எல்லா பெண்களுக்கும் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். உடல் எடையை பராமரிப்பது அழகு சார்ந்த விஷயம் மட்டுமல்ல, இது ஆரோக்கியம் சார்ந்ததும் கூட. பெண்கள் தங்களுடைய உடல் எடையை குறைக்க ஜிம்மிற்கு செல்வது, சப்ளிமெண்ட்கள் எடுத்துக் கொள்வது போன்ற பல விஷயங்களை செய்கிறார்கள். இருப்பினும் இவை சிறந்த பலன்களை தராத போது ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது.
கவலை வேண்டாம் உங்கள் உடல் எடையை குறைப்பதற்கான ஒரு சுலபமான வழியை இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம். இதை பின்பற்றி உங்களால் உடல் எடையை சுலபமாக குறைக்க முடியும். இதற்கு உதவக் கூடிய ஒரு அற்புதமான பானத்தை ஆயுர்வேத மருத்துவரான அப்ரார் முல்தானி அவர்கள் பகிர்ந்துள்ளார். இந்தப் பானத்தை குடித்து வந்தால் வெறும் 7 நாட்களில் உங்களுடைய உடல் எடையை குறைக்க முடியும். இதன் விளைவுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த பானத்தை குடித்து நீங்களும் பயனடையலாம்.
இந்த பதிவும் உதவலாம்: மூளையின் ஆரோக்கியத்தை காக்கும் அற்புத மூலிகைகள்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து(1 கப்) நன்கு அரைத்துக் கொள்ளவும். இதனை 7 கிளாஸ் தண்ணீருடன் கலந்து இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும். காலையில் எழுந்தவுடன் இதிலிருந்து ஒரு கிளாஸ் தண்ணீரை குடிக்கலாம். இதே முறையை பின்பற்றி வாரத்தில் ஏழு நாட்களுக்கு தண்ணீர் செய்து குடிக்கவும். இதை தொடங்குவதற்கு முன் உங்களுடைய உடல் எடையை சரி பார்க்க மறுக்காதீர்கள். ஏழு நாட்கள் கழித்து உங்களுடைய உடல் எடையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த தண்ணீர் உங்கள் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை அகற்றவும், கொழுப்பை குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும். இதில் குறைந்த அளவு கலோரிகள் மட்டுமே உள்ளன. ஆனால் வைட்டமின்களும், தாதுக்களும், ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன. இதில் சேர்க்கப்பட்டுள்ள வெள்ளரி பசி ஆர்வத்தை கட்டுப்படுத்தும். இதில் உள்ள இஞ்சி வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி எடை இழப்புக்கு உதவும்.
இந்த தண்ணீரை குடிப்பதால் உங்களுக்கு நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. இதன்மூலம் ஆரோக்கியமற்ற உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கலாம். மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள எலுமிச்சையின் பண்புகள் உடல் எடையை குறைக்க உதவும். வைட்டமின் C நிறைந்த எலுமிச்சை உங்கள் வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்கும். குறைந்த கல்லூரி உடைய புதினாவும் எடை இழப்புக்கு சிறந்தது. இந்தப் பானம் உங்கள் செரிமானத்தை மேம்படுத்தி, உடலின் கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
அல்சர், மூலம் அல்லது மூக்கில் இரத்தக் கசிவு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த தண்ணீரை குடிக்கக்கூடாது. மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களும், கர்ப்பிணிகளும் இந்த தண்ணீரை குடிக்க வேண்டாம்.
இந்த பதிவும் உதவலாம்: தைராய்டை கட்டுப்படுத்த வேண்டுமா? இந்த 3 உணவுகளை தினமும் சாப்பிடுங்கள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]