உடல் எடை அதிகரிக்கும் பொழுது அதன் தாக்கத்தை முழு உடலிலும் காணமுடியும். உடல் பருமனின் விளைவாக கை கால் வயிறு இடுப்பு மற்றும் உடலின் பிற பகுதிகளில் எடை அதிகரிக்கக்கூடும். இது போன்ற நிலையால் பலரும் இளம் வயதிலேயே வயதானவர் போல் தோற்றத்தை பெருகின்றனர். அழகு மற்றும் உடல் அமைப்பை தவிர்த்து இது பல உடல் நல பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. உடல் எடையை குறைப்பது எளிதானது அல்ல, இதற்கு சரியான உணவு மற்றும் உடற்பயிற்சி வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
உடல் எடையை குறைக்க முயற்சி செய்வதற்கு முன் உடல் எடை அதிகரிப்பதற்கான உண்மையான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள். உடலின் வெவ்வேறு பகுதிகளில் கொழுப்பு சேருவதற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். இது குறித்த தகவல்களை உணவியல் நிபுணரான சிம்ரன் கவுர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கைகள், வயிறு, இடுப்பு மற்றும் உடலின் மற்ற பாகங்களில் கொழுப்பு சேருவதற்கான காரணங்கள் மற்றும் அதை குறைபதற்கான முறைகளை தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: 15 நாட்களில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் 5 எளிய குறிப்புகள்!
அடிவயிற்று பகுதியை சுற்றி உள்ள பிடிவாதமான கொழுப்பை அகற்றுவது மிகவும் கடினம். ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறையால் வயிற்றை சுற்றியுள்ள பகுதிகளில் கொழுப்பு சேர்கிறது. இதைத் தவிர மன அழுத்தத்தின் காரணமாகவும் வயிற்றை சுற்றி கொழுப்பு சேரலாம். இதை ஸ்ட்ரெஸ் தொப்பை என்று அழைக்கிறார்கள். இதைக் குறைக்க உடலில் ஹார்மோன் அளவுகளை சீராக வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் இருந்து ஆரோக்கியமற்ற கொழுப்புகளை நீக்கிவிட்டு நல்ல கொழுப்புகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு சில உடற்பயிற்சிகள் செய்வதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
கைகளில் கொழுப்பு சேர்வதை எந்த பெண்ணும் விரும்புவதில்லை. உணவில் உள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையே இதற்கு காரணம். உங்கள் கைகளை சுற்றி உள்ள பகுதியில் அதிகமாக கொழுப்பு படிந்திருப்பது, நீங்கள் அதிக கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை உணர்த்துகிறது. எனவே கையில் உள்ள கொழுப்பை குறைக்க கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கவும். இதனுடன் கைகளுக்கான சில பயிற்சிகளையும் செய்யலாம்.
இடுப்பு பகுதிகளில் கொழுப்பு சேரும்பொழுது அது தோற்றத்தை பாதிக்கிறது. பெண்களின் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருக்கும் பொழுது இடுப்பு பகுதியில் கொழுப்பு சேர்கிறது. இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைக்க ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை சீராக்க வேண்டும். இதனுடன் பால் சார்ந்த பொருட்களின் உட்கொள்ளலையும் கட்டுப்படுத்த வேண்டும்
உடலில் ஏற்படும் புரதம் பற்றாக்குறையினால் இந்த பகுதிகளில் கொழுப்பு சேர்கிறது. உங்கள் உணவில் புரதத்தை சேர்ப்பதன் மூலம் அடிவயிறு மற்றும் கீழ் முதுகில் படிந்துள்ள கொழுப்பை குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: குறைவாக சாப்பிட்டாலும் தொப்பை மட்டும் குறையவில்லையா? இந்த பானத்தை ட்ரை பண்ணுங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]