Infused Water for Summer : உடல் சூட்டை தணிக்க இந்த 3 தண்ணீரை முயற்சி செய்யவும்!

கோடை காலத்தில் உடலை உள்ளிருந்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கான இயற்கை வழிகளை இப்பதிவில் படித்தறியலாம்…

infused water to cool body

தலைவலி, வயிற்று வலி, சனி, இருமல் போன்ற பல உடல் நல பிரச்சனைகளுக்கு பாட்டி வைத்தியம் கை கொடுக்கும். இப்படி வீட்டில் கிடைக்கக்கூடிய சில எளிமையான பொருட்களை வைத்து பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். காலம் காலமாக இன்றளவும் இதுபோன்று வீட்டு வைத்தியங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகின்றன.

இயற்கையாக கிடைக்கக்கூடிய வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம். இதற்கு தண்ணீருடன் சேர்த்து ஒரு சில பொருட்களை கலந்து குடிக்க வேண்டும். இப்பதிவில் பகிரப்பட்டுள்ள தகவல்கள் யாவும் உணவியல் நிபுணரான ராதிகா கோயல் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்டது. தண்ணீரில் இந்த மூன்று பொருட்களை கலந்து குடிப்பதன் மூலம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் பெறலாம்.

தண்ணீருடன் ரோஜா இதழ்கள்

rose infused water for summer

கோடை காலத்தில் உடல் சூடு மற்றும் பருக்கள் அதிகரிக்கும். இதிலிருந்து விடுபட சில ரோஜா இதழ்களை தண்ணீருடன் சேர்த்து குடிக்கலாம். இரவு முழுவதும் இந்த நீரை ஊறவைத்து மறுநாள் காலையில் குடிக்க வேண்டும். ரோஜா இதழில் குளிர்விக்கும் பண்புகள் உள்ளன. இது உடல் சூட்டை தணித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும். உடலின் வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது வீக்கம் அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணரலாம். இந்த அறிகுறிகளை குறைக்கவும், பருக்கள் போன்ற சரும பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் ரோஜா இதழ் தண்ணீர் பயனளிக்கும்.

குங்குமப்பூ தண்ணீர்

சில குங்குமப்பூ இதழ்களை தண்ணீருடன் கலந்து குடித்து வந்தால் சருமம் பளபளப்பாகும். இதனுடன் நினைவாற்றலும் அதிகரிக்கும். குங்குமப்பூவை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் குடிக்கலாம். குங்குமப்பூவில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் சரும நிறத்தை மேம்படுத்தவும், சரும நிறத்தை சீராக வைத்துக் கொள்ளவும் உதவும்.

கருவேப்பிலை தண்ணீர்

curry leaf water for summer

நீளமான அடர்த்தியான மற்றும் வலுவான கூந்தல் பெற வேண்டுமா? சிறிதளவு கருவேப்பிலை பொடியை தண்ணீருடன் கலந்து தினமும் குடிக்கவும். புரோட்டீன், பீட்டா கரோட்டின் மற்றும் அமினோ அமிலங்கள் கறிவேப்பிலையில் நிறைந்துள்ளன. இவை முடியை வலுப்படுத்தி, முடி உடைவதை தடுக்க உதவுகின்றன. இந்த நீர் செய்வதற்கு கருவேப்பிலையை இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த நீரை தொடர்ந்து குடித்து வர ஒரு சில நாட்களிலேயே நல்ல முன்னேற்றங்களை பார்க்கலாம். இது உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இந்த பதிவும் உதவலாம்: உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் டீடாக்ஸ் டயட் பிளான்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP