herzindagi
hyper tension causes symptoms

World Hypertension Day: உயர் இரத்த அழுத்தம் ஏற்பட காரணம் என்ன? இதன் அறிகுறிகளை அறிந்து தீர்வு காண்போம்!

மோசமான வாழ்க்கை முறை, மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் உயர் அழுத்தம் ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்…
Expert
Updated:- 2023-05-16, 09:44 IST

உயர் இரத்த அழுத்தத்தை ஹைப்பர் டென்ஷன் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். உயர் இரத்த அழுத்தம் தொடரும் பொழுது இதய செயலிழப்பு, தமனிகளில் அடைப்பு போன்ற ஆபத்தான விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் இதன் அறிகுறிகளை கண்டறிந்து உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

உயர் இரத்த அழுத்தம் குறித்து உலகிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 17ஆம் தேதி 'உலக உயர் இரத்த அழுத்தம் தினம்' கொண்டாடப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்க உதவும் அற்புத பானம்

உயர் இரத்த அழுத்தத்திற்கான காரணங்கள்

causes of hyper tension

  • அதிக உடல் எடை அல்லது உடல் பருமன்
  • உணவில் கூடுதல் உப்பு சேர்த்து சாப்பிடுவது.
  • உடலில் கூடுதலாக உள்ள சோடியம்.
  • குறைந்த உடல் செயல்பாடு
  • புகை பிடித்தல்
  • மன அழுத்தம்

உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள்

  • உயர் இரத்த அழுத்தம் இருப்பதை பின்வரும் அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். இருப்பினும் உறுதி செய்ய மருத்துவ பரிசோதனை அவசியம்.
  • அடிக்கடி கடுமையான தலைவலி, தலை சுற்றல்
  • மூக்கில் இரத்தம் வடிதல்
  • சோர்வு மற்றும் பலவீனம்
  • தெளிவாக சிந்திக்கும் திறன் குறைதல், மிகுந்த பதட்டம் அல்லது குழப்பம்.
  • மார்பில் வலி
  • சீரற்ற இதயத்துடிப்பு மற்றும் சுவாசிப்பதில் சிரமம்
  • இரத்தத்தில் சிறுநீர்
  • வியர்வை அல்லது வியர்த்தல்
  • தலைச்சுற்றல் அல்லது தலைச்சுற்றலை எதிர்கொள்வது
  • தூங்குவது சிரமம்
  • கண்ணில் இரத்தப் புள்ளிகள்

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான சில எளிய குறிப்புகளை உணவியல் நிபுணர் நேஹா மகாஜன் அவர்கள் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

wallking to control high bp

உடற்பயிற்சி /நடைப்பயிற்சி

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் வழக்கமான உடற்பயிற்சி மூலம் உயர் இரத்த அழுத்தத்தை பெருமளவு கட்டுப்படுத்தலாம். உங்களுக்கு தினமும் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா? கவலை வேண்டாம், தினமும் மூன்று முறை குறைந்தது 10 நிமிடங்கள் ஆவது நடைப்பயிற்சி செய்ய முயற்சிக்கவும். இதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கலாம். அதுமட்டுமின்றி நடை பயிற்சி மூலம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் பெற முடியும்.

உணவுமுறை

உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் தங்களுடைய உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் உணவு ஆரோக்கியத்தில் நேரடி விளைவை ஏற்படுத்தும். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் குறைந்த கொழுப்பு உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். அதேசமயம் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த ஆலிவ் எண்ணெய், நட்ஸ் போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ள பழங்கள், காய்கறிகள் மற்றும் பச்சை இலை காய்கறிகளை சாப்பிட வேண்டும். இதனுடன் உப்பின் அளவுகளை குறைத்து சரியான அளவுகளில் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

healthy foods to eat for high bp

மன அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்களில் மன அழுத்தமும் ஒன்றாகும். ஆகையால் உயிர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த விரும்புபவர்கள் மன அழுத்தத்தை விட்டு விலகி நிற்பது நல்லது. இதிலிருந்து விடுபட யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை செய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க கிச்சடி சாப்பிடலாம் தெரியுமா?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]