கால்சியம் குறைபாடு ஏன் பெண்களிடையே காணப்படுகிறது? அதன் அறிகுறிகள் என்ன? எவ்வகை உணவுகளை உட்கொண்டால் கால்சியம் குறைபாடு தீரும்? உணவியல் நிபுணர் கவிதா தேவ்கன் அவர்கள் இதை பற்றி நமக்கு விளக்கம் அளிக்கிறார்
வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் தவறான உணவு பழக்கங்களால் நாம் பல விதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அதில் ஒரு பிரச்சினை தான் கால்சியம் குறைபாடு. கால்சியம் குறைபாடு தான் பெண்களின் பொதுவான பிரச்சனையாக இருக்கிறது. 35 வயதை கடந்த பெரும்பாலான பெண்களுக்கு கால்சியம் குறைபாடு வந்து விடுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. பூப்பெய்ததும் தொடங்கும் பிரச்சனை வாழ்நாள் முழுவதும் அப்படியே இருந்து விடுகிறது. ஆனால் கேள்வி என்னவென்றால், ஏன் பெண்களுக்கு மட்டும் கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது? கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகள் என்னென்ன? இந்த குறைபாட்டை சரிசெய்ய எது போன்ற உணவுகளை உண்ண வேண்டும்? உணவியல் நிபுணர் கவிதா தேவ்கன் நமக்கு இதை பற்றி விளக்கம் அளிக்கிறார்.
ஸ்மைல் ஸ்டூடியோவில் உணவியல் நிபுணராக இருக்கும் கவிதா, உணவுமுறை சம்பந்தப்பட்ட பல நூல்களை வெளியிட்டவர். 'டோண்ட் டயட்: ஒல்லியாக இருப்பவர்களின் 50 பழக்கங்கள்' ஆகியவை அவருடைய புத்தகங்கள். கால்சியம் தொடர்பாக அவர் கூறுவது, "பெண்ணாக இருந்தாலும் அல்லது ஆணாக இருந்தாலும், குழந்தை அல்லது இளைஞர் அல்லது முதியவர் என்று யாராக இருந்தாலும், அனைவருக்கும் கால்சியம் சத்து உடலில் அவசியம் தேவைப்படுகிறது. குழந்தை பருவத்தில் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், பற்களின் உறுதிக்கும் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் முதுமை காலத்தில் எலும்புகளை காப்பாற்றவும் மற்றும் எலும்பு நோய்கள் வராமல் தடுக்கவும் கால்சியம் தேவைப்படுகிறது.
இதுவும் உதவலாம் :தினமும் காலையில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
உணவியல் நிபுணர் கவிதா தேவ்கன் கூறுவது, பொதுவாக பெண்கள் தங்கள் வாழ்க்கையில் மாதவிடாய், கர்ப்பம் தரித்தல், பால் கொடுத்தல் மற்றும் மாதவிடாய் நின்று போதல் என்ற பல செயல்பாடுகளை சந்திக்கிறார்கள். மாதவிடாய் நிற்கும் காலத்தில் பெண்கள் உடலில் கால்சியம் சத்து குறைந்து கொண்டே போகிறது. ஆண்களை விட பெண்களுக்கு தான் கால்சியம் சத்து அதிகம் தேவைப்படுகிறது. ஏனென்றால் பெண்கள் வயது ஏற ஏற எலும்புகளின் பலத்தை தக்க வைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது
கால்சியம் நம் உடலை ஆரோக்கியமாகவும், திடமாகவும் வைத்து கொள்ள உதவும் ஒரு தாது. நம் உடலின் இரத்த ph அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. ஆனால் கால்சியம் சத்து குறைபாடு ஏற்படும் போது உடலில் இரத்த கட்டு ஏற்படுவது, சிறுநீரக கல், இரத்த அழுத்தம், அதிகப்படியாக இதய துடிப்பு, மலச்சிக்கல் ஆகிய பிரச்சினைகள் ஏற்படும். தொடர்ந்து நீண்ட காலமாக நம் உடலில் கால்சியம் சத்து குறைவாக இருக்கும் போது அது இதயத்தை பாதிக்கும் அபாயம் கூட ஏற்படலாம்.
உணவியல் நிபுணர் கவிதாவை பொறுத்தவரை, கால்சியம் சத்து உடலுக்கு கிடைக்க வேண்டும் என்று நீங்கள் அதிகமான உணவை உண்ண வேண்டும் என்று அவசியம் இல்லை. நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் மூன்று வேளை உணவிலும் ஒரு கால்சியம் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் காலையில் 1 கப் பால் குடிக்கலாம், பகலில் ஒரு கிண்ணம் தயிர் சாப்பிடலாம், இரவில் மறுபடியும் ஒரு கப் பருகலாம். இவ்வாறு செய்தால் கால்சியம் சத்து போதுமான அளவில் உங்கள் உடலுக்கு போய் சேர்ந்து விடும்.
பாலை தவிர இதை சேர்க்க உங்கள் உடலுக்கு கால்சியம் சத்து கிடைத்து விடும்.
உங்கள் உணவில் கால்சியத்துடன் சேர்த்து வைட்டமின் D எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனில் கால்சியம் சத்தை முறையாக உறிஞ்சி எடுக்க உடலுக்கு வைட்டமின் D சத்து தேவைப்படுகிறது. வைட்டமின் D சத்து இல்லாமல் போனால், உடலால் கால்சியத்தை உறிஞ்ச முடியாமல் அவற்றை வெளியேற்றி விடும். தினமும் காலை 10 - 15 நிமிடம் வரை சூரிய ஒளியில் நிற்பதால் உடலுக்கு வைட்டமின் D சத்து கிடைக்கிறது. இதனால் கால்சியம் சத்து வெளியேறாமல் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது.
இதுவும் உதவலாம் :உடல் எடையை குறைக்க பச்சைப் பயிரை எவ்வாறு பயன்படுத்துவது?
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]