வீட்டில் சமைக்கும் மகளிர் அனைவருக்குமே பொதுவான ஒரு கேள்வி இருக்கும். பொரித்த எண்ணெய்யை மறு உபயோகம் செய்யலாமா ? கூடாதா ? அப்படி செய்தால் உடலுக்குப் பாதிப்புகள் ஏற்படுமா என குழப்பமும் உண்டாகும். முதலில் உணவை எண்ணெய்யில் பொறிக்கும் போது என்ன நடக்கிறது என்று தெரிய வேண்டும்.
உணவை பொறிக்கும் போது அதில் இருக்கும் கார்போஹைட்ரேட்கள், புரதம் ஆகியவை உடைந்து அதன் தன்மை வேறு விதமாக மாறும். இதற்கு ஆங்கிலத்தில் Maillard எதிர்வினை எனப் பெயர். இந்த எதிர்வினை நடப்பதான் தான் பொறிக்கும் உணவு மொறுமொறுப்பாக மாறுகிறது. ஆனால் அதிகமாகப் பொரித்துவிட்டால் கருகிவிடும். தீயை அதிகமாக வைத்து பொறிக்கும் போது எண்ணெய்யில் பல மாற்றங்கள் நடக்கும். பொறிக்கும் உணவின் தாக்கமும் எண்ணேய்யில் சேர்ந்து இருக்கும்.
பொரித்த எண்ணெய்யில் TRANS FAT உருவாகும். இது இயற்கையான கொழுப்பு அல்ல. எண்ணெய்யை சூடுபடுத்தும் போது அதில் நடக்கக் கூடிய எதிர்வினை மூலம் வெளியேறும் வேதிப்பொருட்கள் எண்ணெய்யில் தங்கிவிடுகிறது. பயன்படுத்தியை எண்ணெய்யை திரும்பத் திரும்ப பயன்படுத்தும் போது புற்றுநோய்க்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.
இது தொடர்பாக எலிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்திய எண்ணெய்யை கொண்டு உணவு தயாரித்து அதை எலிகளுக்கு கொடுத்த போது அவற்றுக்கு புற்றுநோய் வேகமாகப் பரவியுள்ளது. அப்படியென்றால் வீட்டில் பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தவே முடியாதா என்றால் அதற்கான விளக்கங்கள் இங்கே...
மேலும் படிங்கஉணவில் அதிக உப்பு பயன்படுத்தாதீங்க ! உடல் பாதிப்புகள் ஏராளம்
வீட்டில் சமைக்கும் போது எண்ணெய் பயன்படுத்தி பொரித்த பிறகு வெள்ளைத் துணியைக் கொண்டு வடிகட்டி பாட்டிலில் சேர்த்து வைக்கலாம். மீண்டும் அந்த எண்ணெய்யை பொறிப்பதற்கு பயன்படுத்தாமல் தோசை சுடும் போது ஊற்றுவதற்கும், சாதம் தாளிப்பதற்கும் பயன்படுத்தலாம். இதையும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே செய்யவும். அதன் பிறகு அந்த எண்ணெய்யை பயன்படுத்த வேண்டாம்.
இது பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்த பாதுகாப்பான முறையாகும். வறுப்பதற்கு நல்லெண்ணெய், கடலெண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்துவது நல்லது.
பெரிய உணவகங்களில் எண்ணெய் பயன்பாடு தொடர்பாக மத்திய அரசின் குடும்ப நல அமைச்சக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தின் கட்டுபாடுகள் இருக்கின்றன. உதாரணமாக ஒரு சிப்ஸ் உற்பத்தி நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். அங்கு சிப்ஸை தொடர்ந்து பொறிக்க எண்ணெய் பயன்படுத்தி கொண்டே இருப்பார்கள்.
மேலும் படிங்கநுரையீரல் திறனை அதிகரிக்கும் சுவாசப் பயிற்சிகள்
அப்படி இருக்கும் போது எண்ணெய்யில் total polar compound எனும் மொத்த துருவக் கலவை 25 விழுக்காட்டிற்கு மேல் இருக்க கூடாது. ஆனால் இந்த கட்டுப்பாட்டை சாலையோர கடைகள், சிறிய உணவுகங்கள், இனிப்பு கடைகளில் பின்பற்றுகிறார்களா என்றால் சந்தேகம் தான்.
இவை அனைத்தையும் விட பொரித்த உணவை அடிக்கடி சாப்பிடுவதும் உடலுக்கு நல்லதல்ல.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation