herzindagi
list of herbs for brain health by expert

Brain Health : மூளையின் ஆரோக்கியத்தை காக்கும் அற்புத மூலிகைகள்

மூளை மற்றும் மன ஆரோக்கியத்தை காத்திட இப்பதிவில் பகிரப்பட்டுள்ள மூலிகைகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துகொள்ளலாம்…
Expert
Updated:- 2023-05-15, 09:44 IST

உடல் ஆரோக்கியமாக இருக்க மன ஆரோக்கியத்தையும் பேணி காக்க வேண்டும். ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ளவும், யோசிக்கவும், சிந்தித்து செயல்படவும், நல்ல நினைவாற்றலுடன் இருக்கவும் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். நம்மில் பலரும் உடல் ஆரோக்கியத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மூளையின் ஆரோக்கியத்திற்கு கொடுப்பதில்லை. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவு மூளையையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது முக்கியம். மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்கக் கூடிய சில அற்புத மூலிகைகளை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த மூலிகைகள் குறித்த தகவல்களை உணவியல் நிபுணரான ரித்திமா பத்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நிபுணர் பரிந்துரை செய்த மூலிகைகளை இப்போது பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: எள்ளுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா!

குங்குமப்பூ

saffron for brain health

இது உணவிற்கு நல்ல சுவையையும் நிறத்தையும் கொடுப்பதோடு மட்டுமின்றி மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவும். குறிப்பாக மனுச்சோர்வு பிரச்சனைக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கு மனச்சோர்வின் அறிகுறிகள் இருந்தால், உங்கள் அன்றாட உணவில் குங்குமப்பூவை சேர்த்து பயன்பெறலாம்.

ரோஸ்மேரி

இந்து அற்புதம் மூலிகை மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது நினைவாற்றலை மேம்படுத்த உதவும். உங்களுக்கு ஏதேனும் ஒரு செயலில் கவனத்துடன் ஈடுபட கடினமாக இருந்தால் ரோஸ்மேரியை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

எலுமிச்சை தைலம்

இந்த மூலிகை மூளையின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது மனு அழுத்தத்தை குறைத்து மனநிலையை மேம்படுத்த உதவும். இந்த தைலத்தில் மன அழுத்தத்தை எதிர்த்து போராட உதவும் பண்புகள் ஏராளமாக உள்ளன.

கிரீன் டீ

green tea for brain health

இது உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த பானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதைத் தவிர இது மூளையின் ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மைகளை தரும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது பதட்டத்தை குறைத்து நினைவாற்றலை மேம்படுத்த உதவும். கிரீன் டீ குடித்து வர உங்களுடைய கவனம் செலுத்தும் திறனும் மேம்படும்.

வல்லாரைக் கீரை

இது மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வல்லாரைக் கீரை சாப்பிட்டு வர நினைவாற்றல் மேம்படும். இதனுடன் மூளையின் செல்களை பராமரிக்கவும் வல்லாரை உதவும்.

இந்த பதிவும் உதவலாம்: உடல் சூட்டை தணிக்க இந்த 3 தண்ணீரை முயற்சி செய்யவும்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]