Sleep Faster Tips: படுத்த உடனே தூக்கம் வர இதை செய்யுங்கள்

எவ்வளவு முயற்சி செய்தும் தினமும் தூக்கம் வராமல் தவிக்கிறீர்களா? படுத்த உடனே நிம்மதியான தூக்கம் வர இப்பதிவில் பகிரப்பட்டுள்ள சில எளிமையான குறிப்புகளை பின்பற்றலாமே…

sleep early tips

புரண்டு படுத்தும் நள்ளிரவு வரை தூக்கம் வராத பல நாட்களை நீங்கள் கடந்து வந்து இருக்கலாம். இனி தூக்கம் வராத இரவுகளை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. தூக்கத்தை உடனே வரவழைக்கக் கூடிய சில எளிமையான குறிப்புகளை இப்பதிவில் பார்க்கப் போகிறோம். இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். இந்த குறிப்புகளை பின்பற்றினால் ஒரு சில நிமிடங்களிலேயே நல்ல தூக்கம் வரும்.

உடல் ஆரோக்கியத்துடன் இருக்க 8-9 மணி நேர தூக்கம் அவசியம். உங்களால் தூக்கத்திற்கான 9 மணி நேரங்கள் ஒதுக்க முடியாத நிலையில் குறைந்தது 7 மணி நேரங்களாவது தூங்க முயற்சி செய்யுங்கள். தினமும் போதுமான நேரம் தூங்குவதன் மூலம் நோய்வாய்ப்படுவதை தவிர்க்கலாம். இரவு தூங்க செல்வதற்கு முன் பின்வரும் குறிப்புகளை பின்பற்றினால் நல்ல தூக்கம் வரும்.

முகத்தை கழுவவும்

தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன் சுத்தமான குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இது உங்களை நிதானமாக்கி மன நிம்மதியை தரும். இதற்கு பிறகு நீங்கள் தூங்க செல்லலாம். படுத்த உடனே நல்ல தூக்கம் வர இந்த குறிப்பை நீங்கள் முயற்சி செய்யலாம்.

ஃபோன் திரை

no phone to sleep early

தூங்குவதற்கு படுக்கைக்கு சென்ற பிறகும் ஃபோன் பயன்படுத்துவதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். தூக்கம் வராமல் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம் ஆகும். இரவு உணவுக்கு பிறகு ஃபோன் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். குறிப்பாக தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே திரை நேரத்தை முற்றிலும் தவிரத்திடுங்கள். இதற்கு பதிலாக இரவு உணவிற்குப் பிறகு நடைப்பயிற்சி செய்யலாம் அல்லது நல்ல புத்தகங்களை படிக்க முயற்சிக்கலாம். இந்த பழக்கம் உங்கள் மனதை அமைதிப்படுத்தும். இதனால் நீங்கள் மன நிம்மதியுடன், படுக்கைக்கு சென்ற சில நிமிடங்களிலேயே நிம்மதியாக தூங்கலாம்.

கால்களுக்கு ஓய்வு கொடுங்கள்

கால்களுக்கு நல்ல ஓய்வு கொடுக்கும் வகையில் அவற்றை தளர்த்தி நேராக வைத்து படுக்கலாம். இதற்குப் பிறகு நீங்கள் தூங்க முயற்சி செய்யலாம். கால்களுக்கு தேவையான ஓய்வு கொடுத்தால் சிறிது நேரத்திலேயே நல்ல தூக்கம் வரும்.

மற்ற விஷயங்களைப் பற்றி யோசிக்க வேண்டாம்

how to sleep soon

பொதுவாக படுக்கைக்கு சென்ற பின், நம்மில் பலரும் எதிர்கால திட்டங்கள் அல்லது மற்ற விஷயங்களைப் பற்றி யோசிக்கிறோம். இது போன்ற சிந்தனையால் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உங்களுக்கும் இது போன்ற பழக்கம் இருந்தால் அதை உடனே மாற்றிக் கொள்ளுங்கள். எதைப் பற்றியும் சிந்திக்காமல் நேர்மறையாக எண்ணத்துடன் தூங்க செல்லுங்கள். உங்களை கவலைக்கு உள்ளாக்கும் சிந்தனைகளை தவிர்த்தால் படுத்த உடனே நல்ல தூக்கம் வரும்.

இந்த பதிவும் உதவலாம்: பூசணி விதைகள் பெண்களுக்கு ஏன் நல்லது தெரியுமா?

இந்த குறிப்புகளை பின்பற்ற ஆரம்பத்தில் உங்களுக்கு சிரமமாக இருந்தாலும், ஒரு சில நாட்களில் இதுவே உங்கள் வழக்கமாகிவிடும். எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ந்து 21 நாட்கள் செய்தால் அதுவே நம் வழக்கமாகிவிடும். உங்கள் தூக்கத்தை பாதிக்கும் விஷயங்களை தவிர்த்து இந்த குறிப்புகளை தொடர்ந்து 21 நாட்கள் பின்பற்றினால் உங்களுக்கும் படுக்கைக்கு சென்ற ஒரு சில நிமிடங்களிலேயே நல்ல தூக்கம் வரும். இவ்வாறு செய்வதால் 7-8 மணி நேர தூக்க நேரத்தை உங்களால் சுலபமாக பெற முடியும். இரவில் நல்ல தூக்கம் இருந்தாலே பெரும்பாலான வாழ்க்கை முறை நோய்களை தவிர்த்திடலாம்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP