தொடர்ச்சியாக மூக்கடைப்பு ஏற்படுகிறதா ? வீட்டு வைத்தியத்தில் குணப்படுத்தலாம்

சளி இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிலருக்கு எப்போதுமே மூக்கடைப்பு ஏற்படும். இதை வீட்டிலேயே குணப்படுத்தலாமா ? இந்த கட்டுரையில் உங்களுக்கான பதில்

nasal congestion

எந்த சீசனாக இருந்தாலும் சிலருக்கு மூக்கடைப்பு பிரச்சினை நீடித்து கொண்டே இருக்கும். நிறைய பேருக்கு மூக்கு அடைப்பு என்றவுடன் மூக்கிற்குள் சளி சேர்ந்திருக்கிறது என நினைக்கிறோம். சிந்தி எடுத்தால் மூக்கடைப்பு குணமாகும் என நம்புகிறோம். ஆனால் இது தவறு. மூக்கடைப்பு என்பது மூக்கிற்குள் சளி சேர்ந்தால் ஏற்படும் விஷயம் கிடையாது. மூக்கிற்குள் நாசி சளி (Nasal mucosa) என்ற பகுதி உள்ளது. சளி பிடிக்கும் போது இந்த நாசி சளி பகுதி வீங்கி மூச்சு விடும் பாதை அடைத்துவிடும். இதனால் மூக்கடைப்பு ஏற்படுகிறது. மூக்கடைப்பு ஏற்பட சளியின் காரணம் 30 விழுக்காடு மட்டுமே. மீதி 70 விழுக்காடு நாசி சளி பகுதி வீங்குவது தான் முழுக் காரணம். மூக்கை சிந்தி சிந்தி மூக்கடைப்பை சரி செய்யலாம் என நினைப்பது தவறு.

மூக்கிற்குள் இருக்கும் சளி நீங்கினால் மட்டும் மூக்கடைப்பு பிரச்சினையில் இருந்து விடுபட முடியாது. எப்போது சளி பிடித்தாலும் மூக்கு அடைப்பில் இருந்து விடுபட சிந்தி சளி எடுக்க வேண்டிய தேவையில்லை. சிந்தி சிந்தி எடுத்தால் மூக்கிற்குள் தொற்று பரவி சில சமயங்களில் காயம் உண்டாகும். தொடர்ந்து மூக்கடைப்பு இருந்தால் என்ன செய்ய வேண்டும், காரணங்கள் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

வழக்கமாக மருந்து கடைகளில் கிடைக்கும் சொட்டு மருந்துகளை மூக்கில் செலுத்தினால் மூக்கு அடைப்பு அரை மணி நேரத்தில் சரியாகிவிடும். இதற்கு வீட்டு வைத்தியமும் உள்ளது. சுத்தமான தண்ணீரில் கொஞ்சம் உப்பு போட்டு அதை மூக்கிற்குள் மூன்று சொட்டு அளவிற்கு செலுத்தினால் மூக்கடைப்பு சரியாகும். நாசி சளி வீக்கம் குறைந்தால் மட்டும் மூக்கடைப்பு பிரச்சினையில் இருந்து விடுபட முடியும்.

இதன் பிறகும் தொடர்ந்து மூக்கடைப்பு இருந்தால் அதன் பின்னணி காரணத்தை அறிய வேண்டும். குழந்தைகள், பெரியவர்கள் அனைவருக்குமே மூக்கடைப்பு இருந்தால் அது ஒரு அலர்ஜியின் காரணமாக இருக்கலாம். இதற்கு சாதாரண சொட்டு மருந்து ஊற்றுவது பயன் தராது.

மேலும் படிங்கவைட்டமின் டி குறைபாடா ? தினமும் இந்த உணவுகளை சாப்பிடுங்க

அதேபோல மூக்கின் பின் பகுதியில் அடினாய் என்ற சுர்ப்பி இருக்கும். இந்த சுரப்பி வீங்கினாலும் நமக்கு மூக்கு அடைப்பு பிரச்சினை ஏற்படும். சிலருக்கு மூச்சுக்குழாயின் ஒரு பக்கம் மட்டுமே அடைப்பு இருக்கும். நமகு மூக்கின் தண்டு வடம் வளைந்த நிலையில் இருப்பது இதற்கான் காரணமாகும். இதற்கு நாம் சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். காது மூக்கு தொண்டை நிபுணரை அணுகி பயன் பெறலாம்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP