herzindagi
foods rich in vitamin d

வைட்டமின் டி குறைபாடா ? தினமும் இந்த உணவுகளை சாப்பிடுங்க

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியத்தை விட வைட்டமின் டி மிகவும் அத்தியாவசியமானது. வைட்டமின் டி குறைபாட்டை தவிர்க்க சாப்பிட வேண்டிய உணவுகளின் பட்டியல் இதோ…
Editorial
Updated:- 2024-03-27, 09:32 IST

உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க தேவையான பல வைட்டமின்களில் வைட்டமின் டி ஒன்றாகும். இரத்தம் மற்றும் எலும்புகளில் கால்சியத்தின் சமநிலையை பராமரிப்பதிலும், எலும்புகளின் அடர்த்தியிலும் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் உடலில் வலுவான எலும்புகள்,  ஆரோக்கியமான திசுக்களை உருவாக்க கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் பயன்படுகின்றன. வைட்டமின் டி குறைபாடு எலும்பு அடர்த்தியை இழக்க வழிவகுக்கும் இது ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவுகளுக்கு பங்களிக்கும். எனவே வைட்டமின் டி எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.

வைட்டமின் டி குறைபாடு & சிக்கல்கள்

  • வளைந்த எலும்புகள்,
  • தசை பலவீனம்,
  • எலும்பு வலி,
  • தொடர் மூட்டு வலி

foods to boost vitamin d

காளான்

காளான் வைட்டமின் டி-ன் சிறந்த மூலமாகும். இது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கும் மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பால் வகைகள் & பொருட்கள்

சோயா பால், பாதாம் பால் மற்றும் ஓட்ஸ் பால் பொதுவாக வைட்டமின் டி சத்தால் செறிவூட்டப்பட்டவை. இவற்றை உங்கள் வழக்கமான உணவில் சேர்த்துக்கொள்வது வைட்டமின் டி உட்கொள்ளலுக்கு பங்களிக்கும். டோஃபு மற்றும் சோயா துகள்களில் கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை நிறைந்துள்ளன. உடலில் வைட்டமின் டி அளவை அதிகரிக்க யோகர்ட்டை உணவு பழக்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

பன்னீர்

பன்னீர் வைட்டமின் டி மற்றும் கால்சியத்தின் நல்ல மூலமாகும், இது எலும்புகளை வலுவாக்கும் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்கவும் உதவும்.

கேரட் ஜூஸ்

அதிக வைட்டமின் டி உள்ளடக்கம் காரணமாக கேரட் ஜூஸ் ஆரோக்கியமான கண்பார்வைக்கு ஆதரிக்கிறது.

சால்மன் மீன்

அதிக கொழுப்பு உள்ளடக்கம் இருப்பதால் சால்மன் மீன் வைட்டமின் டி-ன் சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது. காய்கறிகள், பழங்கள், பால் அல்லது முட்டை சாப்பிட விரும்பாதவர்களுக்கு இது சரியான வழி.

மேலும் படிங்க புரத உணவுகளை அதிகம் சாப்பிடாதீங்க! பக்க விளைவுகள் ஏற்படும்

ஆரஞ்சு பழம்

ஆரஞ்சு பழத்தில் நல்ல அளவு வைட்டமின் டி உள்ளது. பால் பொருட்களை விரும்பாதவர்கள் தினமும் ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாம்.

கீரை

கீரையில் அதிக அளவு இரும்பு, நார்ச்சத்து மற்றும் கால்சியம் உள்ளது. எனவே இது காய்கறிகளில் வைட்டமின் டி-ன் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும்.

முட்டை

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், செலினியம் மற்றும் துத்தநாகம் போன்ற பல ஊட்டச்சத்துகள் இருப்பதால் முட்டைகளை உணவில் சேர்க்க வேண்டும்.

இதுபோன்ற உடல் ஆரோக்கியம் சார்ந்த கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]