் பிரபலமான நடிகர் புரூஸ் லீ அவர்கள் 1973 ஆம் ஆண்டு ஜூலை 20 ம் தேதி, தன்னுடைய 32 ஆம் வயதில் திடீரென காலமானார். அந்த நேரத்தில் அவர் இறந்ததற்கான காரணமாக கூறப்பட்டது மூளையில் வீக்கம் என்பது தான். அவர் வலியின் காரணமாக எடுத்து கொண்ட மாத்திரைகள் தான் இந்த மூளை வீக்கத்திற்கு காரணமாக கூறப்பட்டது.
ஆனால் இப்போது, 50 வருடங்களுக்கு பிறகு, இந்த பிரபல நடிகர் இறப்பிற்கு பின்னணியில் உண்மையான வேறொரு காரணம் ஆய்வு செய்யபட்டுள்ளது. அந்த ஆய்வின் அடிப்படையில் 'அதிகப்படியான தண்ணீரை சிறுநீரகத்தால் வெளியேற்ற முடியாமல் போனது தான் புரூஸ் லீ அவர்கள் இறப்பிற்கான காரணம்' என்று ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. க்ளீனிக்கல் கிட்னீ ஜார்னல் எனும் பத்திரிக்கையில், ஸ்பெயின் நாட்டு சிறுநீரக நிபுணர் குழு ஒன்று இது சம்பந்தமாக ஒரு ஆய்வு மேற்கொண்டு அந்த தகவலை டிசம்பர் 2022ல் வெளியிட்டது.
இதுவம் உதவலாம்: குளிர்காலத்திற்கு ஏற்ற 3 டீடாக்ஸ் டீ ரெசிபிக்கள்
அதிகப்படியான நீரை சிறுநீரகத்தால் வெளியேற்ற முடியாமல் போனது தான் புரூஸ் லீ அவர்களின் இறப்புக்கு காரணமாகி விட்டது' என்று எழுதியிருந்தனர். மேலும் அவர்கள் அதில் கூறியிருந்தது, 'ஹைபோனாட்ரீமியா எனப்படும் ஆபத்து காரணிகளும் அவர் இறப்புக்கு காரணம் ஆகிவிட்டது (இரத்தத்தில் சோடியம் அளவு குறைவாக இருப்பது). இந்த ஆய்வு குழுவின் நிபுணர்கள் கருத்துபடி லீ அசாதாரணமாக அதிகமான அளவு தண்ணீரை எடுத்து கொள்ள வேண்டி இருந்தது. காரணம் அவர் தினமும் எடுத்து கொள்ளும் பழச்சாறுகள், புரதச்சத்து பானங்கள் மற்றும் தண்ணீர் தாகத்தை அதிகரிக்கும் போதை மருந்து பழக்கம்.
சிறுநீரகம் அதிக நீரை வெளியேற்றினாலும், அளவுக்கதிகமான நீரை வெளியேற்ற அது தடுமாறும். லீ சொன்ன ஒரு பிரசித்தி பெற்ற வாக்கியம், தண்ணீர் என் தோழனாய் இருக்கட்டும் ', ஆனால் அதிக தண்ணீர் தான் அவரை கொன்று விட்டது.
ஆரோக்கியம் நிறைந்த வாழ்க்கைக்கு தண்ணீர் தேவை. ஆனால் அதையே அளவுக்கு அதிகமாக குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? இல்லையென்றால், இந்த கட்டுரையை முழுமையாக ஒரு முறை நிச்சயம் படியுங்கள்.
உடலில் உள்ள அனைத்து செல்களும் சரியான முறையில் ஒழுங்காக செயல்பட தண்ணீர் தேவைபடுகிறது. அதே தண்ணீரை அதிகப்படியாக குடிக்கும் போது அதிக நீர்ச்சத்து எனும் பிரச்சனை உருவாகி விடுகிறது.
அதிகப்படியான நீர்ச்சத்து உடலில் நச்சுக்களை உண்டாக்குகிறது. இது ஹைபோனாட்ரீமியா விற்கு மூலக்கூறாகி விடுகிறது. இதன் காரணமாக சாதாரணமான மூளை செயல்பாட்டில் பிரச்சனை ஏற்படுகிறது.
ஒரு நாளைக்கு எத்தனை கப் தண்ணீர் அருந்த வேண்டும் என்று எதும் இல்லை. ஒரு நாளைக்கு 8 கப் நீர் அருந்துவது ஒரு நல்ல விஷயம் .உடற்பயிற்சி முறை, கர்ப்பம் அல்லது பால் கொடுக்கும் தாய் என்ற உங்கள் உடல் நிலை பொறுத்து நீங்கள் தண்ணீர் பருகலாம்.
நீங்கள் அளவுக்கு அதிகமான தண்ணீர் குடிக்கும் போது, உங்களுக்கு தண்ணீர் விஷமாகும், உடலில் நச்சுக்கள் சேரும் அல்லது மூளை செயல்பாடு தடைபடும். நம் உடலில் உள்ள செல்கள் அளவுக்கு அதிகமான நீரை உறிஞ்சி, வீங்கி போய் விடும். மூளையில் உள்ள செல்கள் வீக்கம் கொண்டால், மூளைக்கு அழுத்தம் ஏற்படும். இதனால் உங்களுக்கு குழப்பமான மனநிலை, தலைச்சுற்றல் மற்றும் தலைவலி உண்டாகும். மூளை அழுத்தம் அதிகமானால், அது உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்கும். மேலும் பிராடிகார்டியா எனப்படும் (இதயத்தின் வேகம் குறையும்).
இதுவும் உதவலாம்:பிரியாணி இலையின் 5 ஆரோக்கிய நன்மைகள்
அதிகப்படியான நீர்சத்தால் சோடியம் எலக்ட்ரோலைட் பாதிக்கும். இது ஹைபோனாட்ரீமியா என்ற நிலையை உருவாக்கும். நம் உடலின் செல்களின் உள்ளே மற்றும் வெளியே உள்ள திரவத்தை சமநிலையில் வைத்து கொள்ள சோடியம் தேவைபடுகிறது. நம் உடலில் அதிகப்படியான நீர் இருந்தால், அது நம் செல்களுக்கு உள்ளே புகுந்து வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. இந்த வீக்கமானது உங்களுக்கு கோமா, வலிப்பு அல்லது இறப்பு கூட ஏற்படுத்தும்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]