herzindagi
Summer Cold big image

Summer Cold Diseases: கோடை காலத்தில் அடிக்கடி சளி பிடித்தால்... இந்த நோய்களுக்கான ஆபத்து இருக்கலாம்

கோடைக்காலத்தில் ஏசி அல்லது கூலரின் குளிர் காற்றை எதிர்கொள்ளும் போது உடல்நிலை மோசமடைந்தால் இந்த பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம்.
Editorial
Updated:- 2024-04-02, 18:10 IST

மாறிவரும் வானிலை மற்றும் வெப்பநிலைக்கு ஏற்ப குளிர்ச்சியாகவும் வெப்பமாகவும் இருப்பது இயல்பானது. ஆனால் ஒவ்வொரு பருவத்திலும் சாதாரண உடல் வெப்பநிலையை பராமரிப்பது சிக்கல்கள் ஏற்படுகிறது. உதாரணமாக சிலர் கோடையில் அல்லது சாதாரண நாட்களில் கூட குளிர்ச்சியாக உணர்கிறார்கள், அவர்கள் சிறிது குளிர்ச்சியை எதிர்கொண்ட பிறகு நோய்வாய்ப்படுகிறார்கள். உண்மையில் இது ஒரு தீவிரமான உடல்நலப் பிரச்சனை. இதனை மருத்துவத்தில் குளிர் சகிப்புத்தன்மை என்று அழைக்கப்படுகிறது.

மேலும் படிக்க: யோகா செய்வதற்கு முன் சாப்பிட வேண்டிய சிறந்த உணவுகள்

டாக்டர் பிரிஜேந்திர சிங், அசாதாரண உடல் வெப்பநிலை அல்லது குளிர்ச்சிக்கு அதிக உணர்திறனை உணருவது ஒரு உடல் பிரச்சனை என்று கூறுகிறார். அதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். வாழ்க்கைமுறையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் கூட இது நிகழலாம். இது தவிர உடலில் இரும்புச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உடலின் உணர்திறன் அதிகரிக்கும். இந்த காரணங்கள் மற்றும் அவற்றின் சிகிச்சை பற்றி பார்க்கலாம்.

ஹைப்போ தைராய்டு

thyroid inside

தைராய்டு உடல் வெப்பநிலையில் அசாதாரண மாற்றங்களை ஏற்படுத்துகிறது இதன் காரணமாக அதிக குளிர்ச்சியை உணரலாம்.  தைராய்டு சுரப்பியின் செயல்பாடு குறையும் போது மற்றும் தைராய்டு ஹார்மோன் போதுமான அளவு உற்பத்தி செய்யப்படவில்லை என்றால் இப்படி நிகழும். இதன் காரணமாக  குளிர், சோர்வு, மன அழுத்தம் மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். 

இதயத் துடிப்பு இயல்பை விட மெதுவாக மாறும் இதன் காரணமாக நபர் சோர்வாகவும் குளிர்ச்சியாகவும் உணர்கிறார். எனவே வழக்கத்திற்கு மாறாக குளிர்ச்சியாக உணர்ந்தால் கண்டிப்பாக தைராய்டை பரிசோதித்து பார்ப்பது நல்லது.

இரும்புச்சத்து குறைபாடு

இரும்புச்சத்து குறைபாட்டால் உடல் வெப்பநிலை இயல்பை விட குறைய வாய்ப்புகள் உள்ளது. இரும்புச் சத்து குறைபாட்டால் உடலில் ஹீமோகுளோபின் உற்பத்தி குறைகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் ரத்தப் பற்றாக்குறையால் உடலில் சோர்வு, பலவீனம் போன்ற பிரச்னை ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் ஒரு நபரால் சாதாரண வெப்பநிலையில் கூட குளிர்ச்சியை உணர முடியும். அதனால் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதனால் இரும்புச்சத்து மற்றும் இரத்தக் குறைபாட்டை ஈடுசெய்ய முடியும்.

கொழுப்புச் சத்து குறைபடு

thyroid inside

உடலில் கொழுப்புச் சத்து குறைவாக இருந்தால் அதிக குளிர்ச்சியை உணர காரணமாக இருக்கலாம். பெரும்பாலான மக்கள் கொழுப்பை மோசமானதாகக் கருதுகின்றனர். ஆனால் நாம் ஆரோக்கியமாக இருக்க உடலில் குறிப்பிட்ட அளவு கொழுப்பு இருப்பதும் அவசியம். கொழுப்பு இல்லாததால் உடலில் சோர்வு மற்றும் வெப்பநிலையில் மாற்றங்கள் காணப்படலாம். எனவே உடலில் கொழுப்பு குறைபாடு இருந்தால் அதை நீங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

கொழுப்பின் பற்றாக்குறையை ஈடுசெய்ய, உங்கள் உணவில் ஆரோக்கியமான கொழுப்புகளைச் சேர்க்க வேண்டும். இதற்கு அவகேடோ, மீன், வேர்க்கடலை, சோயாபீன், ஆலிவ் எண்ணெய் போன்ற உணவுகளை உட்கொள்ளலாம்.

மேலும் படிக்க: அடடா.! இத்தனை மருத்துவ அதிசயங்களா வாழைக்காயில்

இந்த உடல்நலம் தொடர்பான தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் பேஸ்புக்கில் ஷேர் செய்து லைக் செய்யுங்கள். இதே போன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும். 

 

Image Credit- freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]