உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய நான்ஸ்டிக் பாத்திரங்களை புறக்கணிடித்துவிட்டு, மண் பானைகள், இரும்பு சட்டி, பித்தளை குடம், ஈய சொம்பு போன்ற பாரம்பரிய பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்த முயற்சி செய்வோம். சமீப காலமாக இது பற்றிய விழிப்புணர்வு பெருகி வருகிறது. பல பெண்களும் பாரம்பரிய சமையலில் ஆர்வம் காட்டுகிறார்கள். மண் பானை சமையலுக்கு மாறி வரும் அனைத்து தோழிகளுக்கும் சிறப்பு பாராட்டுக்கள்.
மண் பானையில் வைத்த மீன் குழம்பின் சுவையை பலரும் அறிந்திருப்பீர்கள். அம்மாவின் கை பக்குவம் ஒரு புறம் இருக்க, இந்த சட்டியில் வைக்கும் குழம்பு மட்டும் எப்படி இவ்வளவு ருசியாக இருக்கிறது? அதிலும் மதியம் வைத்த குழம்பை மண் சட்டியில் வைத்து இரவில் சாப்பிட்டால், அதன் சுவைக்கு அமிர்தமே தோற்று விடும். சுவை பற்றி பேசிகையில் இவை தரும் ஆரோக்கிய நன்மைகளை நாம் மறந்து விட கூடாது. பாரம்பரிய மண்பானை சமையலின் ஆரோக்கிய நன்மைகள் பற்றிய தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் மஞ்சள் நீர் குடிப்பதால் உடலில் இவ்வளவு மாற்றங்களா?
மண் பானைகளில் சமைக்கப்படும் உணவுகளில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு தாதுக்கள் நிறைந்துள்ளன. இந்த மண் பானைகள் களிமண்ணால் செய்யப்படுகின்றன. களிமண் இயற்கையாகவே காரத்தன்மை உடையது. இந்த தன்மையால், மண்பானையில் சமைக்கும் போது அவை உணவில் உள்ள அமிலங்களுடன் தொடர்பு கொண்டு அதன் PH அளவுகளை சமநிலைப்படுத்துகின்றன. இவை உணவை ஆரோக்கியமானதாக மாற்றுவதோடு மட்டுமின்றி, அதற்கு ஒரு நல்ல நறுமணத்தையும் கொடுக்கின்றன.
மண் பானைகளில் சமைக்கும் பொழுது, அதில் உள்ள நுண்துளைகள் சூடு மற்றும் ஈரதன்மையை சமமாக பரவ அனுமதிக்கின்றன. மற்ற வகையான பாத்திரங்களில் தயாரிக்கப்படும் உணவைக் காட்டிலும் மண்பானையில் சேமிக்கப்பட்ட உணவுகள் அதிக ஊட்டச்சத்து மதிப்பைத் தக்க வைத்துக் கொள்கின்றன. மேலும், மண் பானையில் சமைக்கப்படும் அரிசி, இறைச்சி போன்ற உணவுகளும் மென்மையாக பஞ்சு போல வெந்து வரும்.
அன்றாட சமையலில் அதிகப்படியான எண்ணெய் பயன்படுத்துவதும் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். சமையலில் குறைந்த எண்ணெயை பயன்படுத்த விரும்புபவர்களுக்கு மண் பானை சமையல் ஏற்றது. குறைந்த எண்ணெயை பயன்படுத்தி மண்பானையில் உணவை சமைக்கலாம். இந்த பானைகள் சூடாக அதிக நேரம் எடுக்கும், ஆகையால சமையல் செயல்முறையும் மெதுவாக நடக்கும். இது உணவில் உள்ள இயற்கை ஈரப்பதம் மற்றும் எண்ணெய்களை தக்கவைத்து கொள்ள உதவுகிறது.
மண் பானையில் சமைக்கும் பொழுது உணவின் இயற்கையான வாசனை தக்கவைக்கப்படுகிறது. மண் பானைகளின் தன்மை மற்றும் மெதுவான சமையல் செயல்முறையால் உணவின் மணமும் நிறைந்து இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: படுத்த உடனே தூக்கம் வர இதை செய்யுங்கள்
மண் பானைகள் எளிதில் கிடைக்கக்கூடியவை. இவை வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் கிடைகின்றன, உங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றை நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம். மேலும் நியாயமான விலையில் கிடைப்பதால் அனைவரும் வாங்கி பயன் பெறலாம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]