கர்ப்பத்தை தடுக்கும் பல கருத்தடை முறைகள் நடைமுறையில் உள்ளன. இவற்றுள் கருத்தடை ஊசி மற்றும் மாத்திரைகள் மிகவும் பிரபலமானவை. இவ்விரண்டு முறையையும் 65% பெண்கள் பயன்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது போன்ற மருந்துகளை பெண்கள் வருட கணக்கில் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் பொழுது, அது அவர்களுக்கு நிச்சயம் பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒருவகையில், இது போன்ற மாத்திரைகள் உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்களை பாதிக்கலாம். இதனால் வயிற்றுப்போக்கு, மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகளையும் ஒரு சிலர் உணர்கிறார்கள்.
ஹார்மோன்களை பாதிக்கும் இந்த கருத்தடை மாத்திரைகள் பெண்களின் கருவுறுதலையும் பாதிக்குமா? இக்கேள்விக்கான விடையை லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணரும், மகப்பேறு மருத்துவருமான கரிமா ஸ்ரீவஸ்தவா அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம். இது குறித்த தகவல்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: பாரம்பரிய மண்பானை சமையலில் இவ்வளவு நன்மைகளா?
இந்த மாத்திரைகளால் தற்காலிக பிரச்சனை ஏற்படலாம் என்கிறார் டாக்டர் கரிமா அவர்கள். மேலும் இந்த பிரச்சனை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது மாத்திரைகளின் பயன்பாட்டைப் பொறுத்தது என்றும் தெரிவித்துள்ளார். சில தயாரிப்புகளின் கருத்தடை மருந்துகள் உடலுக்கு நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. தொடர்ச்சியாக கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் ஒருவருக்கு, மாத்திரைகளை நிறுத்திய ஒரு சில வாரங்களுக்கு கர்ப்பம் தரிக்காமல் போகலாம்.
அதேபோல் ஊசிகளும் ஒரு விளைவை ஏற்படுத்துகின்றன ஆனால் மாத்திரைகளை போல ஊசிகளை மாதம் தோறும் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு தேவைப்படும் இடைவெளிக்கு ஏற்ப கருத்தடை ஊசிகளை போட்டுக் கொள்ளலாம். இந்த ஊசிகளின் விளைவை ஒரு மாதம் முதல் ஆறு மாதம் வரை நீட்டிக்கலாம். நிறைய கருத்தடை முறைகள் இருந்தாலும் இவ்விரண்டு மட்டுமே மலிவானதாகவும், எளிதானதாகவும் பெண்கள் நினைக்கிறார்கள்.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் மஞ்சள் நீர் குடிப்பதால் உடலில் இவ்வளவு மாற்றங்களா?
உங்களுக்கான சரியான கருத்தடை முறையை அறிய மகப்பேறு மருத்துவரை ஆலோசனை செய்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய நிரந்தர அல்லது தற்காலிக தேவையை பொறுத்து உங்களுக்கான பொருந்தக்கூடிய முறையை மருத்துவர் பரிந்துரை செய்வார். நீண்டகாலமாக கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் பெண்களின் உடலில் பல விதமான பக்க விளைவுகளை பார்க்க முடியும்.
இதைத் தவிர கருத்தடை இனைப்புகளும் பயன்படுத்தப்படுகிறது, இருப்பினும் இந்தியாவில் இது பிரபலமாகவில்லை. இனி வரும் காலங்களில் இவற்றின் பயன்பாடு அதிகரிக்கலாம். இதை தற்காலிக பிறப்பு கட்டுப்பாடு முறைக்காக மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மருத்துவ ஆலோசனையைப் பெறுவது நல்லது. காப்பர்-டி போன்ற கருப்பையக சாதனத்தை பொருத்துவதன் மூலம் நீண்ட கால பாதுகாப்பைப் பெறலாம். உங்களுடைய கருவுறுதல் மற்றும் சுகாதார அறிக்கைகளின் அடிப்படையில், இவை உங்களுக்கு பொருந்தக் கூடியதா என்பதை மருத்துவர் தீர்மானிப்பார். அதேசமயம் நிரந்தர பிறப்பு கட்டுப்பாடு தேவை உள்ள பெண்களுக்கு கருத்தடை மாத்திரைகள் ஏற்றது அல்ல. எனவே உங்களுக்கு பொருந்தக்கூடிய சிறந்த கருத்தடை முறையை மருத்துவரை ஆலோசனை செய்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]