உடல் சோர்வு, குளிர், மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை நீங்கள் அடிக்கடி எதிர்கொள்கிறீர்களா? இவை இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறி என்பது உங்களுக்கு தெரியுமா? ஹீமோகுளோபின் என்பது இரத்த சிவப்பணுக்களில் உள்ள புரதமாகும். இது இரத்த நாளங்கள் வழியாக உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை விநியோகம் செய்கிறது. இந்த ஹீமோகுளோபினை உற்பத்தி செய்ய உடலுக்கு இரும்பு சத்து தேவைப்படுகிறது.
உடலில் ஹீமோகுளோபின் பற்றாக்குறை ஏற்பட்டால், போதுமான ஆக்சிஜன் இன்றி திசுக்கள் மற்றும் தசைகளால் திறம்பட செயல்பட முடியாது.
இந்த பதிவும் உதவலாம்: பூசணி விதைகள் பெண்களுக்கு ஏன் நல்லது தெரியுமா?
இரும்புச்சத்து குறைபாடு தீவிரம் அடையும்போது அது இரத்த சோகை என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு வகையான இரத்த சோகை ஆகும். உங்கள் உடலால் போதுமான அளவு இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய முடியாத நிலையில் இது ஏற்படுகிறது.
இரும்புச்சத்து குறைபாடு என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை என நியூட்ரிட்டுவின் நிறுவனர் மற்றும் உணவியல் நிபுணருமான சாப்ரா அவர்கள் கூறியுள்ளார். இரும்பு சத்து குறைபாடின் அறிகுறிகளை சாப்ரா அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம். இந்த அறிகுறிகளை உணர்ந்து சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம் இரத்த சோகையை தடுக்கலாம்.
எப்போதும் அதிக சோர்வுடன் இருப்பது இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறியாகவும் இருக்கலாம். உடலில் போதுமான அளவு இரும்பு சத்து இல்லாத போது சோர்வு ஏற்படுகிறது. இரும்புச்சத்து குறைபாட்டினால் ஹீமோகுளோபின் உற்பத்தி பாதிக்கப்படலாம். ஹீமோகுளோபின் பற்றாக்குறையினால் திசுக்கள் மற்றும் தசைகளுக்கு குறைந்த அளவு ஆக்சிஜன் மட்டுமே சென்றடைகிறது. இதனால் அவை ஆற்றிலை இழக்கின்றன. இதை ஈடு செய்ய ஆக்சிஜன் நிறைந்த இரத்தத்தை உடலுக்கு அனுப்புவதில் இதயம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இது உங்களை அடிக்கடி சோர்வடையச் செய்கிறது.
கீழ் இமையை சுற்றி இருக்கும் பகுதியும், சருமமும் மஞ்சள் நிறமாக இருப்பது இரும்புச்சத்து குறைபாட்டின் மற்றொரு பொதுவான அறிகுறியாகும். இரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது. எனவே இரும்பு சத்து குறைபாட்டினால் சருமம் அதன் இயற்கை நிறத்தை இழக்க தொடங்குகிறது. மேலும் கைகள், நகங்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறமாகவும், மங்கலாகவும் மாறுகின்றன.
ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும் போது உடலுக்கு கிடைக்கக்கூடிய ஆக்ஸிஜன் அளவும் குறைவாகவே இருக்கும். இதனால் தசைகளுக்கு போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காது. இந்நிலையில் நடைப்பயிற்சி போன்ற சில இயல்பான வேலைகளை செய்யும் போது கூட மூச்சு வாங்கலாம். உடல் அதிக ஆக்ஸிஜனை பெற முயற்சிக்கும் போது சுவாச விகிதமும் அதிகரிக்கும். இதனால் மூச்சுத் திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளை நீங்கள் உணரலாம்.
இந்த பதிவும் உதவலாம்: எலும்பு ஆரோக்கியத்திற்கும் கால்சியம் சத்திற்கும் உதவும் சிறந்த உணவுகள்
எளிதில் உடைய கூடிய நகங்களும் இரும்புச்சத்து குறைபாட்டின் முக்கிய அறிகுறியாகும். ஒரு சிலருக்கு நகங்களின் வடிவம் மாறி ஸ்பூன் போன்ற அமைப்பில் இருக்கும். இது பொதுவான அறிகுறி அல்ல, இருப்பினும் ஒரு சிலருக்கு இந்த அறிகுறிகள் இருக்கலாம்.
நீங்கள் அடிக்கடி குளிர்ச்சியாக உணர்கிறீர்களா? இதனுடன் உங்கள் கைகளும் கால்களும் எளிதில் குளிர்ச்சியடைகிறதா? கைகள் மற்றும் கால்கள் குளிர்ச்சியாக இருப்பது இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறியாகவும் இருக்கலாம். இரத்த சோகையால் பாதிப்பட்டவர்களுக்கு, திசுக்களுக்கு ஆக்ஸிஜனை வழங்க போதுமான அளவு இரத்த சிவப்பணுக்கள் இன்றி இரத்த ஓட்டமும் சீராக இருக்காது. இதனால் நீங்கள் அடிக்கடி குளிர்ச்சியாக உணரலாம்.
இது போன்ற அறிகுறிகளை நீங்களும் உணர்ந்தால் அது இரும்புச்சத்து குறைபாடாகவும் இருக்கலாம். பழங்கள், பச்சைக் காய்கறிகள், உலர் பழங்கள் மற்றும் பருப்பு வகைகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். மேலும் உங்கள் மருத்துவரை அணுகவும் மறக்காதீர்கள்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]