நமது உடல் ஆரோக்கியத்தில் புரதச் சத்து உணவுகளும் முக்கிய பங்கு வகிப்பதால் அவற்றை தினமும் சரியான அளவில் உட்கொள்ள வேண்டும். நமது உடலின் ஒவ்வொரு செல்லிலும் புரதம் இருப்பதால் புரதம் சத்துச் உள்ள உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியத்தை பேணுவது அவசியம். தசை வளர்ச்சிக்கும், திசுக்கள் உருவாக்கத்திற்கும் புரதம் அவசியம். அதே போல ஹார்மோன் உற்பத்தி, நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு புரதச் சத்து தேவைப்படுகிறது. ஒரு நபர் தனது உடல் எடைக்கு ஏற்ப ஒரு கிலோவுக்கு ஒரு கிராம் புரதம் உட்கொள்ள வேண்டும். ஒரு நபரின் உயரம் 5 அடி 4 அங்குலம் என்றால் அவரது உயரத்திற்கு ஏற்ற எடை 59 கிலோ ஆகும். எனவே அந்த நபர் 59 கிராம் புரதத்தை உட்கொள்ள வேண்டும்.
ஆனால் விளையாட்டு வீரர்கள், பாடி பில்டர்கள் ஆகியோருக்கு புரதச் சத்து அதிகம் தேவைப்படுகிறது. உடற்பயிற்சியின் போது தசைகளை வலுப்படுத்த புரதம் முதன்மையாக பயன்படுகிறது. எனவே அவர்கள் உட்கொள்ளும் உணவில் இரண்டு கிராம் அளவிற்கு புரதம் இருக்க வேண்டும். மேலும் விளையாட்டின் வகையைப் பொறுத்து தேவை அதிகரிக்கலாம்.
சோயா பீன்ஸ், பருப்பு, கொண்டைக்கடலை, பீன்ஸ், பச்சை பட்டாணி, பால் மற்றும் பால் பொருட்கள்.
கோழி, வான்கோழி, மாட்டிறைச்சி, பன்றி, மீன்.
நம் உடலுக்கு தேவையான அளவு புரதச்சத்து மட்டுமே உட்கொள்ள வேண்டும். அதிகமான புரசத் சத்து உட்கொண்டால் உடலில் பல பிரச்சினைகள் ஏற்படும்.
மேலும் படிங்க சமைத்த எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தலாமா ? கூடாதா ?
ஆரம்பத்தில் புரத உணவுகள் எடை இழப்பை ஊக்குவிக்கலாம். ஆனால் அது குறுகிய காலத்திற்கு மட்டுமே. அதிகப்படியான புரதம் உடலில் கொழுப்பாக சேமிக்கப்படும். இது காலப்போக்கில் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
அதிக புரத உணவுகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும். அதிக புரதம் சாப்பிடுவது ஏற்கனவே சிறுநீரக நோய் உள்ளவர்களையும் பாதிக்கும். புரதங்களை உருவாக்கும் அமினோ அமிலங்களில் அதிகப்படியான நைட்ரஜன் இருப்பதால் இது ஏற்படுகிறது.
அதிக புரத உணவுகளின் ஒரு பகுதியாக சிவப்பு இறைச்சி மற்றும் முழு கொழுப்புள்ள பால் உணவுகளை சாப்பிடுவது இதய நோய்க்கு வழிவகுக்கும்.
அதிக புரத உணவுகள் புற்றுநோயின் பாதிப்புடன் தொடர்புடையவை. புரத நுகர்வுக்கு இறைச்சி சாப்பிடுவது இதன் பின்னணி ஆகும். இது நாளடைவில் பெருங்குடல், மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
மேலும் படிங்க புரதச்சத்து குறைபாடா ? நீங்கள் சாப்பிட வேண்டிய சைவ, அசைவ உணவுகள்
அதிக புரத உணவை எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுகிறது. புரத உணவுகளில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் இது ஏற்படுகிறது. அதேநேரம் அதிகளவு புரத உணவுகளை சாப்பிடுவது வாய் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும். மூச்சு விடும் போது இதை உங்களால் உணர முடியும்.
புரத உணவுகளை அதிகளவு உட்கொள்ளும் முன் அதன் விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள். அதிக புரதம் உட்கொள்வது சிலருக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தாது. புரத உணவுமுறைக்கு மாறிய பின் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]