herzindagi
jaggery sesame health benefits

Sesame with Jaggery Benefits : எள்ளுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா!

உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட விரும்பினால், எள்ளுடன் சிறிதளவு வெல்லம் சேர்த்து சாப்பிடலாம்…
Editorial
Updated:- 2023-05-12, 22:42 IST

எள்ளும், வெல்லமும் சூடான விளைவுகளை கொண்டவை. இவ்விரண்டிலும் தனித்துவமான சுவையும், மணமும் இருக்கும். ஒரு சில உணவுகளின் தயாரிப்பிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. இவை உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன. இதய ஆரோக்கியத்தை பராமரிப்பது முதல் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவது வரை, எள் மற்றும் வெல்லம் உடலுக்கு ஏராளமான நன்மைகளை தருகின்றன.

எள்ளும், வெல்லமும் ஆயுர்வேதத்துடன் தொடர்புடையவை. இவ்விரண்டு பொருட்களையும் பயன்படுத்தி செய்யப்படும் எள்ளுருண்டைகளை நாம் அனைவரும் சாப்பிட்டு இருப்போம். இந்த எள் மற்றும் வெல்லம் தரும் ஆரோக்கிய நன்மைகளை உணவியல் நிபுணரான ஷிகா ஏ ஷர்மா அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.

இந்த பதிவும் உதவலாம்: உடல் சூட்டை தணிக்க இந்த 3 தண்ணீரை முயற்சி செய்யவும்!

நிறைவுறா கொழுப்பின் நல்ல ஆதாரம்

sesame jaggery benefits for womrn

எள்ளில் நிறைவுறா கொழுப்பு நிறைந்துள்ளது. இந்த வகை கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை சாப்பிடுவதால் உடலுடன் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும். எள் மற்றும் வெல்லத்தை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதன் மூலம் இருதய நோய்களின் அபாயத்தை குறைக்கலாம்.

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்

எள் மற்றும் வெல்லம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் . இதனை சரியான அளவுகளில் எடுத்துக்கொள்ளும் பொழுது சிறந்த பலன்களை பெறலாம். இருப்பினும் சர்க்கரை நோயாளிகள் இதை அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது. இல்லை எனில் இரத்த சர்க்கரையின் அளவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

கொலஸ்ட்ராலை குறைக்கும்

கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் எள் மற்றும் வெல்லத்தை தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும். இது மருந்துக்கு மாற்று அல்ல, இருப்பினும் இக்கலவையை சாப்பிடுவது உடலில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் எடையை கட்டுப்படுத்த பெரிதும் உதவும்.

இரும்புச்சத்து நிறைந்தது

எள் மற்றும் வெல்ல கலவை இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இதை தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம். உடலில் ஆக்ஸிஜன் அளவை பராமரிக்கவும், இரத்த சோகையிலிருந்து விடுபடவும் இது உதவும். இது பெரியவர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் அதிக நன்மைகளை தரும்.

sesame jaggery benefits for health

எடை இழப்புக்கு உதவும்

எள் மற்றும் வெல்லத்தை ஒன்றாக சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும். இதனைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சிற்றுண்டியை நீங்கள் சாப்பிடலாம். இது உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை குறைத்து, எடை இழப்புக்கும் வழிவகுக்கும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் இக்கலவையை சிற்றுண்டியாக சாப்பிடலாம்.

எள் மற்றும் வெல்லத்தை சரியான அளவுகளில் எடுத்துக் கொண்டால் மிகச்சிறந்த நன்மைகளை பெற முடியும். அதேசமயம் அதிகமாக எடுத்துக் கொள்வதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களை செய்வதற்கு முன் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் டீடாக்ஸ் டயட் பிளான்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]